ஹூண்டாய் வெனியூ டர்போ எஞ்சின் மாடலுக்கு அதிக வரவேற்பு!

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் வழங்கப்படும் டர்போ எஞ்சின் மாடலுக்கு வாடிக்கையாளர் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஹூண்டாய் வெனியூ டர்போ எஞ்சின் மாடலுக்கு அதிக வரவேற்பு!

கடந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஹூண்டாய் வெனியூ காம்பேக்ட் எஸ்யூவி கார் வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவுக்கு அடுத்து விற்பனையில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஹூண்டாய் வெனியூ டர்போ எஞ்சின் மாடலுக்கு அதிக வரவேற்பு!

ஹூண்டாய் வெனியூ கார் டிசைனில் கவர்ந்து வருவதுடன், மூன்று விதமான எஞ்சின் தேர்வுகளில் கிடைப்பதும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வு வாய்ப்பை வழங்கி வருகிறது. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

ஹூண்டாய் வெனியூ டர்போ எஞ்சின் மாடலுக்கு அதிக வரவேற்பு!

இதில், அதிக செயல்திறன் மிக்க 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மாடலுக்கு வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரேவற்பு இருந்து வருகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

ஹூண்டாய் வெனியூ டர்போ எஞ்சின் மாடலுக்கு அதிக வரவேற்பு!

இந்த எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலில் அதிர்வுகள் குறைவாக இருப்பதுடன், நடுத்தர நிலையில் ஓட்டும்போது சிறப்பான பவர் டெலிவிரியை வழங்குகிறது. இதனால், இந்த எஞ்சின் வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஹூண்டாய் வெனியூ டர்போ எஞ்சின் மாடலுக்கு அதிக வரவேற்பு!

சென்ற 2019-20 நிதி ஆண்டில் மொத்தம் 93,624 ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதல், 44,073 வெனியூ கார்கள் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் என்று தெரிய வந்துள்ளதாக ஆட்டோகார் இந்தியா தள செய்தி தெரிவிக்கிறது.

ஹூண்டாய் வெனியூ டர்போ எஞ்சின் மாடலுக்கு அதிக வரவேற்பு!

மேலும், மொத்தம் விற்பனை செய்யப்பட்ட ஹூண்டாய் வெனியூ கார்களில் 34,860 யூனிட்டுகள் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது, 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுக்கு மூன்றாவது இடமே கிடைத்தது.

ஹூண்டாய் வெனியூ டர்போ எஞ்சின் மாடலுக்கு அதிக வரவேற்பு!

ஹூண்டாய் வெனியூ கார் கொடுக்கும் பணத்திற்கு அதிக மதிப்புவாய்ந்த மாடலாகவும், தொழில்நுட்ப அம்சங்களிலும் சிறப்பானதாக வந்துள்ளது. இந்த காரில் வழங்கப்படும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஹூண்டாய் புளூலிங்க் கனெக்ட்டிவிட்டி செயலியை சப்போர்ட் செய்யும் தொழில்நுட்பத்தை பெற்றிருக்கிறது. இதன்மூலமாக, ஏராளமான வசதிகளை பெற முடியும்.

ஹூண்டாய் வெனியூ டர்போ எஞ்சின் மாடலுக்கு அதிக வரவேற்பு!

ஹூண்டாய் வெனியூ காரில் பயன்படுத்தப்படும் இதே 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் புதிய வெர்னா, ஆரா உள்ளிட்ட மாடல்களிலும் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இந்த கார்களிலும் டர்போ பெட்ரோல் எஞ்சின் குறிப்பிடத்தக்க விற்பனையை பதிவு செய்யும் என்று தெரிகிறது.

ஹூண்டாய் வெனியூ டர்போ எஞ்சின் மாடலுக்கு அதிக வரவேற்பு!

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி ரூ.6.70 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் இருந்து கிடைக்கிறது. இதன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் ரூ.8.46 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் மாடல் ரூ.8.10 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இருந்து கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
According to a media report, Hyundai Venue 1. 0-liter, 3-cylinder turbocharged petrol engine model has received overwhelming response from Indian customers.
Story first published: Saturday, May 23, 2020, 12:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X