சாண்ட்ரோ ஹேட்ச்பேக் காரின் பலத்தை கூட்டியது ஹூண்டாய்... இரு புதிய சிஎன்ஜி எடிசன்கள் அறிமுகம்...

ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் அதன் எண்ட்ரீ-லெவல் ஹேட்ச்பேக் காரான சாண்ட்ரோவிற்கு இரு புதிய ட்ரிம் நிலைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ட்ரிம்களை பற்றி ரஷ்லேன் செய்திதளம் வெளியிட்டுள்ள விபரங்களை விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

சாண்ட்ரோ ஹேட்ச்பேக் காரின் பலத்தை கூட்டியது ஹூண்டாய்... இரு புதிய சிஎன்ஜி எடிசன்கள் அறிமுகம்...

ஹூண்டாய் சாண்ட்ரோவிற்கு வழங்கப்பட்டுள்ள இந்த இரு ட்ரிம்களும் சிஎன்ஜி என்ஜின் மூலமாக இயங்கக்கூடியவை. இவற்றிற்கு மேக்னா எக்ஸிக்யூட்டிவ் சிஎன்ஜி மற்றும் ஸ்போர்ட்ஸ் எக்ஸிக்யூட்டிவ் சிஎன்ஜி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சாண்ட்ரோ ஹேட்ச்பேக் காரின் பலத்தை கூட்டியது ஹூண்டாய்... இரு புதிய சிஎன்ஜி எடிசன்கள் அறிமுகம்...

இந்த புதிய அறிமுகங்களினால் சாண்ட்ரோவிற்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த மேக்னா சிஎன்ஜி மற்றும் ஸ்போர்ட்ஸ் சிஎன்ஜி என்ற இரு வேரியண்ட்களின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த ட்ரிம்களின் அடிப்படையில்தான் புதிய எக்ஸிக்யூட்டிவ் ட்ரிம்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சாண்ட்ரோ ஹேட்ச்பேக் காரின் பலத்தை கூட்டியது ஹூண்டாய்... இரு புதிய சிஎன்ஜி எடிசன்கள் அறிமுகம்...

குறிப்பாக மேக்னா எக்ஸிக்யூட்டிவ் சிஎன்ஜி ட்ரிம், முந்தைய மேக்னா ட்ரிம்மின் வசதிகளை பெற்றது மட்டுமில்லாமல் அதன் எக்ஸ்ஷோரூம் விலையையும் அப்படியே பெற்று வந்துள்ளது. மேலும் வழக்கம்போல் மேக்னா எக்ஸிக்யூட்டிவ் சிஎன்ஜி ட்ரிம்-ஐ காட்டிலும் ஸ்போர்ட்ஸ் எக்ஸிக்யூட்டிவ் சிஎன்ஜி ட்ரிம்மில் சில கூடுதல் வசதிகள் வழங்கப்பட்டிருக்கும்.

சாண்ட்ரோ ஹேட்ச்பேக் காரின் பலத்தை கூட்டியது ஹூண்டாய்... இரு புதிய சிஎன்ஜி எடிசன்கள் அறிமுகம்...

புதியதாக சேர்க்கப்பட்டுள்ள ஸ்போர்ட்ஸ் எக்ஸிக்யூட்டிவ் சிஎன்ஜி ட்ரிம் கூடுதலாக 6.95 இன்ச்சில் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடிய தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை பெற்றுள்ளது. ஸ்மார்ட்போன் நாவிகேஷன் வசதியும் இந்த இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

சாண்ட்ரோ ஹேட்ச்பேக் காரின் பலத்தை கூட்டியது ஹூண்டாய்... இரு புதிய சிஎன்ஜி எடிசன்கள் அறிமுகம்...

அதுவே மேக்னா எக்ஸிக்யூட்டிவ் சிஎன்ஜி ட்ரிம்மில் இந்த இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கு மாற்றாக ப்ளூடூத் இணைப்புடன் இரு ஸ்பீக்கர்களை கொண்ட 2-டின் ஸ்டேரியோ சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கும். ஸ்டேரிங்கில் ஆடியோ கண்ட்ரோல்கள் இருக்கும்.

சாண்ட்ரோ ஹேட்ச்பேக் காரின் பலத்தை கூட்டியது ஹூண்டாய்... இரு புதிய சிஎன்ஜி எடிசன்கள் அறிமுகம்...

ஸ்போர்ட்ஸ் எக்ஸிக்யூட்டிவ் சிஎன்ஜி ட்ரிம்-ஐ பொருத்தவரையில் இதன் விலை அதிகமான வேரியண்ட் எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பின்பக்கம் பார்க்கும் பக்கவாட்டு கண்ணாடி மற்றும் இரவு/பகல் என அனைத்து வேளைகளிம் இயங்கும் ஐஆர்விஎம் உள்ளிட்டவற்றையும் பெற்றுள்ளது.

சாண்ட்ரோ ஹேட்ச்பேக் காரின் பலத்தை கூட்டியது ஹூண்டாய்... இரு புதிய சிஎன்ஜி எடிசன்கள் அறிமுகம்...

மேலும் புதிய ஸ்போர்ட்ஸ் ட்ரிம்மில் வழங்கப்பட்டுள்ள பின்பக்கம் பார்க்கும் பக்கவாட்டு கண்ணாடிகள் ஒருங்கிணைக்கப்பட்ட சைடு டர்ன் இண்டிகேட்டர்களையும் கொண்டிருக்கும். மேற்கூறப்பட்டவை தவிர்த்து தற்போது புதியதாக இணைந்துள்ள இரு ட்ரிம்களுக்கு இடையில் வேறெந்த மாற்றமும் இல்லை.

சாண்ட்ரோ ஹேட்ச்பேக் காரின் பலத்தை கூட்டியது ஹூண்டாய்... இரு புதிய சிஎன்ஜி எடிசன்கள் அறிமுகம்...

இரண்டு வேட்ரியண்ட்களும் அதிகப்பட்சமாக 59.18 பிஎச்பி மற்றும் 85.32 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 1.1 லிட்டர் என்ஜினை 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் பெற்றுள்ளன. அதுவே ஸ்டிக் பெட்ரோல் வடிவத்தில் இந்த என்ஜின் மூலமாக 68 பிஎச்பி மற்றும் 99 என்எம் டார்க் திறனை வரையில் பெற முடியும். மேலும் இந்த வடிவத்தில் கூடுதலாக 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வையும் பெறலாம்.

சாண்ட்ரோ ஹேட்ச்பேக் காரின் பலத்தை கூட்டியது ஹூண்டாய்... இரு புதிய சிஎன்ஜி எடிசன்கள் அறிமுகம்...

மேக்னா எக்ஸிக்யூட்டிவ் சிஎன்ஜி ட்ரிம்மின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.5.87 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஹூண்டாய் சாண்ட்ரோவின் முந்தைய மேக்னா சிஎன்ஜி ட்ரிம்-ஐ காட்டிலும் வெறும் ரூ.1,800 மட்டுமே அதிகமாகும். ஸ்போர்ட்ஸ் எக்ஸிக்யூட்டிவ் சிஎன்ஜி ட்ரிம்மின் ஆரம்ப விலை ரூ.5.99 லட்சமாக ஹூண்டாய் நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

சாண்ட்ரோ ஹேட்ச்பேக் காரின் பலத்தை கூட்டியது ஹூண்டாய்... இரு புதிய சிஎன்ஜி எடிசன்கள் அறிமுகம்...

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்த விலை ஸ்போர்ட்ஸ் சிஎன்ஜி ட்ரிம்-ஐ காட்டிலும் சில பத்தாயிரங்கள் குறைவாகும். ஏனெனில் அதன் விலை ரூ.6.2 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. புதிய ஸ்போர்ட்ஸ் எக்ஸிக்யூட்டிவ் சிஎன்ஜி ட்ரிம் முந்தைய ட்ரிம்மில் இருந்து இழந்துள்ள அம்சம் என்று பார்த்தால், பின்பக்க டீஃபாக்கர் ஆகும்.

Most Read Articles

English summary
Hyundai Santro CNG Executive Edition Launched – Price Rs 5.87 Lakh
Story first published: Wednesday, October 7, 2020, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X