புதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்

புதுப்பொலிவுடன் கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட புதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய ஹூண்டாய் டூஸான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்

மிட்சைஸ் எஸ்யூவி கார் மார்க்கெட்டில் பிரிமீயம் மாடலாக ஹூண்டாய் டூஸான் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், கடும் சந்தைப் போட்டி இருப்பதை மனதில் வைத்து வடிவமைப்பிலும், வசதிகளிலும் ஹூண்டாய் டூஸான் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய ஹூண்டாய் டூஸான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், கொரோனா பிரச்னை காரணமாக, இந்த புதிய மாடல் அறிமுகத்தில் சிறிய கால தாமதம் ஏற்பட்ட நிலையில், இன்று முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

புதிய ஹூண்டாய் டூஸான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்

புதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலானது குறிப்பிடத்தக்க மாறுதல்களுடன் வந்துள்ளது. குறிப்பாக, முகப்பில் புதிய க்ரில் அமைப்பு, எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய பனி விளக்குகள், புதிய 18 அங்குல அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகளுடன் அட்டகாசமாக மாறி இருக்கிறது.

புதிய ஹூண்டாய் டூஸான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்

உட்புறத்திலும் பல மாற்றங்களுடன் புதுப்பொலிவு பெற்றிருக்கிறது. தற்போது 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தையும், உரிமையாளரின் ஸ்மார்ட்ஃபோனையும் புளூலிங்க் செயலியுடன் இணைய வசதி மூலமாக இணைக்கும் கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

புதிய ஹூண்டாய் டூஸான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்

இந்த புதிய மாடலில் புஷ் பட்டன் ஸ்டார்ட், எலெக்ட்ரிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் வைப்பர் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

புதிய ஹூண்டாய் டூஸான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்

ஸ்மார்ட் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், மலைச் சாலையில் காரை நிறுத்தி எடுக்கும்போது பின்னோக்கி நகர்வதை தவிர்க்கும் ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், முன்புற மோதலை தவிர்க்கும் ஃபார்வர்டு கொலிஷன் அவாய்டன்ஸ் அசிஸ்ட், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஏர்பேக்குகள் ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன.

புதிய ஹூண்டாய் டூஸான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்

புதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 153 பிஎச்பி பவரையும், 192 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

புதிய ஹூண்டாய் டூஸான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்

டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 182 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய ஹூண்டாய் டூஸான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்

புதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி ரூ.22.30 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஸ்கோடா கரோக், ஃபோக்ஸ்வேகன் டி ராக், ஜீப் காம்பஸ் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 14, 2020, 13:30 [IST]
English summary
Hyundai has launched Tucson Facelift model with BS6 compliant engine options in India and prices starting at Rs.22.30 Lakh (Ex-showroom).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+