ஹூண்டாய் வெனியூ காரில் 1.5 லிட்டர் டீசல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

ஹூண்டாய் வெனியூ காரில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹூண்டாய் வெனியூ காரில் 1.5 லிட்டர் டீசல் மாடல் அறிமுகம்!

கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி விற்பனையில் சக்கை போடு போட்டு வருகிறது. காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் விற்பனையில் இரண்டாவது இடம் வகிக்கிறது. பேபி க்ரெட்டா எஸ்யூவி போன்ற தோற்றம், அருமையான வசதிகள், சரியான விலை போன்றவை இந்த எஸ்யூவிக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது.

ஹூண்டாய் வெனியூ காரில் 1.5 லிட்டர் டீசல் மாடல் அறிமுகம்!

இதுவரை ஹூண்டாய் வெனியூ கார் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருப்பதால், 1.4 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு பதிலாக 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஹூண்டாய் வெனியூ காரில் 1.5 லிட்டர் டீசல் மாடல் அறிமுகம்!

ஹூண்டாய் இந்தியா இணையதளத்தில் வெனியூ காரில் இந்த புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல் குறித்த விபரங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. கியா செல்டோஸ் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்தான் என்றாலும், சக்தியை வெளிப்படுத்தும் திறன் சற்றே குறைக்கப்பட்டு இருக்கிறது.

ஹூண்டாய் வெனியூ காரில் 1.5 லிட்டர் டீசல் மாடல் அறிமுகம்!

இந்த புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 98.6 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் வெனியூ காரில் 1.5 லிட்டர் டீசல் மாடல் அறிமுகம்!

இந்த 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தவிர்த்து, 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளிலும் பிஎஸ்6 தரத்திற்கு இணையாக கிடைக்கும்.

ஹூண்டாய் வெனியூ காரில் 1.5 லிட்டர் டீசல் மாடல் அறிமுகம்!

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள் உள்ளிட்ட அம்சங்களுடன் கிடைக்கிறது.

ஹூண்டாய் வெனியூ காரில் 1.5 லிட்டர் டீசல் மாடல் அறிமுகம்!

மேலும், எலெக்ட்ரிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர், 8.0 அங்குல தொடுதிரையுடன் அர்கமிஸ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புளூலிங்க் செயலி மூலமாக 33 விதமான கனெக்டெட் கார் தொழில்நுட்ப வசதிகள், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், வாய்ஸ் ரெகனிஷன், ஏர் பியூரிஃபயர் வசதிகள் கிடைக்கின்றன.

ஹூண்டாய் வெனியூ காரில் 1.5 லிட்டர் டீசல் மாடல் அறிமுகம்!

இந்த காரில் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் அசிஸ்ட், பிரேக் அசிஸ்ட் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஹூண்டாய் வெனியூ காரில் 1.5 லிட்டர் டீசல் மாடல் அறிமுகம்!

புதிய ஹூண்டாய் வெனியூ 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலின் பேஸ் வேரியண்ட்டிற்கு ரூ.8.09 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. டாப் வேரியண்ட்டிற்கு ரூ.11.39 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் வெனியூ காரில் 1.5 லிட்டர் டீசல் மாடல் அறிமுகம்!

புதிய ஹூண்டாய் வெனியூ காரின் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலுக்கு முன்பதிவும் ஏற்கப்படுகிறது. ரூ.21,000 முன்பணத்துடன் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 19, 2020, 18:17 [IST]
English summary
South Korean carmaker Hyundai Motor has introduced a new 1.5-liter diesel engine option for Venue SUV in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+