இந்தியா வருகிறது கியா கார்னிவல் அடிப்படையிலான ஹூண்டாய் ஸ்டாரெக்ஸ் கார்?

இந்தியாவில் ஹூண்டாய் ஸ்டாரெக்ஸ் பிரிமீயம் எம்பிவி கார் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியா வருகிறது ஹூண்டாய் ஸ்டாரெக்ஸ்?

அண்மையில் புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ஹூண்டாய் இந்தியா தலைமை அதிகாரி, இந்தியாவில் பிரிமீயம் எம்பிவி கார் மாடலை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவித்திருந்தார்.

இந்தியா வருகிறது ஹூண்டாய் ஸ்டாரெக்ஸ்?

இதுகுறித்த செய்தியையும் நாம் வெளியிட்டு இருந்தோம். டொயோட்டா இன்னோவா மற்றும் கியா கார்னிவல் மாடல்களுக்கு இது போட்டியாக இருக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.

 இந்தியா வருகிறது ஹூண்டாய் ஸ்டாரெக்ஸ்?

இந்த நிலையில், இந்த புதிய எம்பிவி கார் மாடலானது வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள ஹூண்டாய் ஸ்டாரெக்ஸ் எம்பிவி கார் மாடலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

 இந்தியா வருகிறது ஹூண்டாய் ஸ்டாரெக்ஸ்?

அதாவது, கியா கார்னிவல் கார் உருவாக்கப்பட்டிருக்கும் அதே கட்டமைப்புக் கொள்கையில்தான் இந்த ஹூண்டாய் ஸ்டாரெக்ஸ் மாடலும் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, பரிமாணத்தில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும்.

 இந்தியா வருகிறது ஹூண்டாய் ஸ்டாரெக்ஸ்?

இந்தியாவில் இந்த புதிய ஹூண்டாய் பிரிமீயம் எம்பிவி கார் புதிய பெயரில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்புள்ளது. மேலும், சில மாற்றங்களையும் பெற்றிருக்கும்.

 இந்தியா வருகிறது ஹூண்டாய் ஸ்டாரெக்ஸ்?

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால், கியா கார்னிவல் போன்றே இந்த காரிலும் பல்வேறு விதமான இருக்கை வசதிகளுடன் கிடைக்கும். இந்த காரின் மூன்றாம் தலைமுறை மாடல் தற்போது வெளிநாடுகளில் சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது.

 இந்தியா வருகிறது ஹூண்டாய் ஸ்டாரெக்ஸ்?

இந்த மாடல்தான் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, அடுத்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் புதிய ஹூண்டாய் ஸ்டாரெக்ஸ் எம்பிவி கார் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்தியா வருகிறது ஹூண்டாய் ஸ்டாரெக்ஸ்?

கியா கார்னிவல் எம்பிவி காரில் பயன்படுத்தப்படும் அதே 2.2 லிட்டர் டீசல் எஞ்சின்தான் இந்த புதிய ஹூண்டாய் எம்பிவி காரிலும் இடம்பெற்றிருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 197 பிஎச்பி பவரையும், 440 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும்.

 இந்தியா வருகிறது ஹூண்டாய் ஸ்டாரெக்ஸ்?

கியா செல்டோஸ் காரும், புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியும் போல விலையிலும் சிறிய அளவிலான கூடுதல், குறைவுடன் அறிமுகம் செய்யப்படும். இந்த புதிய ஹூண்டாய் எம்பிவி கார் மாடல் இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

Most Read Articles

English summary
According to report, Hyundai is planning to launch new MPV car in India and it might be the Starex MPV is available in the international market.
Story first published: Monday, March 23, 2020, 16:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X