ஹூண்டாய் கார்களுக்கு சிறப்பு கடன் திட்டங்கள் அறிமுகம்

கொரோனா பாதிப்பால் அச்சத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும் விதத்தில், எச்டிஎஃப்சி வங்கியுடன் இணைந்து தனது கார்களுக்கு சிறப்பு கடன் திட்டங்களை வழங்குவதாக ஹூண்டாய் அறிவித்துள்ளது.

ஹூண்டாய் கார்களுக்கு சிறப்பு கடன் திட்டங்கள் அறிமுகம்

கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து வரும் இவ்வேளையில், கார் விற்பனையை உந்தி எழுப்புவதற்கான முயற்சிகளில் கார் நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. குறைவான மாதத் தவணை திட்டங்கள், சிறப்பு தள்ளுபடி திட்டங்கள் என தினம் ஒரு அறிவிப்பை கார் நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.

ஹூண்டாய் கார்களுக்கு சிறப்பு கடன் திட்டங்கள் அறிமுகம்

இந்த வரிசையில் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் பல சிறப்பு திட்டங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. தள்ளுபடி சலுகைகள், ஆன்லைன் மூலமாக கார் வாங்கும் திட்டம், கடன் திட்டங்கள் என அனைத்து வகையிலும் கார் விற்பனையை அதிகரிக்கும் முயற்சிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

ஹூண்டாய் கார்களுக்கு சிறப்பு கடன் திட்டங்கள் அறிமுகம்

மேலும், Click To Buy என்ற பெயரில் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்து புதிய காரை வாடிக்கையாளர்கள் எளிதாக வாங்கும் திட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 9 லட்சம் பேர் இந்த தளத்தை பார்வையிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹூண்டாய் கார்களுக்கு சிறப்பு கடன் திட்டங்கள் அறிமுகம்

மேலும், 17,000 பேர் Click To Buy முறையில் ஆன்லைன் மூலமாக தனது புதிய கார்களை முன்பதிவு செய்துள்ளதாகவும் ஹூண்டாய் தெரிவிக்கிறது. மேலும், இந்த ஆன்லைன் மூலமாக கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக மேலும் ஒரு புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டு இருக்கிறது ஹூண்டாய்.

ஹூண்டாய் கார்களுக்கு சிறப்பு கடன் திட்டங்கள் அறிமுகம்

எச்டிஎஃப்சி வங்கியுடன் இணைந்து சிறப்பு கடன் திட்டத்தை ஹூண்டாய் அறிவித்துள்ளது. அதாவது, Click To Buy முறையில் இணையதளம் மூலமாக தனது புதிய கார்களை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் எளிதாக கடன் பெறும் வகையில் இந்த சிறப்பு திட்டம் அமையும்.

ஹூண்டாய் கார்களுக்கு சிறப்பு கடன் திட்டங்கள் அறிமுகம்

எச்டிஎஃப்சி வங்கிக் கிளைக்கு செல்லாமல் நேரடியாக ஆவணங்கள் மற்றும் வீட்டிலிருந்தபடியே, கடன் உதவி பெறும் திட்டமாக இது அமையும். இது வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை வெகுவாக குறைத்து, விரைவாக கடன் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கும். ஹூண்டாய் டீலர்கள் மூலமாக இந்த கடன் திட்ட விபரங்களை முழுமையாக பெற்றுக் கொள்ளலாம்.

ஹூண்டாய் கார்களுக்கு சிறப்பு கடன் திட்டங்கள் அறிமுகம்

எச்டிஎஃப்சி கார் கடனை ஆன்லைன் முறையிலேயே பெறுவதற்கும், ஆவணங்கள் மற்றும் பணத்தை செலுத்துவதற்குமான வசதிகளுடன் இந்த சிறப்பு கடன் திட்டம் வகுக்கப்பட்டு இருக்கிறது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களின் அலைச்சர் மற்றும் கொரோனா அச்சத்தை போக்கும் வகையில் இருக்கும்.

ஹூண்டாய் கார்களுக்கு சிறப்பு கடன் திட்டங்கள் அறிமுகம்

மேலும், வேலை இழப்பு, சம்பள குறைப்பு மூலமாக புதிய கார் வாங்கும் திட்டத்தை ஒத்திபோடும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், மாதத் தவணை உறுதி திட்டத்தையும் ஹூண்டாய் வழங்குகிறது. ஒருவேளை, வேலை இழப்பு பிரச்னை ஏற்பட்டால், மாதத் தவணை இந்த சிறப்பு காப்பீட்டு திட்டத்தின் மூலமாக சமன் செய்யப்படும். வாடிக்கையாளர்களின் தகுதியை பொறுத்து இந்த சிறப்பு திட்டம் வழங்கப்படும்.

ஹூண்டாய் கார்களுக்கு சிறப்பு கடன் திட்டங்கள் அறிமுகம்

மேலும், முதல் மூன்று மாதங்களுக்கு குறைவான மாதத் தவணை கொண்ட கடன் திட்டம், கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் வகையிலான ஸ்டெப் அப் மாதத் தவணை கொண்ட கார் கடன் திட்டம், 100 சதவீதம் ஆன்ரோடு விலைக்கான சிறப்பு கடன் திட்டங்களும் வழங்கப்படுகின்றன.

ஹூண்டாய் கார்களுக்கு சிறப்பு கடன் திட்டங்கள் அறிமுகம்

இந்த சிறப்பு திட்டங்கள் மற்றும் ஆஃபர்கள் குறித்த விபரங்களை அருகாமையிலுள்ள ஹூண்டாய் டீலரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை பிரதிநிதிகள் மூலமாக முழுமையான ஒத்துழைப்பும், நடைமுறைகளை செய்வதற்கான வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Hyundai Motor India Limited (HMIL) has partnered with HDFC Bank to offer customised financing solutions. Customers can avail easy finance options while making a purchase on the brand's online digital sales platform.
Story first published: Saturday, June 20, 2020, 17:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X