கொரோனாவுக்கு இடையிலும் க்ரெட்டாவுக்கு குவியும் புக்கிங்... உற்சாகத்தில் ஹூண்டாய்!

கொரோனா கோரப் பிடியை இறுக்கி வரும் இவ்வேளையில், க்ரெ்டடா எஸ்யூவிக்கான புக்கிங் மிகச் சிறப்பாக இருந்து வருகிறது. இது ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்திற்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

 கொரோனாவுக்கு இடையிலும் க்ரெட்டாவுக்கு குவியும் புக்கிங்!

எஸ்யூவி மார்க்கெட்டில் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. வாடிக்கையாளர் வட்டமும் மிகப்பெரியது. இந்த சூழலில், கடந்த மார்ச் மாதம் புதிய தலைமுறை மாடலாக ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

 கொரோனாவுக்கு இடையிலும் க்ரெட்டாவுக்கு குவியும் புக்கிங்!

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து கொரோனாவால் மிகப்பெரிய சவால்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அனைத்து கார் நிறுவனங்களும் விற்பனையை மீட்டு எடுப்பதற்கு தவித்து வரும் நிலையில், ஹூண்டாய் நிறுவனத்திற்கு க்ரெட்டா மிகச் சிறப்பான வர்த்தக பங்களிப்பை வழங்கி வருகிறது.

 கொரோனாவுக்கு இடையிலும் க்ரெட்டாவுக்கு குவியும் புக்கிங்!

விற்பனை மிக குறைவாக இருந்தாலும், தொடர்ந்து புக்கிங் சிறப்பாக இருந்து வருகிறது. அதாவது, மற்ற கார் மாடல்களை விட இந்த காருக்கான புக்கிங் மிகச் சிறப்பாக இருந்து வருகிறது. இன்று நடந்த புதிய ஹூண்டாய் டூஸான் அறிமுக நிகழ்வின்போது, ஹூண்டாய் க்ரெட்டா புக்கிங் பற்றிய தகவலும் வெளியிடப்பட்டது.

 கொரோனாவுக்கு இடையிலும் க்ரெட்டாவுக்கு குவியும் புக்கிங்!

அதன்படி, இதுவரை 45,000 பேர் புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியை முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, இப்போது கார் மார்க்கெட் மிக நெருக்கடியான காலக்கட்டத்தில் இருக்கும் நிலையில், இது நிச்சயம் மிகப்பெரிய எண்ணிக்கையாகவே கருத முடியும்.

 கொரோனாவுக்கு இடையிலும் க்ரெட்டாவுக்கு குவியும் புக்கிங்!

இரண்டாம் தலைமுறை மாடலாக விற்பனைக்கு வந்துள்ள ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் டிசைன் அனைவரையும் கவரும் வகையில் மாற்றங்களை சந்தித்துள்ளது. அத்துடன், மிக தரமான பாகங்களுடன் மிகவும் பிரிமீயம் காருக்குரிய அந்தஸ்தை தனது தோற்ற வசீகரத்தால் சுண்டி இழுக்கிறது.

 கொரோனாவுக்கு இடையிலும் க்ரெட்டாவுக்கு குவியும் புக்கிங்!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில், 56 சதவீத புக்கிங் டீசல் மாடலுக்கே கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கொரோனாவுக்கு இடையிலும் க்ரெட்டாவுக்கு குவியும் புக்கிங்!

இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 113 பிஎச்பி பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவியின் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 138 பிஎச்பி பவரையும், 242 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

 கொரோனாவுக்கு இடையிலும் க்ரெட்டாவுக்கு குவியும் புக்கிங்!

இதன் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 113 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். சிறப்பான மைலேஜை இதன் எஞ்சின்கள் வழங்குகின்றன.

 கொரோனாவுக்கு இடையிலும் க்ரெட்டாவுக்கு குவியும் புக்கிங்!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், 17 அங்குல அலாய் வீல்கள், 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புளூலிங்க் கனெக்ட்டிவிட்டி வசதி, மூன்று டிரைவிங் மோடுகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் உள்ளன.

 கொரோனாவுக்கு இடையிலும் க்ரெட்டாவுக்கு குவியும் புக்கிங்!

ரூ.9.99 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கிறது. அருமையான டிசைன், தொழில்நுட்ப வசதிகள், இடவசதி, சிறந்த எஞ்சின் தேர்வுகளுடன் மிகச் சரியான பட்ஜெட்டில் கிடைப்பதால் மிகப்பெரிய வரவேற்பை பெற்று நம்பர்-1 இடத்தில் இருக்கிறது. கியா செல்டோஸ் காருக்கு நேரடி போட்டியாக இருந்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 15, 2020, 8:30 [IST]
English summary
Hyundai has received 45,000 bookings for second-gen Creta SUV in India since its launch.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+