ஒற்றை நாட்டுக்காக பிரத்யேகமாக ஹூண்டாய் வடிவமைத்த மின்சார கார்... அது எந்த நாடுனு தெரியுமா?

ஹூண்டாய் நிறுவனம் மிஸ்ட்ரா எனும் எலெக்ட்ரிக் காரை தற்போது நடைபெற்றும் குவாங்சோ மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தியுள்ளது. இதனை ஒற்றை நாட்டிற்காக பிரத்யேகமாக ஹூண்டாய் தயாரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஒற்றை நாட்டுக்காக பிரத்யேகமாக ஹூண்டாய் வடிவமைத்த மின்சார கார்... அது எந்த நாடுனு தெரியுமா?

ஹூண்டாய் நிறுவனம் அதன் புதிய ரக மின்சார வாகனம் ஒன்றை தற்போது வெளியீடு செய்துள்ளது. 2020 குவாங்சோ மோட்டார் ஷோவிலேயே ஹூண்டாய் இக்காரை அறிமுகப்படுத்தியுள்ளது. நவம்பர் 20ம் தேதி தொடங்கி வருகின்ற 29ம் தேதி வரை இந்த வாகன கண்காட்சி நடைபெற இருக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் எதிர்கால வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.

ஒற்றை நாட்டுக்காக பிரத்யேகமாக ஹூண்டாய் வடிவமைத்த மின்சார கார்... அது எந்த நாடுனு தெரியுமா?

அந்தவகையில், பிரபல ஹூண்டாய் நிறுவனமும் அதன் எதிர்கால செடான் ரக மிஸ்ட்ரா எனும் எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வாகன கண்காட்சி போன்ற அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்குமே தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் அச்சம் லேசாக தணிந்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல் வாகன கண்காட்சியாக குவாங்சோ மோட்டோர் ஷா நடைபெற்று வருகின்றது.

ஒற்றை நாட்டுக்காக பிரத்யேகமாக ஹூண்டாய் வடிவமைத்த மின்சார கார்... அது எந்த நாடுனு தெரியுமா?

'புதிய தொழில்நுட்பம், புதிய வாழ்க்கை' என்ற கருப்பொருளின்கீழ் இந்த ஷோ நடைபெற்று வருகின்றது. இது 18ம் ஆண்டு சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சி ஆகும். இந்த கண்காட்சியிலேயே ஹூண்டாய் எதிர்கால எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மிட்சைஸ் செடான் எலெக்ட்ரிக் காரை பிரத்யேகமாக சீன சந்தைக்காக மட்டுமே ஹூண்டாய் வடிவமைத்திருப்பதாக கூறப்படுகின்றது.

ஒற்றை நாட்டுக்காக பிரத்யேகமாக ஹூண்டாய் வடிவமைத்த மின்சார கார்... அது எந்த நாடுனு தெரியுமா?

ஆகையால், இதன் இந்திய வருகை கேள்விக்குறியே. ஆனால், இக்கார் உலக மின்சார வாகன பிரியர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது. இதன் ரேஞ்ஜ் விகிதம் அனைவரையும் ஈர்க்கும் வகையில் இருக்கின்றது. இக்காரை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 520 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒற்றை நாட்டுக்காக பிரத்யேகமாக ஹூண்டாய் வடிவமைத்த மின்சார கார்... அது எந்த நாடுனு தெரியுமா?

இதுமட்டுமின்றி இக்காரில் சொகுசு மற்றும் இட வசதியும் ஏராளம் என்றும் ஆட்டோ ஷோவில் கலந்துக் கொண்ட ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கேற்ப இதன் நீளம், உயரம் மற்றும் அகலம் ஆகியவை உள்ளன. அதேசமயம், ஹூண்டாய் சொனாட்டா கார்களைக் காட்டிலும் இதன் அளவு சற்று சிறியதாக இருக்கின்றது. ஆனால் இதன் தோற்றம் பார்ப்பதற்கு எலென்ட்ரா கார்களைப் போன்றே காட்சியளிக்கின்றது.

ஒற்றை நாட்டுக்காக பிரத்யேகமாக ஹூண்டாய் வடிவமைத்த மின்சார கார்... அது எந்த நாடுனு தெரியுமா?

இந்த காரில் தொழில்நுட்ப வசதிகளாக 12.3 இன்ச் அளவு கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், 12.3 இன்ச் அளவுள்ள இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிரைவர் அசிஸ்டண்ட் வசதி, பனோரமிக் சன் ரூஃப், மோதல் தவிர்ப்பு தொழில்நுட்பம், நேவிகேஷன் அடிப்படையிலான க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட எக்கச்சக்க அம்சங்கள் இதில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஒற்றை நாட்டுக்காக பிரத்யேகமாக ஹூண்டாய் வடிவமைத்த மின்சார கார்... அது எந்த நாடுனு தெரியுமா?

இந்த பன் முக சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கும் மிஸ்ட்ரா எலெக்ட்ரிக் கார் சீனாவில் வருகின்ற 2021ம் ஆண்டில் இருந்து விற்பனைக்கு வரவிருக்கின்றது. இதை முன்னிட்டே ஹூண்டாய் நிறுவனம் நடைபெற்று வரும் குவாங்சோ வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரை முழுமையாக சார்ஜ் செய்ய குறைந்த 9.5 மணி நேரங்கள் தேவைப்படுகின்றது. இது மிக அதிக கால அவகாசம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Hyundai Unveils Mistra Electric Sedan Car At 2020 Guangzhou Motor Show. Read In Tamil.
Story first published: Saturday, November 21, 2020, 16:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X