விற்பனையில் பட்டையை கிளப்பும் வெனியூ... சந்தோஷத்தில் திக்குமுக்காடும் ஹூண்டாய்!

உரிமையாளர்களுக்கு பெருமையையும், போட்டியாளர்களுக்கு பொறாமையையும் தரும் அசத்தலான சாதனை ஒன்றை ஹூண்டாய் வெனியூ கார் படைத்துள்ளது. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

விற்பனையில் பட்டையை கிளப்பிய ஹூண்டாய் வெனியூ

இந்தியாவில் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. இந்த ரகத்தில் சிறந்த தேர்வுகளை கார் நிறுவனங்கள் நிலைநிறுத்தி இருக்கின்றன. இதனால், ஒவ்வொன்றிற்கும் சிறந்த விற்பனை கிடைத்து வருகிறது. அதாவது, வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் வழங்கி வருகின்றன.

விற்பனையில் பட்டையை கிளப்பிய ஹூண்டாய் வெனியூ

இந்த நிலையில், கார் விற்பனையில் நாட்டின் இரண்டாவது பெரிய கார் நிறுவனமாக விளங்கும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா கடந்த ஆண்டு மே மாதம் வெனியூ எஸ்யூவியை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்தது. மினி க்ரெட்டா கார் போல உருவகித்து பேசப்பட்ட இந்த காரின் டிசைன், வசதிகள், எஞ்சின் தேர்வுகள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்தது. விலையும் சரியாக நிர்ணயிக்கப்பட்டது.

விற்பனையில் பட்டையை கிளப்பிய ஹூண்டாய் வெனியூ

இதனால், ஆரம்பம் முதலே வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், வெனியூ கார் அறிமுகம் செய்யப்பட்டு ஓர் ஆண்டு ஆன நிலையில், விற்பனையில் அந்த கார் புதிய சாதனையை படைத்து அசத்தி இருக்கிறது.

விற்பனையில் பட்டையை கிளப்பிய ஹூண்டாய் வெனியூ

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட முதல் ஓர் ஆண்டிற்குள் ஒரு லட்சம் வெனியூ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது, உள்நாட்டு சந்தையில் 97,400 வெனியூ கார்களும், வெளிநாடுகளுக்கு 7,400 வெனியூ கார்களும் ஏற்றுமதி செய்யப்பட்டு இருப்பதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

விற்பனையில் பட்டையை கிளப்பிய ஹூண்டாய் வெனியூ

மேலும், கடந்த ஜனவரி - மே 2020 காலக் கட்டத்தில் இந்தியாவின் அதிகம் விற்பனையான காம்பேக்ட் எஸ்யூவி மாடல் என்ற இடத்தையும் தக்க வைத்ததாக ஹூண்டாய் பெருமிதம் தெரிவித்துள்ளது. மேலும், வெனியூ காரின் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடலை 44 சதவீத வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், 15,000 யூனிட்டுகள் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனையில் பட்டையை கிளப்பிய ஹூண்டாய் வெனியூ

கடந்த மார்ச் - ஜூன் 2020 இடையிலான காலக்கட்டத்தின்போது 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் 30 சதவீத பங்களிப்பை பெற்றது. மேலும், புளூலிங்க் கனெக்ட்டிவிட்டி செயலி கொண்ட டாப் வேரியண்ட் தேர்வை 30 சதவீத வாடிக்கையாளர்கள் வாங்கியதாகவும் ஹூண்டாய் குறிப்பிட்டுள்ளது.

விற்பனையில் பட்டையை கிளப்பிய ஹூண்டாய் வெனியூ

ஹூண்டாய் வெனியூ காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 118 பிஎச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

விற்பனையில் பட்டையை கிளப்பிய ஹூண்டாய் வெனியூ

இதில் வழங்கப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 82 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.

விற்பனையில் பட்டையை கிளப்பிய ஹூண்டாய் வெனியூ

இந்த காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் இன்டர்நெட் வசதி மூலமாக ஸ்மார்ட்ஃபோனை புளூலிங்க் செயலி மூலமாக இணைக்கும் வசதி கொடுக்கப்படுகிறது. இது வாடிக்கையாளர்களை கவர்ந்த விஷயமாகவும், அதிக பாதுகாப்பு அம்சங்களையும் வழங்குகிறது.

விற்பனையில் பட்டையை கிளப்பிய ஹூண்டாய் வெனியூ

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி கார் ரூ.6.7 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா எகஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட மாடல்களுடன் கடுமையான போட்டியை எதிர்கொண்டு இந்த விற்பனை சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, June 26, 2020, 14:30 [IST]
English summary
Hyundai has sold one lakh units of Venue compact sedan in India within one year of the period since its launch.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+