எகிறும் டிமாண்ட்... கார் உற்பத்தியை 5 மடங்கு உயர்த்தியது ஹூண்டாய்!

டிமான்ட் அதிகரித்து வருவதையடுத்து, சென்னை ஆலையில் கார் உற்பத்தியை 5 மடங்கு உயர்த்தி உள்ளது ஹூண்டாய் மோட்டார் நிறுவனம்.

கார் உற்பத்தியை 5 மடங்கு உயர்த்தியது ஹூண்டாய்!

கொரோனா பிரச்னையால் கடந்த மார்ச் 24ந் தேதி முதல் சென்னை கார் ஆலையில் உற்பத்தியை அடியோடு நிறுத்தி வைத்திருந்தது ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம். கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் ஆலை மூடப்பட்டதால், பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. ஹூண்டாய் நிர்வாகத்திற்கும், பணியாளர்களுக்கும், டீலர்களுக்கும் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

கார் உற்பத்தியை 5 மடங்கு உயர்த்தியது ஹூண்டாய்!

இந்த நிலையில், கடந்த மே மாதம் முதல் வாரத்தில் இருந்து கொரோனா தொற்று குறைவான பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருவதுடன், தொழில் நிறுவனங்கள் இழப்பை ஈடுகட்டும் வகையில் குறைந்த அளவு பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டது.

கார் உற்பத்தியை 5 மடங்கு உயர்த்தியது ஹூண்டாய்!

இந்த சூழலில், சென்னையில் உள்ள ஹூண்டாய் கார் ஆலையிலும் கடந்த மே மாதம் முதல் வாரத்தில் இருந்து குறைந்த அளவு பணியாளர்களுடன் உற்பத்தி துவங்கப்பட்டது. தினசரி 200 கார்கள் என்ற இலக்குடன் உற்பத்தி நடந்து வந்தது.

கார் உற்பத்தியை 5 மடங்கு உயர்த்தியது ஹூண்டாய்!

இந்த நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பெரும்பாலான ஹூண்டாய் கார் ஷோரூம்கள் திறக்கப்பட்டதுடன், ஆன்லைன் மூலமாகவும் கார் விற்பனை நடைமுறைகள் எளிதாக்கப்பட்டன. இதனால், முன்பதிவு அதிகரிக்கத் துவங்கி இருக்கிறது.

கார் உற்பத்தியை 5 மடங்கு உயர்த்தியது ஹூண்டாய்!

மேலும், ஏற்றுமதி தேவையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, க்ரெட்டா, வெனியூ, வெர்னா உள்ளிட்ட கார்களுக்கு அதிக அளவில் முன்பதிவு செய்யப்படுகிறது. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தேவை அதிகரித்து வருவதையடுத்து உற்பத்தியையும் அதிகரித்துள்ளது ஹூண்டாய்.

கார் உற்பத்தியை 5 மடங்கு உயர்த்தியது ஹூண்டாய்!

கடந்த மாதம் நாள் ஒன்றுக்கு 200 கார்கள் என்ற அளவில் இருந்த தினசரி உற்பத்தி தற்போது நாள் ஒன்றுக்கு 1,000 கார்களுக்கு மேல் என்ற அளவில் உயர்த்தப்பட்டுள்ளதாக ஃபைனான்ஸியல் எக்ஸ்பிரஸ் தள செய்தி தெரிவிக்கிறது.

கார் உற்பத்தியை 5 மடங்கு உயர்த்தியது ஹூண்டாய்!

தற்போது ஆலையில் 7,500 முதல் 8,000 பணியாளர்கள் இரண்டு ஷிஃப்ட்டுகளில் உற்பத்திப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மொத்தம் 15,000 பணியாளர்களில் 50 சதவீத பணியாளர் எண்ணிக்கையுடன் தற்போது பணிகளை மீட்டெடுத்து வருவதாக அந்நிறுவன வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

கார் உற்பத்தியை 5 மடங்கு உயர்த்தியது ஹூண்டாய்!

கடந்த மாதம் உள்நாட்டில் 6,883 கார்களையும், 5,700 கார்களை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துள்ளதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில், இது பன்மடங்கு குறைவு என்றாலும், விற்பனையை இந்த இக்கட்டான தருணத்தில் இருந்து மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஹூண்டாய் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாகவே கருதப்படுகிறது.

Most Read Articles
English summary
South Korean car manufacturer, Hyundai is said to have ramped up productions at its manufacturing facilities in India. Hyundai is now said to be churning out more than 1000 vehicles on a daily basis, to meet the rising demands for their products in the Indian market.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X