ஹூண்டாய் டூஸான் ஃபேஸ்லிஃப்ட் கார் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்...!

2020 ஹூண்டாய் டூஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கார், தற்சமயம் டெல்லியில் நடைபெற்றுவரும் ஆட்டோ எக்ஸ்போ மூலமாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய காரில் வழங்கப்பட்டுள்ள அப்டேட்களை இந்த செய்தியில் விரிவாக காண்போம்.

ஹூண்டாய் டூஸான் ஃபேஸ்லிஃப்ட் கார் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்...!

ஹூண்டாய் நிறுவனம் முதன்முதலாக கடந்த 2018ல் நியூ யார்க்கில் நடைபெற்ற மோட்டார் கண்காட்சியில் புதிய டூஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலை காட்சிக்காக வைத்திருந்தது. அதன்பின் இரண்டு வருடங்கள் கழித்து தற்போது ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் இந்த கார் இந்திய வாடிக்கையாளர்களை சந்தித்துள்ளது.

ஹூண்டாய் டூஸான் ஃபேஸ்லிஃப்ட் கார் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்...!

என்ஜின் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்டது மட்டுமில்லாமல், இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ஏகப்பட்ட நவீன தொழிற்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய டூஸான் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனின் முன்புறம், கூர்மையான ஹெட்லைட்களை தன் இரு முனைகளில் கொண்ட க்ரில் பகுதியை கொண்டுள்ளது.

ஹூண்டாய் டூஸான் ஃபேஸ்லிஃப்ட் கார் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்...!

க்ரில் உடன் பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய எல்-வடிவிலான எல்இடி விளக்குகள் மற்றும் ஃபாக் விளக்குகளை பொருத்துவதற்காக இரு குழிகளுடன் திருத்தியமைக்கப்பட்ட டிசைனில் பம்பர் உள்ளிட்டவையும் இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் டூஸான் ஃபேஸ்லிஃப்ட் கார் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்...!

பின்புறத்தில், புதிய டிசைனில் டெயில்லைட் க்ளஸ்ட்டர், நம்பர் ப்ளேட்டிற்கு இணையாக பொருத்தப்பட்ட புதிய ஒளி எதிரொலிப்பான்கள் போன்ற அப்டேட் செய்யப்பட்ட பாகங்கள் உள்ளன. இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் உட்புறத்தில், 8-இன்ச்சில் சுழலும் வகையிலான திரையை கொண்ட புதிய இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் உள்ள சென்டர் கன்சோலை பெற்றுள்ளது.

ஹூண்டாய் டூஸான் ஃபேஸ்லிஃப்ட் கார் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்...!

இந்த இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலிற்கு முன்னால் உள்ள ஸ்டேரிங் சக்கரமும் அப்டேட்டை பெற்றுள்ளது. இரண்டாவது இருக்கை வரிசையிலும் யூஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட்ஸ், வயர்லெஸ் மொபைல் போன் சார்ஜிங், 360 டிகிரி கேமிரா மற்றும் பனோராமிக் சன்ரூஃப் உள்ளிட்டவை இந்த 2020 ஃபேஸ்லிஃப்ட் மாடலில் உட்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ள அம்சங்களாகும்.

ஹூண்டாய் டூஸான் ஃபேஸ்லிஃப்ட் கார் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்...!

ஹூண்டாய் வென்யூ மாடலை போன்று இந்த டூஸான் ஃபேஸ்லிஃப்ட்டிலும் ஹூண்டாய் நிறுவனத்தின் ப்ளூ லிங்க் தொழிற்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு தொழிற்நுட்பங்களாக இந்த காரில், முன்புற மோதலை எச்சரிக்கும் வசதி, லேன்-கீப்பிங் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை உள்ளன.

ஹூண்டாய் டூஸான் ஃபேஸ்லிஃப்ட் கார் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்...!

2020 டூஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், தற்போதைய டூஸான் மாடலில் உள்ள 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகள் பிஎஸ்6 தரத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் பெட்ரோல் என்ஜின் பிஎஸ்4 தரத்தில் 155 பிஎச்பி பவரையும், 192 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தியது.

ஹூண்டாய் டூஸான் ஃபேஸ்லிஃப்ட் கார் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்...!

டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 185 பிஎச்பி பவர் மற்றும் 400 என்எம் டார்க் திறனை காருக்கு வழங்கி வந்தது. பிஎஸ்6 அப்டேட்டினால் என்ஜினின் இந்த வெளியிடும் ஆற்றல் அளவுகளில் மாற்றம் இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஹூண்டாய் டூஸான் ஃபேஸ்லிஃப்ட் கார் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்...!

ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக இதன் என்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படவுள்ளன. டூஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டாப் வேரியண்ட்டான டீசல் ஆட்டோமேட்டிக் மாடலில் மட்டும் கூடுதலாக ஆல் வீல் ட்ரைவ் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. அறிமுகத்திற்கு பிறகு டூஸான் மாடலின் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் ஜீப் காம்பஸ், டாடா ஹெரியர், எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ் போன்றவைகளுடன் போட்டியிடவுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 5, 2020, 20:29 [IST]
English summary
Hyundai Tucson Unveiled At Auto Expo
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+