ஹூண்டாய் கார்களுக்கான பண்டிகை கால ஆஃபர்கள் விபரம்!

பண்டிகை காலத்தை முன்னிட்டு ஹூண்டாய் கார்களுக்கு சிறப்பு சேமிப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை சேமிக்கும் வாய்ப்பு உள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஹூண்டாய் கார்களுக்கான பண்டிகை கால ஆஃபர்கள் விபரம்!

பண்டிகை காலத்தில் புதிய கார் வாங்க திட்டமிட்டிருக்கும் வாடிக்கையாளர்களை மனதில் வைத்து இந்த புதிய ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஹூண்டாய் சான்ட்ரோ, க்ராண்ட் ஐ10, க்ராண்ட் ஐ10 நியோஸ், எலைட் ஐ20, ஆரா மற்றும் எலான்ட்ரா ஆகிய கார் மாடல்களுக்கு இந்த சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஹூண்டாய் கார்களுக்கான பண்டிகை கால ஆஃபர்கள் விபரம்!

கடந்த 1ந் தேதி முதல் வரும் 31ந் தேதி வரை புதிய ஹூண்டாய் கார் மாடலை முன்பதிவு செய்வோருக்கு இந்த சிறப்புச் சலுகைகள் பொருந்தும். ஆன்லைன் அல்லது டீலர்கள் மூலமாக புதிய ஹூண்டாய் கார் மாடல்களை முன்பதிவு செய்வோருக்கு இந்த சலுகைகளை பெறலாம்.

ஹூண்டாய் கார்களுக்கான பண்டிகை கால ஆஃபர்கள் விபரம்!

ஹூண்டாய் சான்ட்ரோ

ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு ரூ.45,000 வரை சேமிக்கும் வாய்ப்பு உள்ளது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எரிபொருள் தேர்வுகளுக்கு இந்த சிறப்பு சலுகைகள் வழங்க்பபடுகின்றன. ரூ.25,000 வரை நேரடி தள்ளுபடி, ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.5,000 கார்ப்பரேட் போனஸ் சேமிப்புச் சலுகைகளை பெற வாய்ப்புள்ளது. ஹூண்டாய் சான்ட்ரோ காரில் 1.1 லிட்ட் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 99 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். சிஎன்ஜி எரிபொருள் தேர்வும் உள்ளது.

ஹூண்டாய் கார்களுக்கான பண்டிகை கால ஆஃபர்கள் விபரம்!

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 காருக்கு ரூ.60,000 மதிப்புடைய சேமிப்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது. இந்த காருக்கு ரூ.40,000 வரை நேரடி தள்ளுபடியும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.5,000 கார்ப்பரேட் போனஸ் சலுகையாக பெற முடியும்.

ஹூண்டாய் கார்களுக்கான பண்டிகை கால ஆஃபர்கள் விபரம்!

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ்

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காருக்கு ரூ.10,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும், ரூ.5,000 கார்ப்பரேட் போனஸாகவும் பெறும் வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்சமாக ரூ.25,000 மதிப்புடைய சேமிப்பை பெறும் வாய்ப்பு உள்ளது.

ஹூண்டாய் கார்களுக்கான பண்டிகை கால ஆஃபர்கள் விபரம்!

ஹூண்டாய் எலைட் ஐ20

ஹூண்டாய் எலைட் ஐ20 காருக்கு ரூ.50,000 தள்ளுபடியாகவும், ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையாகவும், ரூ.5,000 கார்ப்பரேட் போனஸாகவும் பெறும் வாய்ப்பு உள்ளது. மேக்னா ப்ளஸ் வேரியண்ட்டிற்கு மட்டும் சிறப்புச் சேமிப்பு சலுகைகள் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

ஹூண்டாய் கார்களுக்கான பண்டிகை கால ஆஃபர்கள் விபரம்!

ஹூண்டாய் ஆரா

ஹூண்டாய் ஆரா காருக்கு ரூ.10,000 தள்ளுபடியாகவும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையாகவும், ரூ.5,000 கார்ப்பரேட் போனஸாகவும் வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.30,000 மதிப்புடைய சேமிப்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது.

ஹூண்டாய் கார்களுக்கான பண்டிகை கால ஆஃபர்கள் விபரம்!

ஹூண்டாய் எலான்ட்ரா காரின் பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகளுக்கு ரூ.70,000 தள்ளுபடியும், ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டுகளுக்கு ரூ.30,000 வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. அண்மையில் வந்த டீசல் வேரியண்ட்டுகளுக்கு எந்த சேமிப்புச் சலுகையும் இல்லை.

ஹூண்டாய் கார்களுக்கான பண்டிகை கால ஆஃபர்கள் விபரம்!

இதுதவிர்த்து, மருத்துவர்கள், மருத்துவத் துறை பணியாளர்களுக்கு ரூ.3,000 சிறப்பு தள்ளுபடி சலுகையும் வழங்கப்படுகின்றன. இந்த சேமிப்புச் சலுகைகள் மாநிலத்திற்கு மாநிலம் மற்றும் டீலருக்கு டீலர் மாறுபடும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, அருகாமையிலுள்ள டீலரை தொடர்பு கொண்டு முழு விபரங்களையும் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 14, 2020, 18:29 [IST]
English summary
Hyundai India has announced attractive discounts and benefits offered ahead of the upcoming festival of Diwali this year in India. The company is offering maximum benefits of up to Rs 1 lakh depending on the model and the variant.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+