தென்கொரிய மக்களுக்காக ஹூண்டாய் களமிறக்கியுள்ள வென்யூ மாடலின் ஸ்பெஷல் எடிசன்...

இந்தியா, ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி மாடலுக்கு மிக பெரிய சந்தையாக விளங்குகிறது. இருப்பினும் தென் கொரிய மக்களால் மட்டுமே வாங்க இயலும் வகையில் வென்யூவின் ஸ்பெஷல் எடிசனை ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

தென்கொரிய மக்களுக்காக ஹூண்டாய் களமிறக்கியுள்ள வென்யூ மாடலின் ஸ்பெஷல் எடிசன்...

ஃப்ளக்ஸ் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் வழக்கமான வென்யூ எஸ்யூவி மாடலில் இருந்து ஸ்டாம்ப்டு ரேடியேட்டர் க்ரில் அமைப்பின் மூலமாக தான் பெரிய அளவில் வித்தியாசப்படுகிறது.

தென்கொரிய மக்களுக்காக ஹூண்டாய் களமிறக்கியுள்ள வென்யூ மாடலின் ஸ்பெஷல் எடிசன்...

இதன் க்ரில் அமைப்பு, மெர்சிடிஸ்-பென்ஸின் டைண்ட்-பேட்டர்ன் க்ரில்லையும், எம்ஜி மோட்டார்ஸின் ஸ்டார்-ரைடர் மற்றும் ஸ்டார்லைட் மேட்ரிக்ஸ் க்ரில்லையும் தான் நினைவூட்டுகிறது. அதேநேரம் காரின் தோற்றத்திற்கு ஏற்ப ஃபங்கியான டிசைனில் ஃபளக்ஸ் எடிசனின் க்ரில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தென்கொரிய மக்களுக்காக ஹூண்டாய் களமிறக்கியுள்ள வென்யூ மாடலின் ஸ்பெஷல் எடிசன்...

பக்கவாட்டில் C-பில்லரில் எஸ்யூவியின் வென்யூ பெயருடன் பிரத்யேகமான நிறத்தில் வட்ட வடிவிலான ஸ்பெஷல் முத்திரையை புதிய ஃப்ளக்ஸ் எடிசன் பெற்றுள்ளது. இந்த ஸ்பெஷல் முத்திரையானது வழக்கமான வென்யூ மாடலிற்கும் வெவ்வேறான நிறங்களில் ஆக்ஸஸரீயாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தென்கொரிய மக்களுக்காக ஹூண்டாய் களமிறக்கியுள்ள வென்யூ மாடலின் ஸ்பெஷல் எடிசன்...

உட்புற கேபினை வெளிப்புறத்திற்கு ஏற்ற பெயிண்ட அமைப்பில் இந்த ஸ்பெஷல் எடிசன் காரில் ஹூண்டாய் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதனால் உட்புறத்தில் ட்ரைவ் மோட் டயல், க்ளைமேட் கண்ட்ரோல் டயல்கள் மற்றும் ஏர் வெண்ட் அட்ஜெஸ்டர்ஸ் மற்றும் இருக்கை தையல் உள்ளிட்ட பாகங்கள் ஒரே பளிச்சிடும் நிறத்தில் ஹைலைட்டாக காட்சியளிக்கின்றன.

தென்கொரிய மக்களுக்காக ஹூண்டாய் களமிறக்கியுள்ள வென்யூ மாடலின் ஸ்பெஷல் எடிசன்...

மற்றப்படி இந்த ஸ்பெஷல் எடிசன் காரில் என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. இதனால் வென்யூ எஸ்யூவி மாடலின் வழக்கமான 1.6 லிட்டர் ஸ்மார்ட்ஸ்ட்ரீம் பெட்ரோல் என்ஜின் உடன் தான் புதிய ஃப்ளக்ஸ் வேரியண்ட்டும் இயங்கவுள்ளது.

தென்கொரிய மக்களுக்காக ஹூண்டாய் களமிறக்கியுள்ள வென்யூ மாடலின் ஸ்பெஷல் எடிசன்...

4-சிலிண்டர் அமைப்புடன் அதிகப்பட்சமாக 6,300 ஆர்பிஎம்-ல் 123 பிஎச்பி பவரையும், 4,500 ஆர்பிஎம்-ல் 154 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. ஆல்-வீல் ட்ரைவ் சிஸ்டம் வழங்கப்படவில்லை.

தென்கொரிய மக்களுக்காக ஹூண்டாய் களமிறக்கியுள்ள வென்யூ மாடலின் ஸ்பெஷல் எடிசன்...

புதிய வென்யூ ஃப்ளக்ஸ் எடிசனின் விலை 2.15 கோடி கொரியன் ரிபப்ளிக் வுன் ஆக தென்கொரியாவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் இந்திய ரூபாய் மதிப்பு ரூ.13.56 லட்சமாகும். இந்தியாவில் ஹூண்டாய் வென்யூ மாடல் ரூ.6.7 லட்ச ஆரம்ப விலையுடன் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Hyundai Venue FLUX is a special model one can buy only in S. Korea
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X