இந்தியாவில் அதிகம் சேல்ஸ் ஆகும் ஹூண்டாய் கார் எதுன்னு தெரியுமா? மாடல் வாரியாக விற்பனை நிலவரம்...

கடந்த நவம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஹூண்டாய் கார்களின் பட்டியலில் கிரெட்டா முதலிடத்தை பிடித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் அதிகம் சேல்ஸ் ஆகும் ஹூண்டாய் கார் எதுன்னு தெரியுமா? மாடல் வாரியாக விற்பனை நிலவரம்...

இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் மாடல் வாரியாக வெளியாகியுள்ளன. கடந்த நவம்பரில் அதிகம் விற்பனையான ஹூண்டாய் நிறுவன கார்களின் பட்டியலில் கிரெட்டா முதலிடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 12,017 கிரெட்டா கார்களை ஹூண்டாய் நிறுவனம் கடந்த மாதம் விற்பனை செய்துள்ளது.

இந்தியாவில் அதிகம் சேல்ஸ் ஆகும் ஹூண்டாய் கார் எதுன்னு தெரியுமா? மாடல் வாரியாக விற்பனை நிலவரம்...

ஆனால் 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 6,684 ஆக இருந்தது. இது 80 சதவீத வளர்ச்சியாகும். புதிய தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி கடந்த மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் கிரெட்டா எஸ்யூவியின் விற்பனை உயர்ந்துள்ளது.

இந்தியாவில் அதிகம் சேல்ஸ் ஆகும் ஹூண்டாய் கார் எதுன்னு தெரியுமா? மாடல் வாரியாக விற்பனை நிலவரம்...

அதே சமயம் அதன் போட்டியாளரான கியா செல்டோஸ் எஸ்யூவியின் விற்பனை சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த நவம்பர் மாதம் அதிகம் விற்பனையான ஹூண்டாய் கார்களின் பட்டியலில், கிராண்ட் ஐ10 நியோஸ் 2வது இடத்தை பிடித்துள்ளது. ஹூண்டாய் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 10,936 கிராண்ட் ஐ10 நியோஸ் கார்களை விற்பனை செய்துள்ளது.

இந்தியாவில் அதிகம் சேல்ஸ் ஆகும் ஹூண்டாய் கார் எதுன்னு தெரியுமா? மாடல் வாரியாக விற்பனை நிலவரம்...

ஆனால் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 10,186 ஆக இருந்தது. இது 7 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவியான வெனியூ மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் ஹூண்டாய் நிறுவனம் 9,665 வெனியூ கார்களை விற்பனை செய்திருந்தது.

இந்தியாவில் அதிகம் சேல்ஸ் ஆகும் ஹூண்டாய் கார் எதுன்னு தெரியுமா? மாடல் வாரியாக விற்பனை நிலவரம்...

ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு நவம்பர் மாதம் 9,265 ஆக குறைந்துள்ளது. இது 4 சதவீத வீழ்ச்சியாகும். சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் கடந்த செப்டம்பர் மாதம் கியா சொனெட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய மாடலுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தியாவில் அதிகம் சேல்ஸ் ஆகும் ஹூண்டாய் கார் எதுன்னு தெரியுமா? மாடல் வாரியாக விற்பனை நிலவரம்...

இதன் காரணமாக ஹூண்டாய் வெனியூ விற்பனை சரிவடைந்திருக்கலாம். இந்த பட்டியலில் ஹூண்டாய் ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக் 4வது இடத்தை பிடித்துள்ளது. புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார், கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்தது. முதல் மாதத்தில் 9,096 யூனிட்கள் விற்பனை என்ற எண்ணிக்கையை புதிய ஹூண்டாய் ஐ20 பதிவு செய்துள்ளது.

இந்தியாவில் அதிகம் சேல்ஸ் ஆகும் ஹூண்டாய் கார் எதுன்னு தெரியுமா? மாடல் வாரியாக விற்பனை நிலவரம்...

ஆனால் கடந்த 2019ம் ஆண்டு நவம்பரில் இந்த எண்ணிக்கை 10,446 ஆக இருந்தது. இது 13 சதவீத வீழ்ச்சியாகும். வரும் மாதங்களில் புதிய ஐ20 வளர்ச்சியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில் ஹூண்டாய் அவ்ரா 5வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2019 நவம்பரில் 1,612 ஆக இருந்த அவ்ரா விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு நவம்பரில் 3,063 ஆக உயர்ந்துள்ளது. இது 90 சதவீத வளர்ச்சியாகும்.

இந்தியாவில் அதிகம் சேல்ஸ் ஆகும் ஹூண்டாய் கார் எதுன்னு தெரியுமா? மாடல் வாரியாக விற்பனை நிலவரம்...

இந்த பட்டியலில் ஹூண்டாய் சாண்ட்ரோ 6வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2019 நவம்பரில் 3,851 ஆக இருந்த ஹூண்டாய் சாண்ட்ரோ காரின் விற்பனை நடப்பாண்டு நவம்பரில் 2,822 ஆக குறைந்துள்ளது. இது 27 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் ஹூண்டாய் வெர்னா 7வது இடத்தில் உள்ளது. சாண்ட்ராவை போலவே வெர்னாவின் விற்பனையும் சரிவடைந்துள்ளது.

இந்தியாவில் அதிகம் சேல்ஸ் ஆகும் ஹூண்டாய் கார் எதுன்னு தெரியுமா? மாடல் வாரியாக விற்பனை நிலவரம்...

கடந்த 2019ம் ஆண்டு நவம்பரில் 2,010 ஆக இருந்த ஹூண்டாய் வெர்னாவின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு நவம்பரில் 1,487 ஆக குறைந்துள்ளது. இது 26 சதவீத வீழ்ச்சியாகும். 8வது இடத்தில் ஹூண்டாய் டூஸான் காரும், 9வது மற்றும் கடைசி இடத்தில் ஹூண்டாய் எலாண்ட்ராவும் உள்ளன. இந்த இரண்டு கார்களுமே விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.

இந்தியாவில் அதிகம் சேல்ஸ் ஆகும் ஹூண்டாய் கார் எதுன்னு தெரியுமா? மாடல் வாரியாக விற்பனை நிலவரம்...

கடந்த 2019ம் ஆண்டு நவம்பரில் 59 யூனிட்களாக இருந்த ஹூண்டாய் டூஸான் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு நவம்பரில் 76 யூனிட்களாக உயர்ந்துள்ளது. இது 29 சதவீத வளர்ச்சியாகும். அதேபோல் கடந்த 2019ம் ஆண்டு நவம்பரில் 34 யூனிட்களாக இருந்த ஹூண்டாய் எலாண்ட்ரா காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு நவம்பரில் 38 ஆக உயர்ந்துள்ளது. இது 12 சதவீத வளர்ச்சியாகும்.

இந்தியாவில் அதிகம் சேல்ஸ் ஆகும் ஹூண்டாய் கார் எதுன்னு தெரியுமா? மாடல் வாரியாக விற்பனை நிலவரம்...

ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஹூண்டாய் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 48,800 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு நவம்பரில் இந்த எண்ணிக்கை 44,600 ஆக மட்டுமே இருந்தது. இது 9.4 சதவீத வளர்ச்சி ஆகும். இதன் மூலம் இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் மாருதி சுஸுகிக்கு அடுத்தபடியாக ஹூண்டாய் 2வது இடத்தில் தொடர்கிறது.

Most Read Articles
English summary
Hyundai Model Wise Sales: November 2020 - Creta, Venue, Grand i10 Nios. Read in Tamil
Story first published: Saturday, December 12, 2020, 19:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X