ரூ.8 லட்சம் ஆரம்ப விலையுடன் புதிய ஹூண்டாய் வென்யூ பிஎஸ்6 டீசல் கார் இந்தியாவில் அறிமுகம்..!

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான வென்யூ டீசல் எஸ்யூவி மாடலை இந்திய சந்தையில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டான 'E' ரூ.8.09 லட்சத்தையும், டாப் வேரியண்ட்டான SX (O) ரூ.11.39 லட்சம் வரையிலும் விலையாக பெற்றுள்ளன.

ரூ.8 லட்சம் ஆரம்ப விலையுடன் புதிய ஹூண்டாய் வென்யூ பிஎஸ்6 டீசல் கார் இந்தியாவில் அறிமுகம்..!

பிஎஸ்6 ஹூண்டாய் வென்யூவின் ஒவ்வொரு வேரியண்ட்களின் விலையும் முந்தைய பிஎஸ்4 வெர்சனில் இருந்து ரூ.20,000- ரூ.55,000 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் டாப் வேரியண்டான SX (O) ட்யூல்-டோன் பெயிண்ட் அமைப்பிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் பிஎஸ்6 வெர்சன் கார் ரூ.11.49 லட்சத்தை எக்ஸ்ஷோரூம் விலையாக கொண்டுள்ளது.

ரூ.8 லட்சம் ஆரம்ப விலையுடன் புதிய ஹூண்டாய் வென்யூ பிஎஸ்6 டீசல் கார் இந்தியாவில் அறிமுகம்..!

ஹூண்டாய் வென்யூவின் இந்த புதிய பிஎஸ்6 டீசல் வேரியண்ட் 1.5 லிட்டர் டீசல் என்ஜினுடன் அறிமுகமாகியுள்ளது. ஏற்கனவே கியா செல்டோஸ் மாடலில் வழங்கப்பட்டிருந்த இந்த டீசல் என்ஜின் வென்யூ பிஎஸ்4 வெர்சனின் 1.4 லிட்டர் டீசல் என்ஜினிற்கு மாற்றாக தற்போது இந்த பிஎஸ்6 காரில் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.8 லட்சம் ஆரம்ப விலையுடன் புதிய ஹூண்டாய் வென்யூ பிஎஸ்6 டீசல் கார் இந்தியாவில் அறிமுகம்..!

இந்த பிஎஸ்6 டீசல் என்ஜின் காருக்கு வழங்கவுள்ள ஆற்றல் அளவுகள் குறித்து எந்த தகவலும் இல்லை. இருப்பினும் செல்டோஸ் எஸ்யூவியில் வெளிப்படுத்தியதை விட சிறிது குறைவான ஆற்றலையும் டார்க் திறனையும் தான் இந்த 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வென்யூ எஸ்யூவியில் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

ரூ.8 லட்சம் ஆரம்ப விலையுடன் புதிய ஹூண்டாய் வென்யூ பிஎஸ்6 டீசல் கார் இந்தியாவில் அறிமுகம்..!

டீசல் என்ஜின் மட்டுமின்றி இரு பெட்ரோல் என்ஜின் தேர்வுகளிலும் 2020 வென்யூ எஸ்யூவி சந்தையில் விற்பனை செய்யப்படவுள்ளது. இதில் ஒன்றான 1.2 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்டின் ஆரம்ப விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.6.70 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இதன் பிஎஸ்4 வெர்சன் காரை விட ரூ.19,000 அதிகமாகும்.

ரூ.8 லட்சம் ஆரம்ப விலையுடன் புதிய ஹூண்டாய் வென்யூ பிஎஸ்6 டீசல் கார் இந்தியாவில் அறிமுகம்..!

மற்றொரு 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் வேரியண்ட், முந்தைய தலைமுறை காரை விட ரூ.24,000 விலை அதிகரிப்பை பெற்று இனி ரூ.8.46 லட்சத்தில் இருந்து விற்பனை செய்யப்படவுள்ளது. வென்யூ மாடலில் கொண்டுவரப்பட்டுள்ள பிஎஸ்6 அப்டேட்கள் குறித்து ஹூண்டாய் நிறுவனம் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.

ரூ.8 லட்சம் ஆரம்ப விலையுடன் புதிய ஹூண்டாய் வென்யூ பிஎஸ்6 டீசல் கார் இந்தியாவில் அறிமுகம்..!

மீண்டும் இன்றைய அறிமுகம் வென்யூ பிஎஸ்6 டீசல் வேரியண்ட்டை பற்றி பார்ப்போம். 1.5 டீசல் என்ஜின் புதிய வென்யூ மாடலில் அதிகப்பட்சமாக 110 பிஎச்பி பவர் வரையில் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.8 லட்சம் ஆரம்ப விலையுடன் புதிய ஹூண்டாய் வென்யூ பிஎஸ்6 டீசல் கார் இந்தியாவில் அறிமுகம்..!

இந்த டீசல் என்ஜின் கியா செல்டோஸ் மாடலில் 115 பிஎச்பி பவரையும் 250 என்எம் டார்க் திறனையும் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வெளிப்படுத்தி வருகிறது. இதனால் ஹூண்டாய் நிறுவனம் புதிய வென்யூ மாடலில் பிஎஸ்6 டீசல் என்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸை ட்ரான்ஸ்மிஷனிற்காக வழங்கியிருக்கும் என தெரிகிறது.

ரூ.8 லட்சம் ஆரம்ப விலையுடன் புதிய ஹூண்டாய் வென்யூ பிஎஸ்6 டீசல் கார் இந்தியாவில் அறிமுகம்..!

இந்த என்ஜின் மாற்றம் தவிர்த்து புதிய ஹூண்டாய் வென்யூ மாடலில் வேறெந்த அப்டேட்டும் கொண்டுவரப்படவில்லை. இதனால் முன்பு வழங்கப்பட்டிருந்த காம்பெக்ட் எஸ்யூவி மாடலுக்கான தொழிற்நுட்பங்களை தான் இந்த பிஎஸ்6 வெர்சன் காரும் தொடரவுள்ளது.

ரூ.8 லட்சம் ஆரம்ப விலையுடன் புதிய ஹூண்டாய் வென்யூ பிஎஸ்6 டீசல் கார் இந்தியாவில் அறிமுகம்..!

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டில் தான் முதன்முதலாக வென்யூ மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. கடுமையான விற்பனை போட்டி நிலவி வரும் காம்பெக்ட்-எஸ்யூவி பிரிவில் நிலைநிறுத்தப்பட்ட இந்த கார் விற்பனையில் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு அடுத்து உள்ளது.

Most Read Articles
English summary
Hyundai Venue BS6 Diesel Launched In India At Rs 8.09 Lakh: Borrows Powertrain From Kia Seltos
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X