எப்போது அறிமுகம்! ஏங்க வைக்கும் ஹூண்டாய் கோனா... முன்பைவிட கூடுதல் கவர்ச்சியுடன் புதிய அவதாரம்...

ஹூண்டாய் நிறுவனம் அதன் கோனா எலெக்ட்ரிக் காரை புதுப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எப்போது அறிமுகம்! ஏங்க வைக்கும் ஹூண்டாய் கோனா... முன்பைவிட கூடுதல் கவர்ச்சியுடன் புதிய அவதாரம்...

ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் மின்சார காராக கோனா எலெக்ட்ரிக் இருக்கின்றது. இக்காரையே தற்போது ஹூண்டாய் புதுப்பித்திருக்கின்றது. இந்த புதுப்பிக்கப்பட்ட காரை அது உலகளவில் அறிமுகமும் செய்திருக்கின்றது. புதுப்பித்தல் பணியின் அடிப்படையில் புதிய அவதாரம் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இதன் உருவ அமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகள் என பல்வேறு விஷயங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், பவர்டிரெயின் விஷயத்தில் மட்டும் எந்த மாற்றத்தையும் ஹூண்டாய் செய்யவில்லை.

எப்போது அறிமுகம்! ஏங்க வைக்கும் ஹூண்டாய் கோனா... முன்பைவிட கூடுதல் கவர்ச்சியுடன் புதிய அவதாரம்...

என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன...

முதலில் டிசைன் பற்றி பார்த்துவிடலாம். கோனா எலெக்ட்ரிக் காரின் நீலம் தற்போது 70 மி.மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. வீல் பேஸை மாற்றாமலே இது மாற்றப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி, காரின் முகப்பு பகுதியின் டிசைன்களிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல்கள், பம்பர் என அனைத்தும் புது அவதாரத்தில் மாற்றப்பட்டிருக்கின்றது.

எப்போது அறிமுகம்! ஏங்க வைக்கும் ஹூண்டாய் கோனா... முன்பைவிட கூடுதல் கவர்ச்சியுடன் புதிய அவதாரம்...

முன்பக்கத்தைப் போலவே பின் பகுதியிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இங்கும், நிறுத்தம் மின் விளக்குகள் முதல் பம்பர் வரை அனைத்தும் கூறுகள் மாற்றப்பட்டிருக்கின்றன. இதன்படி, காரின் பின் பக்கத்தில் தற்போது இரு நிறுத்த மின் விளக்குகளை நம்மால் காண முடிகின்றது. இத்துடன், பனி மின் விளக்கு மற்றும் டர்ன் இன்டிகேட்டர்கள் ஆகியவற்றையும் புதிய ஸ்டைலில் ஹூண்டாய் பொருத்தியுள்ளது.

எப்போது அறிமுகம்! ஏங்க வைக்கும் ஹூண்டாய் கோனா... முன்பைவிட கூடுதல் கவர்ச்சியுடன் புதிய அவதாரம்...

சார்ஜ் செய்யும் இடம் முன்பைப் போலவே காரின் முன் பகுதியிலேயே இடம்பெற்றிருக்கின்றது. ஆனால், இதன் ஸ்டைல் மட்டும் தற்போது மாற்றப்பட்டிருக்கின்றது. இதேபோன்று, அலாய் வீல் டிசைன், ரூஃப் லைன் ரகம் உள்ளிட்டவையும் மாற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கோனா எலெக்ட்ரிக் காரின் தோற்றம் முழுவதும் மாற்றப்பட்டிருக்கின்றது. இக்கார், 2021ம் ஆண்டு மாடல் என்பதனாலயே இத்தனை மாற்றங்களை ஹூண்டாய் செய்திருக்கின்றது.

எப்போது அறிமுகம்! ஏங்க வைக்கும் ஹூண்டாய் கோனா... முன்பைவிட கூடுதல் கவர்ச்சியுடன் புதிய அவதாரம்...

இதுதவிர புதிய சாதனங்களை சிலவற்றையும் ஹூண்டாய் சேர்த்துள்ளது. புதிதாக முழு டிஜிட்டல் தரத்திலான இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், பெரிய தொடுதிரை இன்ஃபேடெயின்மென்ட் சிஸ்டம் (ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதிக் கொண்டது) உள்ளிட்ட அம்சங்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

எப்போது அறிமுகம்! ஏங்க வைக்கும் ஹூண்டாய் கோனா... முன்பைவிட கூடுதல் கவர்ச்சியுடன் புதிய அவதாரம்...

தொடர்ந்து, காரின் உட்பகுதியில் ஏசி வெண்டின் டிசைன், கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் சில கட்டுப்பாட்டு பொத்தான்களின் வடிவம் ஆகியவை மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. கியர் பிடி மற்றும் கப் ஹோல்டர்கள் உள்ளிட்டவற்றையும் ஹூண்டாய் விட்டுவைக்கவில்லை. மேலும், சென்டர் கன்சோலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

எப்போது அறிமுகம்! ஏங்க வைக்கும் ஹூண்டாய் கோனா... முன்பைவிட கூடுதல் கவர்ச்சியுடன் புதிய அவதாரம்...

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரில் பாதுகாப்பு வசதிகளாக ஆர்சிசிஏ மற்றும் பிசிஏ வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதில் ஆர்சிசிஏ, ரிவர்ஸின்போது ஏற்படும் பின்புற மோதலைத் தவிர்க்க உதவும். இதேபோன்று, பிசிஏ, பிளைண்ட் ஸ்பாட்களில் ஏற்படும் மோதல்களைத் தவிர்க்க உதவும். இதுபோன்ற சிறப்பு பாதுகாப்பு வசதிகளை தற்போது விற்பனையில் இருக்கும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்களிலும் நம்மால் காண முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

எப்போது அறிமுகம்! ஏங்க வைக்கும் ஹூண்டாய் கோனா... முன்பைவிட கூடுதல் கவர்ச்சியுடன் புதிய அவதாரம்...

மேற்கூறிய பாதுகாப்பு அம்சங்களுடன் ஏர்பேக், ஏபிஎஸ் மற்றும் இபிடி உள்ளிட் ஏராளமான சிறப்பு வசதிகளை புதுப்பிக்கப்பட்ட கோனா மின்சார கார் பெற்றிருக்கின்றது. ஆனால், இதன் எஞ்ஜின் திறன் பொருத்தவரை எந்த மாற்றத்தையும் ஹூண்டாய் மேற்கொள்ளவில்லை. ஏற்கனவே கூறியதைப் போல் 39.2 kWh மற்றும் 64kWh ஆகிய இரு லித்தியம் அயன் பாலிமர் பேட்டரி திறன்களிலேயே கோனா உருவாக்கப்பட்டுள்ளது.

எப்போது அறிமுகம்! ஏங்க வைக்கும் ஹூண்டாய் கோனா... முன்பைவிட கூடுதல் கவர்ச்சியுடன் புதிய அவதாரம்...

இவ்விரு பேட்டரிகளும் நேரடியாக மின் மோட்டார்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த மின் மோட்டார் 134 பிஎச்பி மற்றும் 396 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது. இது ஆரம்ப நிலை வேரியண்டின் திறன் ஆகும். இதன் உயர்நிலை வேரியண்ட் அதிகபட்சமாக 203 பிஎச்பி மற்றும் 395 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது.

எப்போது அறிமுகம்! ஏங்க வைக்கும் ஹூண்டாய் கோனா... முன்பைவிட கூடுதல் கவர்ச்சியுடன் புதிய அவதாரம்...

இந்த பல்வேறு சிறப்பு வசதிகளைக் கொண்டிருக்கும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்குக் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவலை ஹூண்டாய் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. தற்போது இக்காரின் அறிமுகத்தை மட்டுமே அது செய்திருக்கின்றது.

Most Read Articles
English summary
Hyundai Unveiled 2021 Kona Electric Globally: Here is Full Details. Read In Tamil.
Story first published: Wednesday, November 11, 2020, 19:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X