வியக்க வைக்கும் ரேஞ்சை வழங்கும் ப்யூவல் செல் மின்சார கார்... அசத்தலான ஹூண்டாய் நெக்ஸோ எஸ்யூவி...!

ஹூண்டாய் நிறுவனம் அதன் அதிக ரேஞ்சை வழங்கும் ப்யூவல் செல் மின்சார காரை இந்திய வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்தது. இந்த காரின் பல்வேறு சிறப்பு தகவல்களை கீழே காணலாம்.

வியக்கை வைக்கும் ரேஞ்சை வழங்கும் ப்யூவல் செல் மின்சார கார்... அசத்தலான ஹூண்டாய் நெக்ஸோ எஸ்யூவி...!

தென் கொரிய நாட்டைச் சார்ந்த ஹூண்டாய் நிறுவனம் குறைந்த செலவில் அதிக பலனை அளிக்கின்ற வகையிலான வாகனங்களை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.

அந்தவகையிலான புதிய மாடல் ஒன்றை தற்போது நொய்டாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வாகன கண்காட்சியில் அது அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த காரை முன்னதாக 2018ம் ஆண்டு தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இந்தியா-கொரியா வர்த்தக உச்சி மாநாட்டில் அந்நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது.

வியக்கை வைக்கும் ரேஞ்சை வழங்கும் ப்யூவல் செல் மின்சார கார்... அசத்தலான ஹூண்டாய் நெக்ஸோ எஸ்யூவி...!

இந்த கார் ப்யூவல் செல் எனப்படும் மின்சார இனத்தைச் சார்ந்த உயர் திறன்கொண்ட வாகனம் ஆகும். 2018ம் ஆண்டின் அறிமுகத்தைத் தொடர்ந்து 2019ம் ஆண்டில் ப்யூவல் செல் எலெக்ட்ரிக் கார்கள்குறித்து ஆய்வு பணியை ஹூண்டாய் இந்தியாவில் மேற்கொண்டது.

இந்த ஆய்வில் ப்யூவல் செல் கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என தெரிந்தாலே, ஹூண்டாய் இந்த திறனிலான வாகனங்களை இந்தியாவில் களமிறக்கும்.

வியக்கை வைக்கும் ரேஞ்சை வழங்கும் ப்யூவல் செல் மின்சார கார்... அசத்தலான ஹூண்டாய் நெக்ஸோ எஸ்யூவி...!

ப்யூவல் எனப்படும் இந்த மின்சார வாகனங்கள் ஹைட்ரஜனில் இருந்து மின்சாரத்தை தயாரித்து அதன் பேட்டரிகளுக்கு சக்தியை வழங்கும். இந்த ஹைட்ரஜன் முழுமையாக நிரப்பட்ட பின்னர் அதிகபட்சமாக 666 கிமீ ரேஞ்சை வழங்குமாம். இது சாதாரண மின்சார காரைவிட மிக அதிக ரேஞ்ச் ஆகும்.

வியக்கை வைக்கும் ரேஞ்சை வழங்கும் ப்யூவல் செல் மின்சார கார்... அசத்தலான ஹூண்டாய் நெக்ஸோ எஸ்யூவி...!

இந்த ரேஞ்ச் ஆயிரம் கிலோமீட்டர் வரை உயரலாம் என்று கூறப்படுகின்றது. ஆனால், தற்போது கிடைத்த ஆய்வின்படி, 666 கிமீ ரேஞ்ச் உறுதியானது என்பது தெரியவந்துள்ளது.

வியக்கை வைக்கும் ரேஞ்சை வழங்கும் ப்யூவல் செல் மின்சார கார்... அசத்தலான ஹூண்டாய் நெக்ஸோ எஸ்யூவி...!

இந்த தரத்திலான கார்தான் தற்போது ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஹூண்டாய் நெக்ஸோ. இதில் 95kW ப்யூவல் செல் திறன் கொண்ட மின் மோட்டார் நிறுவப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 161 பிஎச்பி பவரையும், 395 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டது. இது உச்சபட்சமாக மணிக்கு 177 கிமீ வேகத்தில் செல்லுமாம். மேலும், 0-த்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தை வெறும் 9.2 விநாடிகளிலேயே தொட்டுவிடும்.

வியக்கை வைக்கும் ரேஞ்சை வழங்கும் ப்யூவல் செல் மின்சார கார்... அசத்தலான ஹூண்டாய் நெக்ஸோ எஸ்யூவி...!

இந்த கார் உலக சந்தையில் தானியங்கி திறன் கொண்ட மாடலாக விற்பனையில் கலக்கி வருகின்றது. இத்துடன், செல்ஃப் பார்க்கிங், புதிய தலைமுறை பிளைண்ட் ஸ்பாட் மாணிட்டர், ஹை வே டிரைவிங் அசிஸ்ட் மற்றும் லேன் ஃபால்லோவிங் அசிஸ்ட் போன்ற அதிநவீன தொழில்நுட்ப வசதிகளும் காட்சியளிக்கின்றன.

வியக்கை வைக்கும் ரேஞ்சை வழங்கும் ப்யூவல் செல் மின்சார கார்... அசத்தலான ஹூண்டாய் நெக்ஸோ எஸ்யூவி...!

ஒரு வேலை இந்த கார் இந்தியாவில் களமிறக்கப்படுமேயானால் இதில் ஏதேனும் ஓர் சிறப்பம்சம் குறைய வாயப்புகள் உண்டு. விலைக்குறைப்பிற்காக இந்த நடவடிக்கை ஹூண்டாய் மேற்கொள்ளவிருக்கின்றது.

வியக்கை வைக்கும் ரேஞ்சை வழங்கும் ப்யூவல் செல் மின்சார கார்... அசத்தலான ஹூண்டாய் நெக்ஸோ எஸ்யூவி...!

மேலும். இந்த காரில் கூடுதல் தொழில்நுட்ப வசதியாக எல்சிடி திரைகள் வழங்கப்பட்டுள்ளன. இவை, 12.3 இன்ச் கொண்டவையாகும். மையப்பகுதியில் அமைந்துள்ள கன்சோல் தனித்துவமான திறனைப் பெற்றதாக இருக்கின்றது. இதில், பல்வேறு அம்சங்களுக்கான கன்ட்ரோல்கள் இடம்பெற்றிருக்கின்றது.

வியக்கை வைக்கும் ரேஞ்சை வழங்கும் ப்யூவல் செல் மின்சார கார்... அசத்தலான ஹூண்டாய் நெக்ஸோ எஸ்யூவி...!

தொடர்ந்து, பிரிமியம் மற்றும் சொகுசு வசதிக்காக வேகன் லெதர் மற்றும் டெக்ஸ்டைல் பைப்பிங் மற்றும் ப்ளூர் மேட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஹூண்டாய் நெக்ஸோ கார் இருவிதமான இன்டீரியர் நிற தேர்வில் கிடைக்க இருக்கின்றது. சிங்கிள் டோன் மெட்டியோர் ப்ளூ மற்றும் ட்யூவல் டோன் ஸ்டோன் மற்றும் ஷெல் க்ரே ஆகிய நிற தேர்வுதான் அவை.

More from DriveSpark

Article Published On: Thursday, February 6, 2020, 19:03 [IST]
English summary
Hyundai Nexo Fuel Cell Unveiled At Auto Expo 2020. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+