இந்தியாவில் விற்பனையாகும் இந்த எலெக்ட்ரிக் கார்களில் எது பெஸ்ட் தெரியுமா? யாரும் சொல்லாத விஷயம்

ஹூண்டாய் கோனா, எம்ஜி இஸட்எஸ் மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய எலெக்ட்ரிக் கார்களில் எது பெஸ்ட்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எம்ஜி இஸட்எஸ் vs ஹூண்டாய் கோனா vs டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் - எது பெஸ்ட்?

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் கார்கள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. தற்போதைய நிலையில் டாடா நெக்ஸான், எம்ஜி இஸட்எஸ் மற்றும் ஹூண்டாய் கோனா என மூன்று எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதில், முதல் இரண்டு எலெக்ட்ரிக் கார்களும் வெகு சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

எம்ஜி இஸட்எஸ் vs ஹூண்டாய் கோனா vs டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் - எது பெஸ்ட்?

டாடா நெக்ஸான், எம்ஜி இஸட்எஸ் மற்றும் ஹூண்டாய் கோனா ஆகிய மூன்று எலெக்ட்ரிக் கார்களுக்கும் இடையேயான ஒப்பீட்டை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த மூன்று கார்களில் ஒன்றை நீங்கள் வாங்குவதாக இருந்தால், உங்களுக்கு இந்த செய்தி நிச்சயமாக உதவி செய்யும்.

எம்ஜி இஸட்எஸ் vs ஹூண்டாய் கோனா vs டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் - எது பெஸ்ட்?

டைமன்சன்கள்

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் நீளம் 3,994 மிமீ. அகலம் 1,811 மிமீ. உயரம் 1,607 மிமீ. இதன் வீல்பேஸ் 2,498 மிமீ. மறுபக்கம் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரின் நீளம் 4,180 மிமீ. அகலம் 1,800 மிமீ. உயரம் 1,570 மிமீ. இதன் வீல்பேஸ் 2,600 மிமீ. மூன்றாவதாக உள்ள எம்ஜி இஸட்எஸ் காரின் நீளம் 4,314 மிமீ. அகலம் 1,809 மிமீ. உயரம் 1,644 மிமீ. இதன் வீல்பேஸ் 2,585 மிமீ.

எம்ஜி இஸட்எஸ் vs ஹூண்டாய் கோனா vs டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் - எது பெஸ்ட்?

டிரைவ்டிரெயின்

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில், 30.2 kWh லித்தியம் அயான் பாலிமர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஏசி கனெக்ஸன் மூலமாக, பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 8 மணி நேரம் ஆகும். ஆனால் டிசி ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால், பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்வதற்கு வெறும் 60 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

எம்ஜி இஸட்எஸ் vs ஹூண்டாய் கோனா vs டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் - எது பெஸ்ட்?

டாடா நெக்ஸான் காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 312 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும். அதே சமயம் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார், 39.2 kWh லித்தியம் அயான் பாலிமர் பேட்டரியுடன் வருகிறது. இந்த பேட்டரியை ஏசி கனெக்ஸன் மூலமாக, பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 6 மணி நேரம் மற்றும் 10 நிமிடங்கள் ஆகும்.

எம்ஜி இஸட்எஸ் vs ஹூண்டாய் கோனா vs டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் - எது பெஸ்ட்?

அதே சமயம் டிசி ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால், இந்த காரின் பேட்டரியை வெறும் 57 நிமிடங்களில், பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விட முடியும். ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 435 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க முடியும்.

எம்ஜி இஸட்எஸ் vs ஹூண்டாய் கோனா vs டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் - எது பெஸ்ட்?

அதே சமயம் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், இருப்பதிலேயே அதிக கெபாசிட்டியுடன் 44.5 kWh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஏசி சார்ஜர் மூலமாக 80 சதவீதம் வரை சார்ஜ் செய்வதற்கு சுமார் 8 மணி நேரம் ஆகும். ஆனால் ஃபாஸ்ட் சார்ஜிங் முறையில் டிசி சார்ஜரை பயன்படுத்தினால், 50 நிமிடங்களில், 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விடலாம். இந்த காரின் ரேஞ்ச் 340 கிலோ மீட்டர்கள்.

எம்ஜி இஸட்எஸ் vs ஹூண்டாய் கோனா vs டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் - எது பெஸ்ட்?

எலெக்ட்ரிக் பவர் டிரெயின்

இந்த மூன்று எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் விலை குறைவானது டாடா நெக்ஸான்தான். எனவே குறைவான பவர் கொண்ட மோட்டார் உடன் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் வருகிறது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில், மூன்று-பேஸ் பெர்மனென்ட் மேக்னட் சிங்க்ரோனாஸ் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 129 பிஎஸ் பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

எம்ஜி இஸட்எஸ் vs ஹூண்டாய் கோனா vs டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் - எது பெஸ்ட்?

இந்த வரிசையில் அடுத்ததாக வருவது ஹூண்டாய் கோனா. இதுதான் இருப்பதிலேயே விலை அதிகமான மாடல். ஆனால் எம்ஜி இஸட்எஸ் காரை காட்டிலும் இதன் பவர் கொஞ்சம் குறைவு. ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரின் பெர்மனென்ட் மேக்னட் சிங்க்ரோனஸ் மோட்டார் அதிகபட்சமாக 136 பிஎஸ் பவரை உருவாக்க கூடியது.

எம்ஜி இஸட்எஸ் vs ஹூண்டாய் கோனா vs டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் - எது பெஸ்ட்?

ஆனால் இந்த காரின் 394.91 என்எம் டார்க்தான் இருப்பதிலேயே அதிகமானது. அதே சமயம் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரின் மூன்று-பேஸ் பெர்மனென்ட் மேக்னட் சிங்க்ரோனஸ் மோட்டார் அதிகபட்சமாக 142.76 பிஎஸ் பவரையும், 353 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

எம்ஜி இஸட்எஸ் vs ஹூண்டாய் கோனா vs டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் - எது பெஸ்ட்?

விலை

இருப்பதிலேயே டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்தான் விலை குறைவானது. இதன் ஆரம்ப விலை 13.99 லட்ச ரூபாய் மட்டுமே. அத்துடன் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் நாடு முழுவதும் விற்பனையாகிறது. அதேபோல் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரும் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை 23.71 லட்ச ரூபாய்.

எம்ஜி இஸட்எஸ் vs ஹூண்டாய் கோனா vs டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் - எது பெஸ்ட்?

அதே சமயம் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் விலை 20.88 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியம், மும்பை, ஐதராபாத், பெங்களூர் மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் மட்டுமே எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் விற்பனை செய்யப்படுகிறது. இங்கே குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

எம்ஜி இஸட்எஸ் vs ஹூண்டாய் கோனா vs டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் - எது பெஸ்ட்?

தீர்ப்பு

மேற்கண்ட மூன்று கார்களில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்தான் பெரும்பாலானோருக்கு பொருத்தமாக இருக்கும். ஏனெனில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு சவாலான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஹூண்டாய் கோனா மற்றும் எம்ஜி இஸட்எஸ் கார்களின் விலை கொஞ்சம் அதிகம் என்றாலும், அதற்கேற்ப வசதிகள், ரேஞ்ச், பெர்ஃபார்மென்ஸ் இருக்கும்.

எம்ஜி இஸட்எஸ் vs ஹூண்டாய் கோனா vs டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் - எது பெஸ்ட்?

எனவே உங்கள் தேவையை பொறுத்து முடிவு செய்யலாம். இந்தியாவில் தற்போது மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் மத்திய அரசு ஆர்வமாக உள்ளது. மத்திய அரசு வழங்கி வரும் ஆதரவு காரணமாக வருங்காலங்களில் இன்னும் அதிகமான எலெக்ட்ரிக் கார்கள் இந்திய மார்க்கெட்டில் களமிறங்கவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 30, 2020, 10:00 [IST]
English summary
Hyundai Kona vs MG ZS vs Tata Nexon Electric SUV - Comparison. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+