புதிய ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ஹூண்டாய் வெர்னா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்த காரின் முக்கிய விபரங்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

புதிய ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

வேரியண்ட் விபரம்

புதிய ஹூண்டாய் வெர்னா கார் S, SX, SX(O) என மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வந்துள்ளது. எனினும், இவற்றை எஞ்சின், கியர்பாக்ஸ் தேர்வை அடிப்படையாக வைத்து 11 விதமான வேரியண்ட் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

பெட்ரோல் எஞ்சின்

ஹூண்டாய் வெர்னா காரில் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 1.5 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் டர்போ என இரண்டு பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும். இதில், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 113 பிஎச்பி பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

டர்போ பெட்ரோல் எஞ்சின்

இதன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு இல்லை.

புதிய ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

டீசல் எஞ்சின்

அடுத்து இதன் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 113 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

வெளிப்புற அம்சங்கள்

புதிய ஹூண்டாய் வெர்னா காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 16 அங்குல அலாய் வீல்கள், எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் சைடு மிரர்கள் ஆகிய முக்கிய சிறப்புகளை பெற்றிருக்கிறது. இதன் க்ரில் அமைப்பு முற்றிலும் புதிதாகவும், பழைய மாடலில் இருந்து முற்றிலும் வேறுபடுத்தும் விதத்தில் அமைந்துளளது.

புதிய ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

உட்புற அம்சங்கள்

உட்புறத்திலும் பல்வேறு கூடுதல் சிறப்பு அம்சங்களுடன் வந்துள்ளது. 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அர்கமிஸ் ஆடியோ சிஸ்டம், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், புளூலிங்க் கனெக்டெட் கார் செயலி, வாய்ஸ் ரெககனிஷன் வசதி ஆகியவை உள்ளன.

MOST READ: 2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...

புதிய ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

ரிமோட் கன்ட்ரோல்

இதன் புளூலிங்க் செயலி கொண்ட ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்தி, ரிமோட் முறையில் எஞ்சின், ஏசி சிஸ்டத்தை வெளியில் இருந்து கட்டுப்படுத்தும் வசதியும் உள்ளது. இதுதவிர்த்து, ஏராளமான வசதிகளை புளூலிங்க் ஸ்மார்ட் வாட்ச் வழங்கும்.

MOST READ: கொரோனாவால் நிலைகுலைந்த அமெரிக்கா... கோவத்தில் டிரம்ப் செய்த காரியம்... இப்போதான் வேகம் எடுக்குது...

புதிய ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

பாதுகாப்பு அம்சங்கள்

இரண்டு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், முன்புற, பின்புற பார்க்கிங் சென்சார்கள், ரிவர்ஸ் கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோ்ல உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு வசதிகளையும் பெற்றிருக்கிறது.

MOST READ: சுவாரஷ்யமான ஐந்து கார் ரேஸ் கேம்கள்.. பப்ஜி, ஃப்ரீ ஃபயர் போலவே த்ரில்லானவை.. ஒவ்வொன்னும் வேற லெவல்...

புதிய ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

விலை விபரம்

புதிய ஹூண்டாய் வெர்னா கார் ரூ.9.31 லட்சம் முதல் ரூ.15.10 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ளது. மாருதி சியாஸ், ஹோண்டா சிட்டி, ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ, ஸ்கோடா ரேபிட் உள்ளிட்ட மிட்சைஸ் செடான் கார்களுடன் போட்டி போடும்.

Most Read Articles

English summary
South Korean car maker, Hyundai has launched Verna facelift model with BS6 engine options in India prices starting at. Rs.9.31 Lakh (Ex-Showroom).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X