டொயோட்டா இன்னோவா, ஃபார்ச்சூனர் கார்களுக்கு போட்டியாக புதிய மாடல்கள்: ஹூண்டாய் திட்டம்!

டொயோட்டா இன்னோவா மற்றும் ஃபார்ச்சூனர் கார்களுக்கு இணையான ரகத்தில் புதிய பிரிமீயம் எம்பிவி மற்றும் எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்வதற்கு ஹூண்டாய் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

இன்னோவா, ஃபார்ச்சூனர் போட்டியாளர்களை களமிறக்கும் ஹூண்டாய்!

இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் நிறுவனமாக ஹூண்டாய் மோட்டார் தொடர்ந்து வலுவான சந்தையை தக்க வைத்து வருகிறது. எனினும், வர்த்தகம் சீராக இருந்து வருகிறது. எதிர்பார்த்த அளவு வளர்ச்சியை பெற முடியாத நிலை உள்ளது.

இன்னோவா, ஃபார்ச்சூனர் போட்டியாளர்களை களமிறக்கும் ஹூண்டாய்!

இந்த நிலையில், வர்த்தக வளர்ச்சிக்கு புதிய கார் மாடல்கள் அவசியத்தை அந்நிறுவனம் உணர்ந்து கொண்டுள்ளது. பட்ஜெட் கார் மார்க்கெட்டிலும், மிட்சைஸ் கார் மார்க்கெட்டிலும் குறிப்பிடத்தக்க வர்த்தகத்தை பெற்றிருக்கிறது. எனவே, அடுத்தக்கட்டத்திற்கு செல்லும் முனைப்புடன் செயலாற்றி வருகிறது.

இன்னோவா, ஃபார்ச்சூனர் போட்டியாளர்களை களமிறக்கும் ஹூண்டாய்!

புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி அறிமுக விழாவின்போது செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் புதிய கார் மாடல்கள் குறித்த திட்டத்தை ஹூண்டாய் நிர்வாக இயக்குனர் கிம் தெரிவித்துள்ளார்.

இன்னோவா, ஃபார்ச்சூனர் போட்டியாளர்களை களமிறக்கும் ஹூண்டாய்!

அதன்படி, பிரிமீயம் எஸ்யூவி மற்றும் எம்பிவி கார்களை களமிறக்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக தீவிரமான ஆய்வுகளையும் செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இன்னோவா, ஃபார்ச்சூனர் போட்டியாளர்களை களமிறக்கும் ஹூண்டாய்!

அதாவது, இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் தனது துணை நிறுவனமான கியா மோட்டார் அறிமுகப்படுத்தியுள்ள கார்னிவல் எம்பிவி கார்களின் மார்க்கெட்டை குறிவைத்து பிரிமீயம் எம்பிவி மாடலை களமிறக்க ஆய்வுகளை மேற்கொண்டு வருவது தெரிய வந்துள்ளது.

இன்னோவா, ஃபார்ச்சூனர் போட்டியாளர்களை களமிறக்கும் ஹூண்டாய்!

மேலும், பிரிமீயம் எஸ்யூவி என்றால், அது நேரடியாக டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியை குறிவைத்து களமிறக்கப்படும். அதுவும், அதிகம் பேர் பயணிக்கும் வகையில் இந்த மாடல்கள் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இன்னோவா, ஃபார்ச்சூனர் போட்டியாளர்களை களமிறக்கும் ஹூண்டாய்!

இதன்படி, எம்பிவி மாடலானது 9 சீட்டர் மாடலாக இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. எஸ்யூவி மாடலானது 7 சீட்டர் மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த இரு மாடல்களும் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தகத்தையும், அந்தஸ்தையும் மேலே ஒரு படி உயர்த்தும் என தெரிகிறது.

இன்னோவா, ஃபார்ச்சூனர் போட்டியாளர்களை களமிறக்கும் ஹூண்டாய்!

இந்த புதிய மாடல்கள் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பான தகவல்கள் தொடர்ந்து இனி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 17, 2020, 15:52 [IST]
English summary
South Korean carmaker, Hyundai Motors is planning to enter premium SUV and MPV segment in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+