அநேகரின் கண்களை கவர்ந்த ஹூண்டாய் லீ ஃபில் ரோக்... முதல் முறையாக முழு தரிசனம்... சிறப்பு தகவல்!
ஹூண்டாய் நிறுவனத்தின் லீ ஃபில் ரோக் காரின் கான்செப்ட் இந்திய வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார்குறித்த கூடுதல் சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

2020ம் ஆண்டிற்கான ஆட்டோ எக்ஸ்போ நொய்டாவில் நடைபெற்று வருகின்றது. இங்கு உலகளாவிய வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதன் புத்தம் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றன. அந்தவகையில், விரைவில் அறிமுகமாக கூடிய மற்றும் எதிர்கால கார்கள் தங்களின் தரிசனத்தை வழங்கி வருகின்றன.
இந்நிலையில், ஹூண்டாய் நிறுவனத்தின் எதிர்கால காரும் தற்போது ஆட்டோ எக்ஸ்போவில் காட்சியை வழங்கியிருக்கின்றது.

லீ ஃபில் ரோக் என்றழைக்கப்படும் இந்த கார் கான்செப்ட் மாடலாக இந்தியர்களுக்கு தரிசனத்தை வழங்கியுள்ளது. இந்த கார் 2018ம் ஆண்டு நடைபெற்ற ஜெனிவா மோட்டார் ஷோவில் எச்டிசி-1 என்ற பெயரில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது.
இந்த காரின் தோற்றம் எதிர்கால டிசைன் தாத்பரியங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனாலயே கண்காட்சியில் பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்தது.

குறிப்பாக இந்த மின்சார காருக்கு ஸ்போர்ட்டி டிசைனை ஹூண்டாய் பயன்படுத்தியிருக்கின்றது. இதுமாதிரியான செயல்பாட்டைதான் கோனா எலெக்ட்ரிக், நெக்ஸோ மற்றும் சேன்டா எஃப்இ எஸ்யூவி கார்களில் அது பயன்படுத்தியுள்ளது.

இந்த கான்செப்ட் காருக்கு தனித்துவமான தோற்றத்தை வழங்க வேண்டும் என்பதற்காக ஹூண்டாய் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, காரின் முன்பகுதியில் நீளமான க்ரில் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இந்த க்ரில் அமைப்பிலேயே காருக்கான ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது. இது காருக்கு ஸ்போர்ட்டியான லுக்கை மட்டுமின்றி மிகவும் கவர்ச்சியான பார்வையை வழங்குகின்றது.

இதுமட்டுமின்றி, கூடுதலாக ஸ்போர்ட்டி லுக்கிற்காக லாங் வீல் பேஸ், லேசான கூப் ஸ்டைல் மற்றும் கட்டுமஸ்தான உடல்வாகு உள்ளிட்டவை இந்த காருக்கு வழங்கப்பட்டுள்ளது.

காரின் வெளிப்புற தோற்றத்தைப் போலவே உட்புறத்திலும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக காருக்கான இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மையப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மரத்திலான டேஸ்போர்ட், சௌகரியமான இருக்கை வசதி உள்ளிட்ட அமைப்புகள் கூடுதல் பிரிமியம் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.

இந்த கான்செப்ட் காரில் இடம்பெற்றிருக்கும் அதிகபட்ச அம்சங்கள் சொனாட்டா செடான் காரில் இடம்பெற்றிருப்பைவயாகவே இருக்கின்றன.
இந்த சொனாட்டா கார் கடந்த 2019ம் ஆண்டு நியூயார்கில் நடைபெற்ற ஆட்டோ கண்காட்சியில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த கார் தற்போது எட்டாம் தலைமுறை மாடலாக சந்தையில் விற்பனையில் இருக்கின்றது. இந்த அப்கிரேஷன் வாயிலாக ஸ்போர்ட்டி லுக், கூப் கார்களின் தோற்றம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆகையால், இந்த கார் தற்போது ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கான்செப்ட் காருக்கு முன்னோடியாக திகழ்கின்றது.


Click it and Unblock the Notifications








