வெனியூ எஸ்யூவியில் ஐஎம்டி கியர்பாக்ஸ் மாடல் அறிமுகம்... ஆனால், ஏமாற்றம் தந்த ஹூண்டாய்!

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் புதிய ஐ-எம்டி என்ற புதிய வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனுடன் சேர்த்து, வெனியூ காரில் புதிய ஸ்போர்ட் மாடலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. விரிவானத் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

 

ஹூண்டாய் வெனியூ ஐஎம்டி கியர்பாக்ஸ் மாடல் அறிமுகம்

பிஎஸ்-6 எஞ்சின் தேர்வுகள்

இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மதிப்பு வாய்ந்த தேர்வாக ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி உள்ளது. கடந்த ஆண்டு விற்பனைக்கு வரப்பட்டது முதல் விற்பனையிலும் சிறப்பான இடத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது ஹூண்டாய் வெனியூ காரில் பிஎஸ்-6 தரத்திற்கு இணையான 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

ஹூண்டாய் வெனியூ ஐஎம்டி கியர்பாக்ஸ் மாடல் அறிமுகம்

கியர்பாக்ஸ் தேர்வு

இதில், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வும், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வும் கொடுக்கப்படுகின்றன. டீசல் மாடலானது 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைக்கிறது.

ஹூண்டாய் வெனியூ ஐஎம்டி கியர்பாக்ஸ் மாடல் அறிமுகம்

ஐ-எம்டி கியர்பாக்ஸ் மாடல்

இந்த சூழலில், ஹூண்டாய் வெனியூ காரில் ஐ-எம்டி எனப்படும் புதிய வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு இன்று அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் இந்த ஐ-எம்டி கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படுகிறது. 1.2 லிட்டர் மாடலில் ஐ-எம்டி கியர்பாக்ஸ் தேர்வு இல்லை.

ஹூண்டாய் வெனியூ ஐஎம்டி கியர்பாக்ஸ் மாடல் அறிமுகம்

செயல்படும் விதம்

அதாவது, க்ளட்ச் பெடல் இருக்காது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் போன்று ஆக்சிலரேட்டர் மற்றும் பிரேக் பெடல்கள் மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கும். ஆனால், இதன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸை வேகத்தை சரியாக கணக்கிட்டு, அதற்கு தக்கவாறு சாஃப்ட்வேர் மூலமாக இயங்கும் கன்ட்ரோல் யூனிட் மூலமாக கியர் மாற்றம் நடைபெறும். சென்சார்களின் உதவியுடன் தரவுகளை பெற்று, கம்ப்யூட்டர் கணக்கிட்டு கொடுக்கும் சமிக்ஞைகளின் அடிப்படையில் ஹைட்ராலிக் சிஸ்டமானது மேனுவலாக க்ளட்ச் சிஸ்டத்தை இயக்கும். ஓட்டுனர், மேனுவல் கார்களை போன்றே, லிவர் மூலமாக கியர் மாற்றலாம். அதாவது, க்ளட்ச் இல்லாத மேனுவல் கியர்பாக்ஸ் கார் மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

ஹூண்டாய் வெனியூ ஐஎம்டி கியர்பாக்ஸ் மாடல் அறிமுகம்

மென்மையான ஓட்டுதல் அனுபவம்

ஹூண்டாய் தெரிவிக்கும் கருத்துக்களின்படி, இந்த புதிய ஐ-எம்டி (Intelligent Manual Transmission) கியர் மாற்றத்தின்போது எந்த ஒரு அதிர்வுகளும் இல்லாத வகையில் மிகவும் மென்மையான முறையில் செயல்படும் வகையில் இருக்கும் என்று ஹூண்டாய் பெருமிதம் தெரிவிக்கிறது. மேலும், மேனுவல் கியர்பாக்ஸ் மாடல்களுக்கு இணையான மைலேஜை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் வெனியூ ஐஎம்டி கியர்பாக்ஸ் மாடல் அறிமுகம்

ஸ்போர்ட் மாடல்

ஹூண்டாய் வெனியூ காரில் இன்று ஐ-எம்டி கியர்பாக்ஸ் தவிர்த்து, தனித்துவமான சில சிறப்பம்சங்களுடன் கூடிய ஸ்போர்ட் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்போர்ட் மாடலில் மேனுவல், சிவிடி மற்றும் ஐ-எம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹூண்டாய் வெனியூ ஐஎம்டி கியர்பாக்ஸ் மாடல் அறிமுகம்

வேரியண்ட்டுகள் விபரம்

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் வந்துள்ள புதிய ஸ்போர்ட் மாடலானது ஏற்கனவே வழங்கப்படும் SX மற்றும் SX(O) வேரியண்ட்டுகளில் கூடுதல் சிறப்பம்சங்களுடன் வந்துள்ளது. அதாவது, சாம்பல் மற்றும் கருப்பு வண்ணக் கூரையுடன் கூடிய இரட்டை வண்ணக் கலவையில் கிடைக்கும்.

ஹூண்டாய் வெனியூ ஐஎம்டி கியர்பாக்ஸ் மாடல் அறிமுகம்

அத்துடன், ஸ்போர்ட் மாடல்களில் வழங்கப்படும் வேரியண்ட்டுகளில் அதற்குரிய விசேஷ சின்னம், பளபளப்பான கருப்பு வண்ணத்தில் முகப்பு க்ரில் அமைப்பு, அதில் சிவப்பு வண்ண அலங்காரம், சிவப்பு வண்ண பிரேக் காலிபர்கள், வீல் ஆர்ச்சுகளில் சிவப்பு வண்ண அலங்காரம், பாடி கிளாடிங் சட்டம், அடர் சாம்பல் வண்ண ரூஃப் ரெயில்கள் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

ஹூண்டாய் வெனியூ ஐஎம்டி கியர்பாக்ஸ் மாடல் அறிமுகம்

உட்புறத்தில் ஸ்டீயரிங் வீலுக்கு கொடுக்கப்படும் உறையில் சிவப்பு வண்ண நூல் தையல் முக்கிய அம்சமாக இருக்கும். மெட்டல் பெடல்கள், சிவப்பு வண்ண நூல் தையல் அலங்காரம், அடர் சாம்பல் வண்ண அப்ஹோல்ஸ்ட்ரி ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

ஹூண்டாய் வெனியூ ஐஎம்டி கியர்பாக்ஸ் மாடல் அறிமுகம்

ஹூண்டாய் வெனியூ காரின் ஸ்போர்ட் மாடலானது 5 வேரியண்ட்டுகளில் கிடைக்கும். 1.0 லிட்டர் டர்போ ஐ-எம்டி கியர்பாக்ஸ் மாடலானது எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ் ஆப்ஷனல் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

ஹூண்டாய் வெனியூ ஐஎம்டி கியர்பாக்ஸ் மாடல் அறிமுகம்

இதே ஸ்போர்ட் மாடலானது 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடலின் எஸ்எக்ஸ் ப்ளஸ் வேரியண்ட்டில் கிடைக்கும். டீசல் எஞ்சின் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடலில் எஸ்எக்ஸ் வேரியண்ட் மற்றும் எக்ஸ்எக்ஸ் ஆப்ஷனல் வேரியண்ட்டுகளில் இந்த ஸ்போர்ட் மாடல் கிடைக்கும்.

ஹூண்டாய் வெனியூ ஐஎம்டி கியர்பாக்ஸ் மாடல் அறிமுகம்

இதர ஐ-எம்டி வேரியண்ட்டுகள்

வெனியூ காரின் ஸ்போர்ட் மாடல் தவிர்த்து, 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடலின் எஸ்க்ஸ் மற்றும் எஸ்எக்ஸ் ஆப்ஷனல் ஆகிய வேரியண்ட்டுகளில் இந்த ஐ-எம்டி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இது விலை குறைவான ஐ-எம்டி கியர்பாக்ஸ் தேர்வுக்கான வேரியண்ட்டுகளாக உள்ளன. தொடர்ந்து விலை விபரத்தை பார்க்கலாம்.

விலை விபரம்

விலை விபரம்

1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஐ-எம்டி வேரியண்ட்டுகள்

  • ஹூண்டாய் வெனியூ 1.0 லிட்டர் ஐ-எம்டி எஸ்எக்ஸ்: ரூ.9.99 லட்சம்
  • ஹூண்டாய் வெனியூ 1.0 லிட்டர் ஐ-எம்டி எஸ்எக்ஸ் ஆப்ஷனல்: ரூ.11.08 லட்சம்

பெட்ரோல் ஸ்போர்ட் வேரியண்ட்டுகள்

  • ஹூண்டாய் வெனியூ ஸ்போர்ட் 1.0 லிட்டர் ஐ-எம்டி எஸ்எக்ஸ்: ரூ.10.20 லட்சம்
  • ஹூண்டாய் வெனியூ ஸ்போர்ட் 1.0 லிட்டர் ஐ-எம்டி எஸ்எக்ஸ் ஆப்ஷனல்: ரூ.11.21 லட்சம்
  • ஹூண்டாய் வெனியூ ஸ்போர்ட் 1.0 லிட்டர் சிவிடி எஸ்எக்ஸ் ப்ளஸ்: ரூ.11.58 லட்சம்

டீசல் ஸ்போர்ட் வேரியண்ட்டுகள்

  • ஹூண்டாய் வெனியூ ஸ்போர்ட் 1.5 லிட்டர் டீசல் எஸ்எக்ஸ்: ரூ.10.31 லட்சம்
  • ஹூண்டாய் வெனியூ 1.5 லிட்டர் டீசல் எஸ்எக்ஸ் ஆப்ஷனல்: ரூ.11.53 லட்சம்
 ஹூண்டாய் வெனியூ ஐஎம்டி கியர்பாக்ஸ் மாடல் அறிமுகம்

பெருத்த ஏமாற்றம்

ஹூண்டாய் வெனியூ காரில் 1.0 லிட்டர் டர்போ மாடலிலும், 1.5 லிட்டர் டீசல் மாடலிலும் மட்டுமே ஐ-எம்டி கியர்பாக்ஸ் தேர்வு கிடைக்கிறது. அதுவும் உயர் வேரியண்ட்டுகளில் மட்டுமே. அதேநேரத்தில், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்விலும் ஐ-எம்டி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்பட்டு இருந்தால், அது மிகச் சிறப்பானதாக அமைந்திருக்கும். பட்ஜெட் பிரச்னையுடன் வெனியூ ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வை எதிர்பார்ப்பவர்களுக்கு இன்னும் சாத்தியப்படாத நிலையே ஏற்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
Hyundai India has officially launched the iMT (Intelligent Manual Transmission) on their compact-SUV, the Venue in the country. Alongside this, the Hyundai Venue now also comes with a brand new 'Sport Trim' as well.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X