ஹூண்டாய் கார்களுக்கு சிறப்பு கடன் திட்டங்கள் அறிமுகம்!

புதிய கார்களுக்கு 5 விதமான சிறப்பு கடன் திட்டங்களை ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

ஹூண்டாய் கார்களுக்கு சிறப்பு கடன் திட்டங்கள் அறிமுகம்!

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகளில் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. வர்த்தகம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்து வருகிறது.

ஹூண்டாய் கார்களுக்கு சிறப்பு கடன் திட்டங்கள் அறிமுகம்!

அதன்படி, வாடிக்கையாளர்களுக்கு ஏதுவான 5 விதமான சிறப்பு கடன் திட்டங்களை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் பட்ஜெட் மற்றும் பொருளாதார நிலைகளை பொறுத்து இந்த சிறப்பு கடன் திட்டங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

ஹூண்டாய் கார்களுக்கு சிறப்பு கடன் திட்டங்கள் அறிமுகம்!

முதல் கடன் திட்டத்தின்படி, முதல் மூன்று மாதங்களுக்கு மிக குறைந்த மாதத் தவணை கொண்ட திட்டமாக தேர்வு செய்யலாம். மீதமுள்ள கடன் தொகையை 3 ஆண்டு, 4 ஆண்டு அல்லது 5 ஆண்டு திருப்பி செலுத்தும் கால அளவுடன் பெற முடியும். இந்த திட்டம் அனைத்து ஹூண்டாய் கார் மாடல்களுக்கும் வழங்கப்படும்.

ஹூண்டாய் கார்களுக்கு சிறப்பு கடன் திட்டங்கள் அறிமுகம்!

இரண்டாவது திட்டத்தின்படி, வாடிக்கையாளர்கள் 7 ஆண்டு மாதத் தவணை கொண்ட இந்த திட்டத்தில் முதல் ஆண்டு மட்டும் கடன் தொகையில், லட்சத்திற்கு ரூ.1,234 வீதம் மாதத் தவணை கணக்கிடப்பட்டு செலுத்த வேண்டி இருக்கும். இரண்டாவது வருடத்திலிருந்து ஆண்டுக்கு 11 சதவீதம் கூடுதலான மாதத் தவணையுடன் திருப்பி செலுத்த வேண்டி இருக்கும். இந்த திட்டமும் அனைத்து ஹூண்டாய் கார் மாடல்களுக்கும் கிடைக்கும்.

ஹூண்டாய் கார்களுக்கு சிறப்பு கடன் திட்டங்கள் அறிமுகம்!

மூன்றாவது திட்டத்தின்படி, வழக்கமான மாதத் தவணை திட்டங்களைவிட 14 சதவீதம் குறைவான மாதத் தவணையை செலுத்தலாம். 59வது மாதத்தில் கடன் தொகையில் 25 சதவீதத்தை மாதத் தவணையாக செலுத்த வேண்டும். இந்த திட்டமும் அனைத்து ஹூண்டாய் கார் மாடல்களுக்கும் பொருந்தும்.

ஹூண்டாய் கார்களுக்கு சிறப்பு கடன் திட்டங்கள் அறிமுகம்!

நான்காவது கடன் திட்டத்தின்படி, குறைவான மாதத் தவணை திட்டத்துடன் நீண்ட காலத்திற்கு திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் வழங்கப்படும். அதிகபட்சமாக 8 ஆண்டுகள் வரை திருப்பி செலுத்தும் கால அவகாசம் வழங்கப்படும். குறிப்பிட்ட ஹூண்டாய் மாடல்களுக்கு வழங்கப்படுகிறது.

ஹூண்டாய் கார்களுக்கு சிறப்பு கடன் திட்டங்கள் அறிமுகம்!

ஐந்தாவது திட்டத்தின்படி, மிக குறைவான டவுன் பேமண்ட் செலுத்துவதற்கும் அல்லது ஸீரோ டவுன் பேமண்ட் கொண்டதாகவும், ஆன்ரோடு விலையில் 100 சதவீதம் கடன் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கும். இந்த திட்டமும் குறிப்பிட்ட ஹூண்டாய் கார் மாடல்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

ஹூண்டாய் கார்களுக்கு சிறப்பு கடன் திட்டங்கள் அறிமுகம்!

இந்த கடன் திட்டங்கள் பொருளாதார ரீதியில் நெருக்கடியில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்ததாக இருக்கும். மேலும், வாடிக்கையாளர்கள் தங்களது எதிர்கால பொருளாதாரத்தை அனுமானித்து தேர்வு செய்வதற்கான வாய்ப்பை வழங்கும். இது நிச்சயம் கார் வாங்கும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, May 9, 2020, 11:28 [IST]
English summary
Hyundai India announces unique finance schemes for new vehicle ownership in the country. The new finance schemes are aimed to offer increased convenience and ease of ownership with new vehicle purchases.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+