ஹூண்டாய் சொனாட்டா கார் மீண்டும் இந்தியாவில் அறிமுகமாகிறது?

ஹூண்டாய் சொனாட்டா கார் மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹூண்டாய் சொனாட்டா கார் மீண்டும் இந்தியாவில் அறிமுகமாகிறது?

பிரிமீயம் செடான் கார் மார்க்கெட்டில் ஹூண்டாய் சொனாட்டா காரும் முன்னணி போட்டியாளராக இருந்து வருகிறது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனையில் இருக்கும் இந்த கார் இந்தியாவிலும் விற்பனையில் இருந்து வந்தது. ஆனால், விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை என்பதால் கடந்த 2014ம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் இருந்து விலக்கப்பட்டது.

ஹூண்டாய் சொனாட்டா கார் மீண்டும் இந்தியாவில் அறிமுகமாகிறது?

இந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு நடந்த ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட ஹூண்டாய் லி ஃபில் ரோக் கான்செப்ட் அடிப்படையில் 8வது தலைமுறை ஹூண்டாய் சொனாட்டா கார் உருவாக்கப்பட்டது.

ஹூண்டாய் சொனாட்டா கார் மீண்டும் இந்தியாவில் அறிமுகமாகிறது?

இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு நியூயார்க் ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய கார் உலக அளவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஹூண்டாய் சொனாட்டா கார் மீண்டும் இந்தியாவில் அறிமுகமாகிறது?

தற்போது இந்தியாவில் பிரிமீயம் செடான் கார்களுக்கான மதிப்பும், சந்தை வாய்ப்பும் குறிப்பிடத்தக்க அளவில் இருப்பதால், சொனாட்டா கார் அறிமுக திட்டத்தை ஹூண்டாய் கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த காருக்கான சந்தை வாய்ப்பு குறித்து ஹூண்டாய் ஆய்வுகளை நடத்தி வருகிறது.

ஹூண்டாய் சொனாட்டா கார் மீண்டும் இந்தியாவில் அறிமுகமாகிறது?

முந்தைய மாடல்களைவிட எட்டாவது தலைமுறை மாடலாக தற்போது விற்பனையில் இருக்கும் ஹூண்டாய் சொனாட்டா கார் நீளத்திலும், அகலத்திலும் பெரிய கார் மாடலாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால், வாடிக்கையாளர் எதிர்பார்ப்பை கச்சிதமாக பூர்த்தி செய்யும் இடவசதியை பெற்றிருக்கிறது.

ஹூண்டாய் சொனாட்டா கார் மீண்டும் இந்தியாவில் அறிமுகமாகிறது?

புதிய ஹூண்டாய் சொனாட்டா காரில் எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி விளக்கு பார், புதிய டேஷ்போர்டு அமைப்பு, 4 ஸ்போக் மல்டி ஃபங்ஷன் ஸ்டீயிரிங் வீல், இரட்டை டயல்களுடன் புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

ஹூண்டாய் சொனாட்டா கார் மீண்டும் இந்தியாவில் அறிமுகமாகிறது?

புதிய ஹூண்டாய் சொனாட்டா கார் வெளிநாடுகளில் 1.6 லிட்டர் அல்லது 2.5 லிட்டர் வரையிலான பெட்ரோல் ஹைப்ரிட் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. இந்தியாவிலும் மாசு உமிழ்வு விதிகள் கடுமையாக்கப்படுவதால், ஹைப்ரிட் எஞ்சின் தேர்வுகளில் வழங்கப்படும் வாய்ப்புள்ளது.

ஹூண்டாய் சொனாட்டா கார் மீண்டும் இந்தியாவில் அறிமுகமாகிறது?

இந்த காரில் 8.0 அங்குல எல்சிடி டிவி திரைகள், எல்இடி லைட்டுகள், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ஹீட்டடு வசதிகளுடன் இருக்கைகள் மற்றும் சைடு மிரர்கள், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ஸ்மார்ட் டிரங்க் ரிலீஸ் ஆகிய வசதிகள் இருக்கும்.

ஹூண்டாய் சொனாட்டா கார் மீண்டும் இந்தியாவில் அறிமுகமாகிறது?

தவிரவும், ஃபார்வர்டு கொலிசன் அவாய்டன்ஸ் அசிஸ்ட், லேன் கீப்பிங் அசிஸ்ட், லேன் ஃபாலோ அசிஸ்ட், ஆட்டோமேட்டிக் ஹை பீம் ஹெட்லைட் சிஸ்டம், ஸ்மார்ட் க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் இடம்பெறும்.

ஹூண்டாய் சொனாட்டா கார் மீண்டும் இந்தியாவில் அறிமுகமாகிறது?

அடுத்த ஆண்டு இந்தியாவில் புதிய ஹூண்டாய் சொனாட்டா கார் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஃபோக்ஸ்வேகன் பஸாத், ஸ்கோடா சூப்பர்ப், டொயோட்டா கேம்ரி மற்றும் ஹோண்டா அக்கார்டு கார்களுடன் போட்டி போடும்.

Source: Carwale

More from DriveSpark

Article Published On: Friday, January 10, 2020, 15:42 [IST]
English summary
South Korean car maker Hyundai Motors is considering to re-launch Sonata Sedan car in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+