புதிய பெயரில் இந்தியாவில் அறிமுகமாகிறது 7 சீட்டர் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி?

புதிய எஸ்யூவி மாடலுக்கான பெயரை பயன்படுத்த இந்தியாவில் காப்புரிமை பெற்றிருக்கிறது ஹூண்டாய் மோட்டார் நிறுவனம். அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

இந்தியாவில் புதிய எஸ்யூவி பெயருக்கு காப்புரிமை பெற்றது ஹூண்டாய்!

நாட்டின் இரண்டாவது பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக விளங்கும் ஹூண்டாய் மோட்டார் புதிய கார் மாடல்களை இந்தியாவில் கொண்டு வருவதில் முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில், புத்தம் புதிய எஸ்யூவி மாடலை கொண்டு வருவதற்கான திட்டத்தை அந்நிறுவனம் கையில் வைத்துள்ளது.

இந்தியாவில் புதிய எஸ்யூவி பெயருக்கு காப்புரிமை பெற்றது ஹூண்டாய்!

இதனை உறுதிப்படுத்தும் விதத்தில், அல்கஸர் என்ற புதிய பெயருக்கு இந்தியாவில் காப்புரிமை பெற்றிருக்கிறது ஹூண்டாய். மேலும், இது ஸ்போர்ட்ஸ் யுட்டிலிட்டி வகை கார் மாடலாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. கடந்த ஏப்ரல் 13ந் தேதி அல்கஸர் எஸ்யூவி பெயர் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆவணங்கள் மோட்டார்பீம் தளம் மூலமாக தற்போது வெளியாகி இருக்கின்றன.

இந்தியாவில் புதிய எஸ்யூவி பெயருக்கு காப்புரிமை பெற்றது ஹூண்டாய்!

அல்கஸர் என்ற பெயரில் எந்த எஸ்யூவி மாடலையும் ஹூண்டாய் வெளிநாடுகளில் விற்பனை செய்யவில்லை. எனவே, இது நிச்சயமாக 7 சீட்டர் க்ரெட்டா எஸ்யூவிக்கான புதிய பெயராக இருக்க வேண்டும் என்ற கருதப்படுகிறது. மேலும், தற்போது 7 சீட்டர் க்ரெட்டா எஸ்யூவி இந்தியாவில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருவதால், அல்கஸர் என்பது 7 சீட்டர் க்ரெட்டதான் என்று உறுதியாக நம்பப்படுகிறது.

இந்தியாவில் புதிய எஸ்யூவி பெயருக்கு காப்புரிமை பெற்றது ஹூண்டாய்!

அடுத்த ஆண்டு துவக்கத்தில் 7 சீட்டர் க்ரெட்டா எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த புதிய மாடல் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்தியாவில் புதிய எஸ்யூவி பெயருக்கு காப்புரிமை பெற்றது ஹூண்டாய்!

க்ரெட்டா அடிப்படையிலான 7 சீட்டர் மாடலாக இருந்தாலும் பல்வேறு வேறுபாடுகளை இந்த புதிய எஸ்யூவி பெற்றிருக்கும். ஹூண்டாய் பேலிசேடு எஸ்யூவியின் டிசைன் அம்சங்களுடன் இந்த புதிய 7 சீட்டர் க்ரெட்டா எஸ்யூவி வரும் என்று தெரிகிறது. க்ரில், பம்பர், ஹெட்லைட் க்ளஸ்ட்டர்களில் ஆகியற்றில் குறிப்பிடத்தக்க டிசைன் மாறுதல்கள் இருக்கும்.

இந்தியாவில் புதிய எஸ்யூவி பெயருக்கு காப்புரிமை பெற்றது ஹூண்டாய்!

அதேபோன்று, உட்புறமும் மிகவும் பிரிமீயம் அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டதாக இருக்கும். இந்த காரில் 3 வரிசை இருக்கை அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கும். 360 டிகிரி கேமரா, ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், முன்புற பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்டவை இதில் இடம்பெற்றிருக்கின்றன.

இந்தியாவில் புதிய எஸ்யூவி பெயருக்கு காப்புரிமை பெற்றது ஹூண்டாய்!

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியில் வழங்கப்படும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படும்.

இந்தியாவில் புதிய எஸ்யூவி பெயருக்கு காப்புரிமை பெற்றது ஹூண்டாய்!

ஹூண்டாய் க்ரெட்டா 5 சீட்டர் மாடலைவிட 7 சீட்டர் மாடல் ரூ.2 லட்சம் வரை கூடுதல் விலையில் விற்பனைக்கு வரும் வாய்ப்புள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி500, எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 23, 2020, 12:30 [IST]
English summary
As per the leaked document, Hyundai has a trademarked Alcazar SUV name in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+