ஹூண்டாய் எலண்ட்ரா காரை வாங்க போகிறீர்களா...? அப்போ உங்களுக்கான அறிவிப்பு தான் இது...

ஹூண்டாய் நிறுவனம் அதன் செடான் ரக கார் மாடலான எலண்ட்ராவிற்கு இந்த செப்டம்பர் மாதத்திற்காக அட்டகாசமான சலுகைகளை வழங்கியுள்ளது. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹூண்டாய் எலண்ட்ரா காரை வாங்க போகிறீர்களா...? அப்போ உங்களுக்கான அறிவிப்பு தான் இது...

தென்கொரியாவில் தலைமையகம் அமைத்து கொண்டு தயாரிப்புகளை இந்தியா உள்பட மற்ற நாட்டு சந்தைகளிலும் விற்பனை செய்துவரும் ஹூண்டாய், எலண்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் காரை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

ஹூண்டாய் எலண்ட்ரா காரை வாங்க போகிறீர்களா...? அப்போ உங்களுக்கான அறிவிப்பு தான் இது...

ஆனால் அப்போது அதில் பிஎஸ்6 பெட்ரோல் என்ஜின் மட்டும் தான் வழங்கப்பட்டது. பிஎஸ்6 டீசல் என்ஜின் தேர்வு ஊரடங்கில் தளர்வுகள் கொண்டுவரப்பட்ட பின் கடந்த ஜூன் மாதத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் இதுதான் எலண்ட்ராவின் விற்பனையை அதிகரிக்க செய்ய சரியான நேரம் என்று ஹூண்டாய் நினைத்துவிட்டது போலும்.

ஹூண்டாய் எலண்ட்ரா காரை வாங்க போகிறீர்களா...? அப்போ உங்களுக்கான அறிவிப்பு தான் இது...

ஏனெனில் எலண்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு ரூ.60,000 வரையிலான சலுகைகளை இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி இந்த செடான் காரின் பெட்ரோல் வேரியண்ட்டை வாங்குவோர் ரூ.60,000 மதிப்பிலான சலுகைகளை பெற முடியும். அதேநேரம் இதன் டீசல் வேரியண்ட்டிற்கு ரூ.30,000 அளவிலான தள்ளுபடி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஹூண்டாய் எலண்ட்ரா காரை வாங்க போகிறீர்களா...? அப்போ உங்களுக்கான அறிவிப்பு தான் இது...

இந்த சலுகை அறிவிப்புகள் அனைத்தும் இந்த செப்டம்பர் மாத 30ஆம் தேதி வரையில் மட்டுமே செல்லப்படியாகும். ஹூண்டாய் எலண்ட்ராவை பற்றி கூற வேண்டுமென்றால், ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட்டாக டிஆர்எல்களுடன் எல்இடி ஹெட்லேம்ப்கள், ஹூண்டாயின் அடையாள க்ரில், புதிய வடிவில் முன் & பின் பம்ர்பர்கள், புதிய அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவற்றை பெற்று வந்துள்ளது.

ஹூண்டாய் எலண்ட்ரா காரை வாங்க போகிறீர்களா...? அப்போ உங்களுக்கான அறிவிப்பு தான் இது...

இவை மட்டுமின்றி பின்புறத்திலும் ரீடிசைனிலும் எல்இடி டெயில்லைட்களை பெற்றுள்ள இந்த ஃபேஸ்லிஃப்ட் காரின் மூடுபனி விளக்குகள் முக்கோண வடிவில் வழங்கப்படுகின்றன. உட்புறத்தில் சிறப்பம்சமாக ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடிய தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் 8 இன்ச்சில் வழங்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் எலண்ட்ரா காரை வாங்க போகிறீர்களா...? அப்போ உங்களுக்கான அறிவிப்பு தான் இது...

இதனுடன் இரு-நிலை க்ளைமேட் கண்ட்ரோல், சன்ரூஃப், க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங், முன்பக்கமாக மடக்கக்கூடிய இருக்கைகள், 4.2 இன்ச்சில் ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்கக்கூடிய வண்ண திரை, கூல்டு க்ளோவ் பெட்டகம், 10 வழிகளில் பவர்-அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை மற்றும் ப்ளூலிங்க் தொழிற்நுட்பத்துடன் எலண்ட்ராவின் உட்புற கேபின் நிரம்பி வழிகிறது.

ஹூண்டாய் எலண்ட்ரா காரை வாங்க போகிறீர்களா...? அப்போ உங்களுக்கான அறிவிப்பு தான் இது...

ஏற்கனவே கூறியதுபோல் இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இந்த செடான் காரில் 2.0 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் யு2 டீசல் என்ற இரு விதமான என்ஜின் தேர்வுகளை பிஎஸ்6 தரத்தில் ஹூண்டாய் நிறுவனம் வழங்குகிறது. இதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 152 பிஎச்பி மற்றும் 192 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

ஹூண்டாய் எலண்ட்ரா காரை வாங்க போகிறீர்களா...? அப்போ உங்களுக்கான அறிவிப்பு தான் இது...

அதேநேரம் டீசல் என்ஜின் மூலமாக 112 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக பெற முடியும். இந்த இரு என்ஜின்களுக்கும் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் என்ற இரு கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. எலண்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் காரின் ஆரம்ப விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.17.60 லட்சத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Hyundai providing attractive discount offers in Elantra.
Story first published: Saturday, September 12, 2020, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X