எப்படியாவது பேலிசேடு எஸ்யூவியை இந்தியா கொண்டு வரணும்... வரிந்து கட்டிய ஹூண்டாய் இந்தியா நிறுவனம்!

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு நிகரான பேலிசேடு எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான திட்டத்தை ஹூண்டாய் மோட்டார்ஸ் கையில் எடுத்துள்ளது. விலையை சவாலாக நிர்ணயிப்பதற்கான காரணங்களையும் ஆராய்ந்து வருகிறது.

பேலிசேடு எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்க ஹூண்டாய் திட்டம்

நாட்டின் இரண்டாவது பெரிய கார் நிறுவனமாக இருந்து வரும் ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியாவில் வர்த்தகத்தை மேலும் வலுவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. மேலும், பட்ஜெட் கார் மார்க்கெட் மட்டுமின்றி, பிரிமீயம் வகை மாடல்களையும் அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்களை பரிசீலித்து வருகிறது.

பேலிசேடு எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்க ஹூண்டாய் திட்டம்

அந்த வகையில், வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் தனது பிரம்மாண்டமான பேலிசேடு எஸ்யூவி மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான முதற்கட்ட ஆய்வுகள் நடந்து வருகின்றன.

பேலிசேடு எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்க ஹூண்டாய் திட்டம்

இதுதொடர்பாக, ஆட்டோகார் இந்தியா தளத்திடம் பேசிய ஹூண்டாய் மோட்டார்ஸ் விற்பனைப் பிரிவு அதிகாரி தருண் கர்க் கூறுகையில்,"பேலிசேடு எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம்.

பேலிசேடு எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்க ஹூண்டாய் திட்டம்

பேலிசேடு எஸ்யூவியை இந்தியாவில் எந்த வழியில் விற்பனைக்கு கொண்டு வருவது என்பதுதான் முக்கிய விஷயமாக இருக்கிறது. அதாவது, இறக்குமதி செய்தால், வரி அதிகம் இருக்கும். அதேநேரத்தில், இங்கேயே அசெம்பிள் செய்தால், விற்பனை எண்ணிக்கை அதிகம் இருக்க வேண்டும். எனவே, இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதற்கான வழிகளையும், அதற்கு இருக்கும் வர்த்தக வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருகிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

பேலிசேடு எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்க ஹூண்டாய் திட்டம்

இதனிடையே, இடதுபக்க ஸ்டீயரிங் வீல் அமைப்புடைய சந்தைகளில் மட்டுமே ஹூண்டாய் பேலிசேடு எஸ்யூவி விற்பனை செய்யப்படும் நிலையில், வலதுபக்க ஸ்டீயரிங் வீல் கொண்ட மாடலை உருவாக்கும் பணிகளில் ஹூண்டாய் இறங்கி இருப்பதாக தெரிகிறது.

பேலிசேடு எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்க ஹூண்டாய் திட்டம்

அதாவது,ஆஸ்திரேலிய மார்க்கெட்டை குறி வைத்து பேலிசேடு எஸ்யூவியில் மாற்றங்களை செய்து வருகிறது. இதனால், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்த எஸ்யூவி மிக எளிதாக வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் புதிய இறக்குமதி வரி தளர்வு விதி அடிப்படையில், முதல் 2,500 யூனிட்டுகளில் எந்த மாற்றங்களும் இல்லாமல் கொண்டு வந்து விற்பனை செய்ய முடியும். இதனை பயன்படுத்துவதற்கான வாய்ப்பும் உள்ளது.

பேலிசேடு எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்க ஹூண்டாய் திட்டம்

ஹூண்டாய் பேலிசேடு எஸ்யூவி 4,980 மிமீ நீளமும், 1,975 மிமீ அகலமும், 1,750 உயரமும், 2,900 மிமீ வீல் பேஸ் கொண்ட பிரம்மாண்டமான எஸ்யூவி மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இந்த எஸ்யூவியில் மூன்று எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

பேலிசேடு எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்க ஹூண்டாய் திட்டம்

இந்த எஸ்யூவியில் வழங்கப்படும் 3.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 277 பிஎஸ் பவரையும், 335 என்எம் டார்க் திறனையும் வழங்கும். அடுத்து 3.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 295 பிஎஸ் பவரையும், 355 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

பேலிசேடு எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்க ஹூண்டாய் திட்டம்

டீசல் எஞ்சின் மாடலில் வழங்கப்படும் 2.2 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சின் அதிகபட்சமாக 193 பிஎஸ் பவரையும், 441 என்எம் டார்க் திறனையும் வழங்கும். அனைத்து எஞ்சின் தேர்வுகளுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், 2 வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல்களில் கிடைக்கிறது.

பேலிசேடு எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்க ஹூண்டாய் திட்டம்

தென்கொரியாவில் ஹூண்டாய் பேலிசேடு எஸ்யூவி இந்திய மதிப்பில் ரூ.22.36 லட்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ரூ.35 லட்சத்தையொட்டிய விலையில் கொண்டு வரும் வாய்ப்புளளது. டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவிகளுடன் போட்டி போடும்.

Most Read Articles
English summary
Hyundai Motors India is planning to launch Pallisade SUV in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X