ஹூண்டாய் வெனியூ காரில் விரைவில் புதிய டீசல் எஞ்சின் - விபரம்!

ஹூண்டாய் வெனியூ காரின் பிஎஸ்-6 மாடல்களின் விலை விபரம் வெளியான நிலையில், புதிய டீசல் எஞ்சின் தேர்வு விரைவில் டெலிவிரி கொடுக்கப்பட உள்ளது. இந்த புதிய டீசல் எஞ்சின் குறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹூண்டாய் வெனியூ காரில் விரைவில் புதிய டீசல் எஞ்சின் - விபரம்!

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் விற்பனையில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது ஹூண்டாய் வெனியூ கார். ஏற்கனவே, இந்த காம்பேக்ட் எஸ்யூவியில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட்டன.

ஹூண்டாய் வெனியூ காரில் விரைவில் புதிய டீசல் எஞ்சின் - விபரம்!

இந்த நிலையில், பிஎஸ்-6 விதிகள் காரணமாக, ஹூண்டாய் வெனியூ காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின்கள் தக்க வைக்கப்பட்டன. ஆனால், 1.4 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு பதிலாக, புதிய டீசல் எஞ்சின் தேர்வு வழங்கப்பட இருக்கிறது.

ஹூண்டாய் வெனியூ காரில் விரைவில் புதிய டீசல் எஞ்சின் - விபரம்!

கியா செல்டோஸ் மற்றும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிகளில் பயன்படுத்தப்படும் அதே 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்தான் ஹூண்டாய் வெனியூ காரிலும் பயன்படுத்தப்படும்.

ஹூண்டாய் வெனியூ காரில் விரைவில் புதிய டீசல் எஞ்சின் - விபரம்!

எனினும், கியா செல்டோஸ், புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார்களைவிட சக்தியை வெளிப்படுத்தும் திறனில் சற்றே குறைவாக ட்யூனிங் செய்யப்பட்டு வருகிறது.

ஹூண்டாய் வெனியூ காரில் விரைவில் புதிய டீசல் எஞ்சின் - விபரம்!

ஆம். ஹூண்டாய் வெனியூ காரில் வழங்கப்பட இருக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினில் வேரியபிள் டர்போசார்ஜருக்கு பதிலாக ஃபிக்ஸ்டு ஜியாமெட்ரி டர்போ சார்ஜர் பொருத்தப்பட்டு இருக்கும். இதனால், ஹூண்டாய் வெனியூ காரில் வழங்கப்பட இருக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 98 பிஎச்பி பவரையும், 220 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும்.

ஹூண்டாய் வெனியூ காரில் விரைவில் புதிய டீசல் எஞ்சின் - விபரம்!

கியா செல்டோஸ் காரில் இந்த 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும் நிலையில், ஹூண்டாய் வெனியூ காரில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ஹூண்டாய் வெனியூ காரில் விரைவில் புதிய டீசல் எஞ்சின் - விபரம்!

தற்போது வழங்கப்பட்டு வரும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் 88 பிஎச்பி பவரையும், 220 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கிறது. இதனைவிட புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிக சக்தியை வெளிப்படுத்தும் திறனுடன் வர இருக்கிறது.

ஹூண்டாய் வெனியூ காரில் விரைவில் புதிய டீசல் எஞ்சின் - விபரம்!

புதிய ஹூண்டாய் வெர்னா மற்றும் புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார்களிலும் இதே 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாகவும், அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்க வல்லதாகவும் இருக்கும்.

Source: Autocarindia

Most Read Articles
English summary
According to report, Hyundai Venue BS6 1.5-litre diesel engine will develop a maximum power of 100 PS and an estimated maximum torque of 220 Nm.
Story first published: Tuesday, March 3, 2020, 11:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X