ஆட்டோ எக்ஸ்போவில் அட்டகாசமான பட்ஜெட் எஸ்யூவி கான்செப்ட்டை வெளியிடுகிறது ஹூண்டாய்!

ஹூண்டாய் நிறுவனம் புதிய மைக்ரோ எஸ்யூவி மாடலை விரைவில் இந்தியாவில் வெளியிட திட்டமிட்டுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆட்டோ எக்ஸ்போவில் அட்டகாசமான பட்ஜெட் எஸ்யூவி கான்செப்ட்டை வெளியிடுகிறது ஹூண்டாய்!

பட்ஜெட் கார் மார்க்கெட்டிலும் எஸ்யூவி ரக கார்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. எஸ்யூவி ஸ்டைலில் வெளியிடப்பட்ட ரெனோ க்விட் மற்றும் மாருதி எஸ் பிரெஸ்ஸோ உள்ளிட்ட கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மறுபுறத்தில் ஹேட்ச்பேக் ரகத்திலான பட்ஜெட் கார்களுக்கான வரவேற்பும் மெல்ல சுருங்கத் துவங்கி இருக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் அட்டகாசமான பட்ஜெட் எஸ்யூவி கான்செப்ட்டை வெளியிடுகிறது ஹூண்டாய்!

இதனை மனதில் வைத்து, ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் புத்தம் புதிய மைக்ரோ எஸ்யூவி மாடலை இந்தியாவில் களமிறக்க திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னோட்டமாக, புதிய மைக்ரோ எஸ்யூவி கான்செப்ட் மாடலை விரைவில் துவங்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிட உள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் அட்டகாசமான பட்ஜெட் எஸ்யூவி கான்செப்ட்டை வெளியிடுகிறது ஹூண்டாய்!

ஹூண்டாய் AX என்ற பெயரில் இந்த புதிய மைக்ரோ எஸ்யூவி கான்செப்ட் வர இருக்கிறது. மைக்ரோ எஸ்யூவி என்பது, மாருதி எஸ் பிரெஸ்ஸோ மற்றும் விரைவில் வர இருக்கும் டாடா ஹார்ன்பில் போன்ற மாடல்களுக்கு நிகரான வடிவத்திலும், விலையிலும் இருக்கும்.

ஆட்டோ எக்ஸ்போவில் அட்டகாசமான பட்ஜெட் எஸ்யூவி கான்செப்ட்டை வெளியிடுகிறது ஹூண்டாய்!

புதிய ஹூண்டாய் ஏஎக்ஸ் மைக்ரோ எஸ்யூவி மாடலானது சான்ட்ரோ கார் உருவாக்கப்பட்ட கே1 கட்டமைப்புக் கொள்கையின் கீழ்தான் உருவாக்கப்பட இருக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் அட்டகாசமான பட்ஜெட் எஸ்யூவி கான்செப்ட்டை வெளியிடுகிறது ஹூண்டாய்!

எனவே, ஹூண்டாய் சான்ட்ரோ காரில் பயன்படுத்தப்படும் 1.1 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் புதிய ஏஎக்ஸ் கான்செப்ட் அடிப்படையிலான பட்ஜெட் எஸ்யூவியிலும் இடம்பெறுவது உறுதியாகி இருக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் அட்டகாசமான பட்ஜெட் எஸ்யூவி கான்செப்ட்டை வெளியிடுகிறது ஹூண்டாய்!

ஹூண்டாய் சான்ட்ரோ கார் போன்றே, இந்த புதிய பட்ஜெட் எஸ்யூவியிலும் மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் இந்த காரில் எதிர்பார்க்கலாம்.

ஆட்டோ எக்ஸ்போவில் அட்டகாசமான பட்ஜெட் எஸ்யூவி கான்செப்ட்டை வெளியிடுகிறது ஹூண்டாய்!

ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட் மாடலாக காட்சிப்படுத்தப்பட இருக்கும் இந்த கார் அடுத்த ஆண்டு தயாரிப்பு நிலை மாடலாக இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

ஆட்டோ எக்ஸ்போவில் அட்டகாசமான பட்ஜெட் எஸ்யூவி கான்செப்ட்டை வெளியிடுகிறது ஹூண்டாய்!

இந்த புதிய மாடல் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தகத்தில் மிக முக்கிய மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஏனெனில், புதிய தலைமுறை சான்ட்ரோ காருக்கு துணையாக இந்த புதிய மைக்ரோ எஸ்யூவி மூலமாக பட்ஜெட் கார் மார்க்கெட்டில் குறிப்பிடத்தக்க விற்பனை எண்ணிக்கையை பெற முடியும்.

ஆட்டோ எக்ஸ்போவில் அட்டகாசமான பட்ஜெட் எஸ்யூவி கான்செப்ட்டை வெளியிடுகிறது ஹூண்டாய்!

புதிய ஹூண்டாய் ஏஎக்ஸ் கான்செப்ட் அடிப்படையில் உருவாக்கப்படும் புதிய மைக்ரோ எஸ்யூவி மாடலானது இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.

ஆட்டோ எக்ஸ்போவில் அட்டகாசமான பட்ஜெட் எஸ்யூவி கான்செப்ட்டை வெளியிடுகிறது ஹூண்டாய்!

புதிய ஹூண்டாய் ஏஎக்ஸ் கான்செப்ட் கார் அடிப்படையிலான எஸ்யூவிக்கு ரூ.4.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்படும்.

Article Published On: Saturday, January 25, 2020, 12:11 [IST]
English summary
According to report, South Korean car maker Hyundai Motors is all set to reveal new micro SUV concept at 2020 Auto Expo.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+