Just In
- 4 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 6 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 7 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 7 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சிறு துளியளவுகூட இந்த கார் தீங்கு விளைவிக்காது... ஐந்திற்கு 5 நட்சத்திரங்களை பெற்ற ஹூண்டாய் கோனா சாதனை...
ஹூண்டாய் கோனா மின்சார கார் பற்றிய ஆச்சரியமளிக்கும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா எலெக்ட்ரிக் கார் பயன்பாட்டிற்கு உகந்த கார் என்ற சான்றை பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கார் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான தீங்கையும் ஏற்படுத்தாதது என்பது தற்போதைய ஆய்வுகளின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது.

அதாவது, ஹூண்டாய் கோனா மின்சார கார் பூஜ்ஜியம் உமிழ்வு திறன் கொண்ட எலெக்ட்ரிக் வாகனம் என்ற நற்சான்றைப் பெற்றிருக்கின்றது. பசுமை என்சிஏபி (Green NCAP) எனும் தன்னாட்சி அமைப்பே இந்த சான்றை கோனா எலெக்ட்ரிக் காருக்கு வழங்கியிருக்கின்றது.

வாகனத்தின் திறன் மற்றும் அது வெளியேற்றும் உமிழ்வுகளின் அடிப்படையில் இந்த சான்றை பசுமை என்சிஏபி வழங்கி வருகின்றது. இதன்படி, இது மேற்கொண்ட அனைத்து ஆய்விலும் கோனா மின்சார கார் துளியளவும் இந்த உலகிற்கு கேடு விளைவிக்காத வாகனம் என்பது தெரியவந்துள்ளது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் ஐந்திற்கு 5 நட்சத்திரங்களை இக்கார் பெற்றிருக்கின்றது.

மூன்று விதமான அளவுருக்களின் அடிப்படையில் இந்த மதிப்பீடு வழங்கப்பட்டிருக்கின்றது. மின்சார மோட்டாரின் ஆற்றல் திறன், பசுமைவீடு வாயுக்களை வெளியேற்றும் விதம் மற்றும் சுத்தமான காற்று ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

ஹூண்டாய் நிறுவனம், கோனா மின்சார காரை இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனைச் செய்து வருகின்றது. இந்நிறுவனத்தின்கீழ் இந்தியாவில் விற்பனைக்கு வந்த முதல் மின்சார கார் இதுவே ஆகும். ஆகையால், இக்காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

சிறப்பான ரேஞ்ஜ், அதிக சொகுசு வசதி மற்றும் எக்கச்சக்க தொழில்நுட்ப வசதி என அனைத்திலும் இந்த கார் பிரம்மிக்க வைக்கின்ற வகையில் இருக்கின்றது. இந்த நிலையிலேயே பிற வாகனங்களைக் காட்டிலும் பயன்பாட்டிற்கு மிக மிக உகந்த கார் என்ற சான்றை கோனா எலெக்ட்ரிக் கார் பெற்றிருக்கின்றது.

பசுமை என்சிஏபி அமைப்பு நடப்பு ஆண்டில் மட்டுமே 24க்கும் மேற்பட்ட வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கின்றது. இதில், கோனா மின்சார கார் மட்டுமே அதிகப்படியான ரேட்டிங்ஸ்களைப் பெற்று முதல் இடத்தில் இருக்கின்றது.