இந்தியாவுக்காக விலை குறைவான எலெக்ட்ரிக் கார்: ஹூண்டாய் தீவிரம்

இந்திய சந்தைக்கு ஏற்ற அம்சங்களுடன் சரியான பட்ஜெட்டில் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த உள்ளதாக ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சியோன் சியோப் கிம் தெரிவித்துள்ளார்.

 இந்தியாவுக்காக விலை குறைவான எலெக்ட்ரிக் கார்: ஹூண்டாய் தீவிரம்

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான சந்தை மெல்ல வலுப்பெற்று வருகிறது. எதிர்காலத்தில் வர்த்தகத்தை நிலையாக வைத்துக் கொள்வதற்கு இப்போதே புதிய எலெக்ட்ரிக் கார்களை களமிறக்குவதற்கு முனைப்பு காட்டி வருகின்றன.

இந்தியாவுக்காக விலை குறைவான எலெக்ட்ரிக் கார்: ஹூண்டாய் தீவிரம்

இந்த நிலையில், நாட்டின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக உள்ள ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கும் திட்டங்களில் தீவிரமாக இறங்கி இருக்கிறது. இந்தியாவுக்கு ஏற்ற சிறப்பம்சங்களுடன் புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை உருவாக்கும் பணிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

 இந்தியாவுக்காக விலை குறைவான எலெக்ட்ரிக் கார்: ஹூண்டாய் தீவிரம்

இதுகுறித்து எக்கனாமிக் டைம்ஸ் ஆட்டோ தளத்திற்கு பேட்டி அளித்துள்ள ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிர்வாக இயக்குனர் சியோன் சியோப் கிம்," குறைவான பட்ஜெட் கொண்ட எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கும்போது, விற்பனையிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும், விலை குறைவான புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.

 இந்தியாவுக்காக விலை குறைவான எலெக்ட்ரிக் கார்: ஹூண்டாய் தீவிரம்

எனினும், அவர் எந்த வகையான எலெக்ட்ரிக் கார் மாடல் என்பது குறித்த விபரங்களை தெரிவிக்கவில்லை. இந்தியாவுக்கு ஏற்ற பாடி ஸ்டைல் குறித்து தங்களது நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மைய பொறியாளர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 இந்தியாவுக்காக விலை குறைவான எலெக்ட்ரிக் கார்: ஹூண்டாய் தீவிரம்

இந்த நிலையில், ஹூண்டாய் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய எலெக்ட்ரிக் கார் எஸ்யூவி வகையிலான மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் இந்த புதிய எஸ்யூவியை ஹூண்டாய் விற்பனைக்கு கொண்டு வரும் வாய்ப்பு இருக்கிறது.

 இந்தியாவுக்காக விலை குறைவான எலெக்ட்ரிக் கார்: ஹூண்டாய் தீவிரம்

இதற்காக, புதிய எலெக்ட்ரிக் காருக்கு 90 சதவீத உதிரிபாகங்களை இந்தியாவிலேயே பெறுவதற்கான முயற்சிகளிலும் ஹூண்டாய் இறங்கி இருப்பதாக தகவ்கள் கூறுகின்றன. அடுத்த தசாப்தத்தின் மத்தியில் 44 புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை உலக அளவில் களமிறக்க ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. இதில், இந்தியாவுக்காக உருவாக்கப்படும் இந்த புதிய கார் மாடலும் அடக்கம்.

 இந்தியாவுக்காக விலை குறைவான எலெக்ட்ரிக் கார்: ஹூண்டாய் தீவிரம்

அடுத்த ஆண்டு இந்த புதிய எலெக்ட்ரிக் கார் குறித்த முழுமையான விபரங்களை ஹூண்டாய் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய எலெக்ட்ரிக் காருக்கு எல்ஜி கெம் நிறுவனத்திடம் இருந்து பேட்டரியை சப்ளை பெறுவதற்கும் ஹூண்டாய் திட்டம் வைத்துள்ளது.

Most Read Articles
English summary
According to report, Hyundai is developing affordable electric suv for Indian market.
Story first published: Friday, November 13, 2020, 17:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X