எர்டிகா காருக்கு போட்டியாக புதிய எம்பிவி கார்... ஆழ்ந்த யோசனையில் ஹூண்டாய்!
மாருதி எர்டிகா காருக்கு இருந்து வரும் வரவேற்பை மனதில் வைத்து, புதிய எம்பிவி கார் மாடலை அறிமுகப்படுத்துவது குறித்த திட்டத்தை கையில் எடுத்துள்ளது ஹூண்டாய் மோட்டார்ஸ்.

இந்தியாவில் எம்பிவி ரக 7 சீட்டர் கார் மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஆனால், நாட்டின் இரண்டாவது பெரிய கார் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்த ரகத்தில் எந்த ஒரு மாடலையும் இதுவரை அறிமுகப்படுத்தவில்லை.

இதனால், அந்நிறுவனத்திற்கு குறிப்பிட்ட அளவு வர்த்தக இழப்பு இருந்து வருகிறது. இந்த செக்மென்ட்டில் உள்ள வர்த்தக வாய்ப்பை எளிதாக பயன்படுத்தும் வாய்ப்பும் இருந்தும், ஏனோ இதுவரை எம்பிவி கார் மார்க்கெட்டில் ஹூண்டாய் ஆர்வம் காட்டாமல் இருந்து வருவது ஆச்சர்யம்தான்.

எனினும், எம்பிவி ரகத்தில் தனக்கு ஒரு கார் மாடல் இருக்க வேண்டும் என்பதை 2012ம் ஆண்டு நடந்த இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் வெளிப்படுத்தியது ஹூண்டாய். ஹெக்ஸா என்ற பெயரில் காம்பேக்ட் எம்பிவி மாடலின் கான்செப்ட் ஒன்றை காட்சிப்படுத்தியது.

இதனால், அடுத்த ஓரிரு ஆண்டுகளில் எப்படியும் ஹூண்டாய் எம்பிவி கார் உறுதி என்று நம்பப்பட்டது. ஆனால், அதன் பிறகு கிணற்றில் போட்ட கல்லாக எம்பிவி கார் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டது ஹூண்டாய் மோட்டார்ஸ்.

இந்த நிலையில், கார் அண்ட் பைக் தளத்திற்கு பேட்டி அளித்துள்ள ஹூண்டாய் விற்பனைப் பிரிவு உயர் அதிகாரி தருண் கர்க் எம்பிவி கார்களுக்கான மார்க்கெட் குறித்தும், தங்களுக்கு ஒரு மாடல் அவசியம் என்பதையும் உணர்ந்து பேசி உள்ளார்.

இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு,"எம்பிவி ரக கார் மார்க்கெட்டை கூர்ந்து கவனித்து வருகிறோம். மாருதி எர்டிகா என்றில்லை, அண்மையில் வந்த ரெனோ ட்ரைபர் கூட இந்த சந்தையில் இருக்கும் வர்த்தக வாய்ப்பை வெளிப்படுத்தி உள்ளது. இந்த ரக கார்களுக்கான வரவேற்பு ஆச்சர்யத்தை தருகிறது.MOST READ: கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அதிரடி... தெலங்கானாவில் எடுக்கப்பட்ட சூப்பர் நடவடிக்கை... என்ன தெரியுமா?

இந்தியாவில் எம்பிவி கார்களுக்கு வர்த்தக வாய்ப்பு உள்ளது. இதேபோன்று, வர்த்தக வாய்ப்புள்ள அனைத்து ரகத்திலும் இறங்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

எம்பிவி கார் மாடலை களமிறக்குவதற்கு ஹூண்டாய் நிறுவனத்திற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில், ஏற்கனவே ஒரு எம்பிவி கார் மாடலை சீனாவில் வைத்து சோதனைகளை செய்து வருகிறது ஹூண்டாய். அந்த மாடலை சில மாற்றங்களுடன் இந்தியாவில் எளிதாக கொண்டு வரும் வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








