கியா செல்டோஸின் டீசல் என்ஜினுடன் விற்பனையாகவுள்ள பிஎஸ்6 ஹூண்டாய் வென்யூ..!

மிக விரைவில் ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து பிஎஸ்6 தரத்தில் அறிமுகமாகவுள்ள புதிய வென்யூ எஸ்யூவி மாடலில் வழங்கப்படவுள்ள என்ஜின் தேர்வுகள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதனை விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

கியா செல்டோஸின் டீசல் என்ஜினுடன் விற்பனையாகவுள்ள பிஎஸ்6 ஹூண்டாய் வென்யூ..!

ஹூண்டாய் வென்யூ புதியதாக 1.5 லிட்டர் டீசல் என்ஜினை பெறவுள்ளதாக ஏற்கனவே நமது தளத்தில் கூறியிருந்தோம். தற்போது அந்த தகவல் உறுதியாகியுள்ளது. தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்ற பிஎஸ்4 வென்யூ மாடலிலும் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வு வழங்கப்பட்டு வருகிறது.

கியா செல்டோஸின் டீசல் என்ஜினுடன் விற்பனையாகவுள்ள பிஎஸ்6 ஹூண்டாய் வென்யூ..!

இதற்கு மாற்றாக தான் 1.5 லிட்டர் டீசல் என்ஜினை புதிய வென்யூ எஸ்யூவி பெறவுள்ளது. புதிய டீசல் என்ஜின் மட்டுமின்றி பிஎஸ்6 அப்டேட்டாக மேலும் சில அம்சங்களும் 2020 வென்யூ மாடலில் பொருத்தப்படவுள்ளன.

கியா செல்டோஸின் டீசல் என்ஜினுடன் விற்பனையாகவுள்ள பிஎஸ்6 ஹூண்டாய் வென்யூ..!

ஆனால் தற்போது கொண்டுள்ள அதே எண்ணிக்கையில் தான் வேரியண்ட்கள் இந்த பிஎஸ்6 மாடலுக்கும் வழங்கப்படவுள்ளது. அதன்படி ட்யூல்-டோன் பெயிண்ட் அமைப்பில் இதன் டாப் வேரியண்ட்களாக SX, SX+ மற்றும் SX(O) உள்ளிட்ட ட்ரிம்கள் அப்படியே தொடரவுள்ளன.

கியா செல்டோஸின் டீசல் என்ஜினுடன் விற்பனையாகவுள்ள பிஎஸ்6 ஹூண்டாய் வென்யூ..!

இவற்றில் SX வேரியண்ட் டயரின் அழுத்தத்தை அளவிட மானிட்டரையும், SX+ வேரியண்ட் (ஆட்டோமேட்டிக் ட்ரிம் மட்டும்) மற்றும் SX (O) வேரியண்ட்கள் 12 வோல்ட் மின் வழங்கியையும் கொண்டுள்ளன.

கியா செல்டோஸின் டீசல் என்ஜினுடன் விற்பனையாகவுள்ள பிஎஸ்6 ஹூண்டாய் வென்யூ..!

இதன் எண்ட்ரி-லெவல் வேரியண்ட்களான E மற்றும் S உள்ளிட்டவை ஆல்டர்னேட்டர் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் (AMS) என்ற காரின் பேட்டரியின் ஆயுட்காலத்தை அதிகரிக்கக்கூடிய அமைப்பை பெற்றுள்ளன. இந்த பிஎஸ்6 வென்யூ மாடலில் வழங்கப்படவுள்ள 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஏற்கனவே கியா செல்டோஸ் எஸ்யூவியில் வழங்கப்பட்டு வருகிறது.

கியா செல்டோஸின் டீசல் என்ஜினுடன் விற்பனையாகவுள்ள பிஎஸ்6 ஹூண்டாய் வென்யூ..!

இந்த டீசல் என்ஜின் செல்டோஸ் மாடலில் வெவ்வேறு விதமான வடிவில் உள்ள டர்போசார்ஜரின் (VGT) உதவியினால் அதிகப்பட்சமாக 115 பிஎச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தி வருகிறது. அதுவே வென்யூ மாடலில் இந்த சார்ஜர் நிலையாக பொருத்தப்படவுள்ளதால், அதனை விட குறைவான ஆற்றலையே வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியா செல்டோஸின் டீசல் என்ஜினுடன் விற்பனையாகவுள்ள பிஎஸ்6 ஹூண்டாய் வென்யூ..!

காருக்கு இந்த என்ஜின் கிட்டத்தட்ட தற்போதைய 1.4 லிட்டர் என்ஜின் வெளிப்படுத்தும் 90 பிஎச்பி பவர் மற்றும் 220 என்எம் டார்க்திறன் அளவில் வழங்கும் என தெரிகிறது. இந்த 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வென்யூ எஸ்யூவி மட்டுமில்லாமல் ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து மிக விரைவில் அறிமுகமாகவுள்ள ஐ20 மாடலின் அடுத்த தலைமுறை காரிலும் வழங்கப்படவுள்ளது.

கியா செல்டோஸின் டீசல் என்ஜினுடன் விற்பனையாகவுள்ள பிஎஸ்6 ஹூண்டாய் வென்யூ..!

அதேசமயம் எலைட் ஐ20 மாடலின் தற்போதைய தலைமுறை கார் வருகிற ஜூன் மாதம் ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து புதிய ப்ரீமியம் ஹேட்ச்பேக் அறிமுகமாகும் வரையில் பெட்ரோல் என்ஜினுடன் மட்டும் தான் தொடரவுள்ளது. அதேபோல் ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் வெர்சனின் விலை குறைவான வேரியண்ட்களுக்கும் புதிய 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட வாய்ப்புள்ளது.

கியா செல்டோஸின் டீசல் என்ஜினுடன் விற்பனையாகவுள்ள பிஎஸ்6 ஹூண்டாய் வென்யூ..!

மேலும் ஹூண்டாய் வென்யூ மாடலுக்கு சந்தையில் போட்டியாக உள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி300 மாடல் பிஎஸ்6 பெட்ரோல் என்ஜினுடன் பிஎஸ்6 டீசல் என்ஜினையும் பெற்று விற்பனையாகவுள்ளது. புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மாடல் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனில் பெட்ரோல் வேரியண்ட்டை மட்டும் பெறவுள்ளது.

கியா செல்டோஸின் டீசல் என்ஜினுடன் விற்பனையாகவுள்ள பிஎஸ்6 ஹூண்டாய் வென்யூ..!

இதன் பிரிவில் உள்ள மற்ற பிரபலமான எஸ்யூவி மாடல்களான டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார்கள் மட்டும் தான் தற்போதைக்கு பிஎஸ்6 தரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களுடன் சந்தையில் விற்பனையாகி வருகின்றன.

கியா செல்டோஸின் டீசல் என்ஜினுடன் விற்பனையாகவுள்ள பிஎஸ்6 ஹூண்டாய் வென்யூ..!

இதில் டாடா நெக்ஸான் பிஎஸ்6 மாடலின் பெட்ரோல் வேரியண்ட்களின் டெலிவிரிகள் மட்டுமே இப்போதைக்கு நடைபெற்று வருகிறது. டீசல் வேரியண்ட்களின் டெலிவிரிகள் இன்னும் சில வாரங்களில் துவங்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியா செல்டோஸின் டீசல் என்ஜினுடன் விற்பனையாகவுள்ள பிஎஸ்6 ஹூண்டாய் வென்யூ..!

ட்ரான்ஸ்மிஷனிற்கு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஹூண்டாய் வென்யூ பிஎஸ்6 மாடலுக்கு வழங்கப்படாது என கூறப்படுகிறது. இதனால் டீசல்-ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் உள்ள டாடா நெக்ஸான் பிஎஸ்6 மற்றும் விரைவில் சந்தைக்கு வரவுள்ள பிஎஸ்6 எக்ஸ்யூவி300 மற்றும் கியா சொனெட் மாடல்களுக்கு இது சாதகமாக அமையும்.

கியா செல்டோஸின் டீசல் என்ஜினுடன் விற்பனையாகவுள்ள பிஎஸ்6 ஹூண்டாய் வென்யூ..!

ஹூண்டாய் வென்யூ பிஎஸ்6 டீசல் வேரியண்ட்டில் வழங்கப்படவுள்ள கூடுதல் தொழிற்நுட்பங்களால் இதன் எக்ஸ்ஷோரூம் விலை எந்த அளவிற்கு அதிகரிக்கப்படவுள்ளது என்பது தெரியவில்லை. தற்போதைய பிஎஸ்4 வென்யூ மாடல் ரூ.7.80 லட்சத்தில் இருந்து ரூ.10.89 லட்சம் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Most Read Articles
English summary
Hyundai Venue to get BS6 diesel engine from Kia Seltos details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X