புதிய ஹூண்டாய் க்ரெட்டா உருவரை படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் உருவரை படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா உருவரை படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

எஸ்யூவி மார்க்கெட்டில் பிளாக் பஸ்டர் மாடலாக ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி வலம் வருகிறது. இந்த நிலையில், சந்தைப் போட்டியை சமாளிக்கும் விதத்திலும், வாடிக்கையாளர்களை கவரவும், இரண்டாம் தலைமுறை மாடலாக ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா உருவரை படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

வடிவமைப்பிலும், வசதிகளிலும் முற்றிலும் புதிய மாடலாக வர இருக்கும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி கார் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. வரும் 5ந் தேதி துவங்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா உருவரை படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் ஆவலைத் தூண்டும் விதத்தில், ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் வெளிப்புற மாதிரியை விளக்கும் வகையில் உருவரை படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா உருவரை படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்ட ஐஎக்ஸ்25 எஸ்யூவிதான் இந்தியாவில் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியாக விற்பனை செய்யப்படுகிறது. எனவே, டிசைன் அம்சங்கள் சீன மாடலை ஒத்திருக்கிறது.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா உருவரை படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

இந்த ஸ்பிளிட் ஹெட்லைட் க்ளஸ்ட்டர் அமைப்பு, எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், 17 அங்குல அலாய் வீல்கள், டியூவல் டோன் கூரை அமைப்பு, கருப்பு வண்ண அலங்கார பாகங்களுடன் மிக வசீகரமான மாடலாக வர இருக்கிறது.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா உருவரை படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

கியா செல்டோஸ் காரின் பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த புதிய க்ரெட்டா காரிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கும். எனவே, பழைய க்ரெட்டா காரைவிட புதிய மாடல் அதிக இடவசதியை பெற்றிருக்கும். மேலும், 5 சீட்டர் மாடல் மட்டுமின்றி, சிறிது காலம் கழித்து 7 சீட்டர் மாடலும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிகிறது.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா உருவரை படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியில் பெரிய திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இடம்பெற்றிருக்கும். இந்த காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் நேரடி இணைய வசதி மூலமாக பல்வேறு கட்டுப்பாட்டு மற்றும் தகவல்களை உரிமையாளர்களுக்கு வழங்கும்.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா உருவரை படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், கீ லெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், ஓட்டுனர் இருக்கைக்கு எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதிகள் அளிக்கப்படும் என்று தெரிகிறது.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா உருவரை படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

கியா செல்டோஸ் காரில் இடம்பெற்றிருக்கும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகள் புதிய தலைமுறை க்ரெட்டா காரிலும் வழங்கப்படும். இவை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும்.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா உருவரை படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

பெட்ரோல் எஞ்சின் 115 பிஎஸ் பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் எஞ்சின் 115 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வில் வருவதற்கும் வாய்ப்புள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 140 பிஎஸ் பவரையும், 242 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Hyundai Motor India Limited (HMIL) has released design sketches of second generation Creta SUV ahead of 2020 Auto Expo debut.
Story first published: Saturday, February 1, 2020, 11:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X