விற்பனையில் புதிய சாதனை படைத்தது ஹூண்டாய்... கிரெட்டாவிற்குதான் நன்றி சொல்லணும்...

ஹூண்டாய் நிறுவனம் விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விற்பனையில் புதிய சாதனை படைத்தது ஹூண்டாய்... கிரெட்டாவிற்குதான் நன்றி சொல்லணும்...

ஹூண்டாய் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் இந்திய சந்தையில் 56,605 கார்களை விற்பனை செய்துள்ளது. இதுதான் ஹூண்டாய் நிறுவனத்தால் உள்நாட்டில் ஒரு மாதத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச விற்பனை எண்ணிக்கையாகும். இதுதவிர தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆலையில் இருந்து ஹூண்டாய் நிறுவனம் கடந்த மாதம் 12,230 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது.

விற்பனையில் புதிய சாதனை படைத்தது ஹூண்டாய்... கிரெட்டாவிற்குதான் நன்றி சொல்லணும்...

இதன் மூலம் ஒட்டுமொத்தமாக (உள்நாடு + ஏற்றுமதி) கடந்த அக்டோபர் மாதம் 68,835 கார்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த எண்ணிக்கை 63,610 ஆக மட்டுமே இருந்தது. அதாவது ஹூண்டாய் நிறுவன கார்களின் ஒட்டுமொத்த விற்பனை 8.2 சதவீதம் உயர்ந்துள்ளது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

விற்பனையில் புதிய சாதனை படைத்தது ஹூண்டாய்... கிரெட்டாவிற்குதான் நன்றி சொல்லணும்...

முன்னதாக கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹூண்டாய் நிறுவனம் 52,000 கார்களை விற்பனை செய்திருந்தது. இதுவே இதற்கு முன்பாக ஹூண்டாய் நிறுவனம் ஒரு மாதத்தில் பதிவு செய்த அதிகபட்ச விற்பனை எண்ணிக்கையாகும். ஆனால் நடப்பாண்டு அக்டோபர் மாதம் ஹூண்டாய் நிறுவனம் உள்நாட்டில் 56,605 கார்களை விற்பனை செய்துள்ளது.

விற்பனையில் புதிய சாதனை படைத்தது ஹூண்டாய்... கிரெட்டாவிற்குதான் நன்றி சொல்லணும்...

இந்த எண்ணிக்கை கடந்த 2019ம் ஆண்டு அக்டோபரில் 50,010 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் ஹூண்டாய் நிறுவனம் 13.2 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஹூண்டாய் நிறுவனம் இந்த பிரம்மாண்டமான சாதனையை படைப்பதற்கு கிரெட்டா மற்றும் கிராண்ட் ஐ10 நியோஸ் ஆகிய கார்கள் முக்கியமான பங்களிப்பை வழங்கியுள்ளன.

விற்பனையில் புதிய சாதனை படைத்தது ஹூண்டாய்... கிரெட்டாவிற்குதான் நன்றி சொல்லணும்...

கடந்த அக்டோபர் மாதத்தில் இந்த இரண்டு கார்களும் ஒவ்வொன்றும் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளன. கடந்த அக்டோபர் மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார் ஹூண்டாய் கிரெட்டதான். 14,023 கிரெட்டா கார்களை ஹூண்டாய் நிறுவனம் கடந்த மாதம் விற்பனை செய்துள்ளது.

விற்பனையில் புதிய சாதனை படைத்தது ஹூண்டாய்... கிரெட்டாவிற்குதான் நன்றி சொல்லணும்...

இதற்கு அடுத்த இடத்தில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் உள்ளது. 14,002 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் கார்களை கடந்த மாதம் ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. மூன்றாவது இடத்தில் ஹூண்டாய் வெனியூ உள்ளது. 8,828 வெனியூ கார்களை ஹூண்டாய் நிறுவனம் கடந்த அக்டோபரில் விற்பனை செய்துள்ளது.

விற்பனையில் புதிய சாதனை படைத்தது ஹூண்டாய்... கிரெட்டாவிற்குதான் நன்றி சொல்லணும்...

நான்காவது இடத்தில் ஹூண்டாய் எலைட் ஐ20 காரும் (8,399), 5வது இடத்தில் ஹூண்டாய் அவ்ரா காரும் (5,677), 6வது இடத்தில் ஹூண்டாய் சாண்ட்ரோ காரும் (3,463), 7வது இடத்தில் ஹூண்டாய் வெர்னா காரும் (2,166) உள்ளன. இதுதவிர ஹூண்டாய் நிறுவனம் 87 டூஸான் கார்களையும், 46 எலாண்ட்ரா கார்களையும், 13 கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களையும் விற்பனை செய்துள்ளது.

விற்பனையில் புதிய சாதனை படைத்தது ஹூண்டாய்... கிரெட்டாவிற்குதான் நன்றி சொல்லணும்...

இந்தியாவில் கொரோனா வைரஸ் பிரச்னையால் ஏற்பட்ட சரிவிற்கு பின் சமீப காலமாகததன் கார்களின் விற்பனை உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய பண்டிகை காலமும், கொரோனா வைரஸ் அச்சத்தால் பொதுமக்கள் பேருந்து போன்ற பொது போக்குவரத்தை தவிர்த்து விட்டு சொந்த கார்களில் பயணம் செய்ய விரும்புவதுமே இதற்கு முக்கியமான காரணங்களாக பார்க்கப்படுகின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 17, 2020, 5:30 [IST]
English summary
Hyundai Sales in October 2020. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+