ஹூண்டாய் சான்ட்ரோ பிஎஸ்-6 மாடலின் விபரங்கள் வெளியானது

ஹூண்டாய் சான்ட்ரோ பிஎஸ்-6 மாடலின் முக்கிய விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹூண்டாய் சான்ட்ரோ பிஎஸ்-6 மாடலின் விபரங்கள் வெளியானது

பட்ஜெட் கார் மார்க்கெட்டில் புதிய தலைமுறை ஹூண்டாய் சான்ட்ரோ கார் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இடவசதி, வசதிகள், விலை என அனைத்திலும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை இந்த கார் பூர்த்தி செய்வதால், விற்பனையிலும் நல்ல எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.

ஹூண்டாய் சான்ட்ரோ பிஎஸ்-6 மாடலின் விபரங்கள் வெளியானது

இந்த நிலையில், வரும் ஏப்ரல் 1 முதல் புதிய பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருப்பதையடுத்து, ஹூண்டாய் சான்ட்ரோ காரின் 1.1 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாறுதல்கள் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஹூண்டாய் சான்ட்ரோ பிஎஸ்-6 மாடலின் விபரங்கள் வெளியானது

ஹூண்டாய் சான்ட்ரோ காரின் பெட்ரோல் எஞ்சினில் மாறுதல்கள் செய்யப்பட்டாலும், பவரை வெளிப்படுத்தும் திறனில் எந்த மாற்றமும் இருக்காது. அதாவது, தற்போதுள்ள 69 எச்பி பவரையும், 99 என்எம் டார்க் திறனையும் வழங்கும் அதே திறனுடன் விற்பனைக்கு வரும்.

ஹூண்டாய் சான்ட்ரோ பிஎஸ்-6 மாடலின் விபரங்கள் வெளியானது

இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் தொடர்ந்து வழங்கப்படும். மேலும், அனைத்து வேரியண்ட்டுகளிலும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஹூண்டாய் சான்ட்ரோ பிஎஸ்-6 மாடலின் விபரங்கள் வெளியானது

பிஎஸ்-6 எஞ்சின் மட்டுமின்றி, வெளிப்புற மற்றும் உட்புற டிசைன் அம்சங்களில் சிறிய மாறுதல்களை எதிர்பார்க்கலாம். க்ரில் அமைப்பு, ஹெட்லைட் டிசைன் மற்றும் உட்புறத்திலும் சிறிய அளவிலான மாறுதல்களும், கூடுதல் அலங்கார அம்சங்கள் கொடுக்கப்படும் வாய்ப்புள்ளது.

ஹூண்டாய் சான்ட்ரோ பிஎஸ்-6 மாடலின் விபரங்கள் வெளியானது

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரில் டியூவல் டோன் இன்டீரியர், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா, ரியர் வாஷ் வைப்பர் ஆகியவை எதிர்பார்க்கப்படுகிறது.

MOST READ: மகிழ்ச்சியில் மோடி அரசு.. எதிர்பார்த்ததைவிட அதிக கல்லா கட்டும் ஃபாஸ்ட் டேக்! டிசம்பர் வசூல் எவ்வளவு?

ஹூண்டாய் சான்ட்ரோ பிஎஸ்-6 மாடலின் விபரங்கள் வெளியானது

மேலும், 7.0 அங்குல தொடுதிரையுடன் வரும் இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதியையும் அளிக்கும்.

MOST READ: ஆவிகளின் லாரியிடம் தப்பித்தால் அமானுஷ்ய மிருகங்கள் கொல்ல வரும்... நரகத்திற்கு கூட்டி செல்லும் சாலை

ஹூண்டாய் சான்ட்ரோ பிஎஸ்-6 மாடலின் விபரங்கள் வெளியானது

பவர் அட்ஜெஸ்ட் வசதியுடன் சைடு மிரர்கள், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் ஆகியவையும் இந்த காரின் பிற முக்கிய விஷயங்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

MOST READ: 5 வருடங்கள் காத்திருந்தே ஆக வேண்டும்.. பென்ட்லீ தகவலால் அதிருப்தி.. இதுதான் உங்க டக்கா ஜி...!

ஹூண்டாய் சான்ட்ரோ பிஎஸ்-6 மாடலின் விபரங்கள் வெளியானது

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் மிக விரைவில் சந்தைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி பட்ஜெட் கார்களுக்கு அடுத்து பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட சிறந்த தேர்வாக இருக்கும்.

ஹூண்டாய் சான்ட்ரோ பிஎஸ்-6 மாடலின் விபரங்கள் வெளியானது

பிஎஸ்-6 எஞ்சினுடன் வரும் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் விலை சற்று கூடுதலாக நிர்ணயிக்கப்படும். டாடா டியாகோ, மாருதி சுஸுகி வேகன் ஆர் கார்களுடன் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் போட்டி போடும்.

Via - Autocarindia

Most Read Articles

English summary
According to reports, Hyundai Motors is all set to launch the Santro car with BS6-compliant engine in India very soon.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X