அடுத்த மாதம் கியா சொனெட் இந்தியா வருகை... வென்யூ எஸ்யூவியை பலப்படுத்தும் ஹூண்டாய்...

வென்யூ காம்பெக்ட் எஸ்யூவி மாடலின் ஸ்போர்ட் ட்ரிம்மின் புதிய டெலிவிஷன் வீடியோவை ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதனை இந்த செய்தியில் பார்ப்போம்.

அடுத்த மாதம் கியா சொனெட் இந்தியா வருகை... வென்யூ எஸ்யூவியை பலப்படுத்தும் ஹூண்டாய்...

இந்திய சந்தையில் சப்-4 மீட்டர் காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் பிரபலமான கார்களுள் ஒன்றாக ஹூண்டாயின் வென்யூ விளங்குகிறது. விற்பனையில் அதிகளவில் போட்டி இதற்கும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவிற்கும் இடையே தான் இருக்கும்.

அடுத்த மாதம் கியா சொனெட் இந்தியா வருகை... வென்யூ எஸ்யூவியை பலப்படுத்தும் ஹூண்டாய்...

ஆனால் புதியதாக இவை இரண்டிற்கும் போட்டியளிக்கும் வகையில் கியா மோட்டார்ஸின் சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. இதனால் தனது வென்யூ கார் மீது வாடிக்கையாளர்களின் கவனம் தொடர வேண்டும் என்பதற்காகவே ஹூண்டாய் நிறுவனம் புதிய டிவிசி வீடியோவை வெளியிட்டுள்ளது.

அடுத்த மாதம் கியா சொனெட் இந்தியா வருகை... வென்யூ எஸ்யூவியை பலப்படுத்தும் ஹூண்டாய்...

முற்றிலும் அதிக எடை கொண்ட கார்களால் நிரம்பியுள்ள இந்த பிரிவில் மற்ற கார்களுக்கு சவால்விடும் வகையில் எக்ஸ்ஷோரூம் விலை, சிறந்த தொழிற்நுட்ப அம்சங்கள் மற்றும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் என்ஜின் தேர்வுகள் உள்ளிட்டவற்றால் வென்யூவின் ஆதிக்கம் காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் தொடர்கிறது.

அடுத்த மாதம் கியா சொனெட் இந்தியா வருகை... வென்யூ எஸ்யூவியை பலப்படுத்தும் ஹூண்டாய்...

இந்த ஹூண்டாய் காரின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக வேகமாக அதிகரிப்பதற்கு காரணம், காரில் புதியதாக பொருத்தப்பட்டுள்ள ஐஎம்டி (இண்டெலிஜண்ட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன்) கியர்பாக்ஸ் ஆகும். தற்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோ வென்யூவிற்கு புதிய ஸ்போர்ட் வேரியண்ட் கொடுக்கப்பட்டிருப்பதை வெளிக்காட்டுகிறது.

வழக்கமான வென்யூ வேரியண்ட்களில் இருந்து இயந்திர பாகங்களில் எந்த மாற்றத்தையும் பெறாத புதிய ஸ்போர்ட் வேரியண்ட்டிலும் ஐஎம்டி கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஐஎம்டி கியர்பாக்ஸ் 1.0 லிட்டர் டர்போ ஜிடிஐ பெட்ரோல் என்ஜினிற்கு மட்டுமே ட்ரான்ஸ்மிஷன் தேர்வாக வழங்கப்படுகிறது.

அடுத்த மாதம் கியா சொனெட் இந்தியா வருகை... வென்யூ எஸ்யூவியை பலப்படுத்தும் ஹூண்டாய்...

ஐஎம்டி தொழிற்நுட்பம் முக்கியமாக க்ளட்ச்சை தவிர்க்க பெரிதும் பயன்படுகிறது. அதாவது க்ளட்ச் பெடலை அழுத்தத்தாமலேயே இந்த தொழிற்நுட்பத்தின் மூலமாக வெவ்வேறான கியர்களை மேனுவலாக மாற்ற முடியும். புதிய ஸ்போர்ட் ட்ரிம்மிற்கு இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் மட்டுமின்றி 1.5 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வும் வழங்கப்படும்.

அடுத்த மாதம் கியா சொனெட் இந்தியா வருகை... வென்யூ எஸ்யூவியை பலப்படுத்தும் ஹூண்டாய்...

இதனால் வென்யூவின் இந்த புதிய வேரியண்ட்டின் விலை ரூ.10.20 லட்சத்தில் இருந்து ரூ.11.58 லட்சம் வரையில் எக்ஸ்ஷோரூமில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தோற்றத்தில் வேறுபாடு என்று பார்த்தால், முன்புற க்ரில் மற்றும் சக்கர ஆர்ச்சுகளில் இந்த புதிய ட்ரிம்மிற்காக சிவப்பு நிறம் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் கியா சொனெட் இந்தியா வருகை... வென்யூ எஸ்யூவியை பலப்படுத்தும் ஹூண்டாய்...

இதே சிவப்பு நிறம் உட்புறத்திலும் ஏசி வெண்ட்கள் மற்றும் க்னாப்கள், இருக்கைகளில் மற்றும் ஸ்டேரிங் சக்கரங்களில் கூட கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோவில் காரின் பக்கவாட்டில் ஸ்கிர்ட்ஸ் மற்றும் ப்ரேக் காலிபர்களையும் பார்க்க முடிகிறது.

Most Read Articles

English summary
Hyundai Venue Sport Trim TVC Goes Online – Kia Sonet Rival
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X