Just In
- 52 min ago
நடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...
- 1 hr ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 2 hrs ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 2 hrs ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- Movies
கோடியில் புரளும் 'கார்த்தி'யின் இயக்குனர்கள்.. பின்னணி என்ன? அதிரடியாய் அலசும் இளம் விமர்சகர்!
- News
நல்ல கூட்டம் வேறு.. மாஸ்க் அணியாத மோடி.. குவியும் விமர்சனங்களும், அக்கறை அறிவுரைகளும்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Lifestyle
உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..!
- Sports
ஹப்பா கடைசியில் மனம் மாறிய சென்னை.. சிஎஸ்கே இறக்கிய பெரிய கேம் பிளான்.. கசிந்த தகவல்!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புதிய கோனா ஃபேஸ்லிஃப்ட் காரை பற்றிய தகவல்களை வெளியிட்டது ஹூண்டாய்... அப்கிரேட்கள் என்னென்ன..?
கோனா காரில் புதியதாக கொண்டுவரப்படவுள்ள ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை பற்றிய தகவல்களை தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் வெளியிட்டுள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனால் கோனாவிற்கு நேர்த்தியான தோற்றத்தை ஹூண்டாய் நிறுவனம் வழங்கியுள்ளது. இத்தகைய காஸ்மெட்டிக் மாற்றங்கள் மட்டுமின்றி கூடுதலான பின் இருக்கை பயணிகளுக்கான இடவசதி மற்றும் பொருட்களை ஏற்றி செல்லும் வசதியையும் பெற்றுள்ளது.

அதேபோல் ஸ்போர்டி பண்பை கொண்ட என் லைன்னையும் முதன்முறையாக இந்த காம்பெக்ட் எஸ்யூவி பெறவுள்ளது. வழக்கமான கோனாவில் கொண்டுவரப்பட்டுள்ள ஃபேஸ்லிஃப்ட் வெர்சனில் காரை சுற்றிலும் பாதுகாக்கும் விதத்தில் க்ளாடிங்குகளும், டிசைன் அப்கிரேட்களாக சில முரட்டுத்தனமான டிசைன் லைன்களும் வழங்கப்பட்டுள்ளன.

தற்போதைய ஹூண்டாய் கோனாவை காட்டிலும் 40மிமீ நீளமானதாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் தான் படத்தில் பார்ப்பதற்கே கார் பெரிய அளவிலான தோற்றத்துடன் காட்சியளிக்கிறது. படங்களில் கோனா ஃபேஸ்லிஃப்ட்டில் 17 இன்ச்சில் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இருப்பினும் இந்த காருக்கு 16 மற்றும் 18 இன்ச் சக்கரங்களும் தேர்வுகளாக வழங்க6ப்படவுள்ளன. அதேபோல் அப்டேட் செய்யப்பட்ட கார் என்ற உணர்வை வழங்குவதற்காக எல்இடி டிஆர்எல்கள் புதிய டிசைனில் வழங்கப்பட்டுள்ளன.

ஃபேஸ்லிஃப்ட் மாற்றமாக இருப்பினும் காரின் உட்புறத்திலும் சில சிறு திருத்தியமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் முக்கியமானதாக மைய கன்சோல் கிடைமட்ட நோக்குநிலையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுற்றிலும் பிரகாசமான விளக்குகளுடன் உள்ள கோனா ஃபேஸ்லிஃப்ட்டின் கேபின் ஆனது அடர்த்தி குறைவான பழுப்பு மற்றும் காக்கி நிறத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த நிறமும் கூடுதல் தேர்வு தான். ஏனெனில் நிலையான கருப்பு நிறத்திலும் கோனாவின் கேபினை வாடிக்கையாளர்கள் பெறலாம்.

அதேநேரம் புதிய என்-லைன் வேரியண்ட் சில காஸ்மேட்டிக் அப்கிரேட்களுடன் மற்ற வேரியண்ட்களை காட்டிலும் கூடுதல் ஸ்போர்ட்டி தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் வழக்கமான சறுக்கு தட்டுகளுக்கு மாற்றாக பக்கவாட்டு ஃபின்கள் உடன் காரின் உடல் நிறத்தில் ஏரோடைனாமிக் லிப்-ஐ இதன் என்-லைன் வேரியண்ட் பெற்றுள்ளது.

அதேபோல் 17 இன்ச்சிற்கு பதிலாக 18 இன்ச்சில் சக்கரங்களை நிலையாக பெற்றுவரவுள்ள கோனா ஃபேஸ்லிஃப்ட்டின் இந்த புதிய வேரியண்ட்டில் எதிர்காற்று உள்வாங்கி சற்று சிறியதாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட்டின் உட்புறத்தில் இருக்கைகள் கருப்பு நிறத்தில் சிவப்பு நிற தையல்களுடன் வழங்கப்பட்டுள்ளன.

இதனுடன் சில ஸ்போர்டியர் பாகங்களையும் கொண்டுள்ள இந்த கூடுதலான புதிய வேரியண்ட்டின் கியர் நெம்புகோலில் என் லைன் முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பம்சங்களை தவிர்த்து பார்த்தால் கோனாவின் மற்ற வேரியண்ட்களில் பொருத்தப்படவுள்ள 10.25 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை தான் புதிய என் லைன் வேரியண்ட்டும் பெற்று வருகிறது.

இதனுடன் 10.25 இன்ச்சில் பிராண்டின் புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் ஹார்மன் கார்டோன் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவற்றையும் கோனா ஃபேஸ்லிஃப்ட் கார் பெற்றுள்ளது. சர்வதேச சந்தைகளில் எரிபொருள் மற்றும் ஹைப்ரீட் என்ஜின் தேர்வுகளிலும் ஹூண்டாய் கோனா விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் இந்திய சந்தையை பொறுத்தவரையில் எலக்ட்ரிக் மோட்டாரில் தான் கோனா காம்பெக்ட் எஸ்யூவி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள இதன் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் குறித்த கூடுதல் தகவல்களை வரும் வாரங்களில் எதிர்பார்க்கலாம்.