புதிய ஹூண்டாய் வெர்னா கார் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம்... விரைவில் டெலிவிரி பணிகள் துவங்குகிறது

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் விலை விபரம் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், இன்று முதல் முறைப்படி சந்தையில் விற்பனைக்காக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய ஹூண்டாய் வெர்னா கார் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம்!

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் டாப் - 3 மாடல்களில் ஒன்றாக ஹூண்டாய் வெர்னா கார் இருந்து வருகிறது. இந்த சூழலில், பிஎஸ்6 விதிகளுக்கு ஒப்பான எஞ்சின் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் கூடிய புதிய வெர்னா கார் கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் வெளியிடப்பட்டது.

புதிய ஹூண்டாய் வெர்னா கார் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம்!

மேலும், ஏற்கனவே விலை மற்றும் எஞ்சின் விபரங்கள் வெளியிடப்பட்ட நிலையில், கொரோனா பிரச்னையால் வாடிக்கையாளர்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்கவில்லை. எனவே, தற்போது லாக் டவுன் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் முறைப்படி அறிவிப்பு வெளியிடப்பட்டு இன்று சந்தையில் களமிறக்கப்பட்டுள்ளது.

புதிய ஹூண்டாய் வெர்னா கார் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹூண்டாய் வெர்னா கார் எஸ், எஸ் ப்ளஸ், எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ் ஆப்ஷன் பேக் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும். ரூ.9.30 லட்சம் முதல் ரூ.15.10 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

புதிய ஹூண்டாய் வெர்னா கார் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹூண்டாய் வெர்னா காரில் முக்கிய அம்சமாக பிஎஸ்6 விதிகளுக்கு இணையான இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 113 பிஎச்பி பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஐவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய ஹூண்டாய் வெர்னா கார் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம்!

அடுத்து 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 113 பிஎச்பி பவரையும் 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதுவும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும்.

புதிய ஹூண்டாய் வெர்னா கார் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம்!

இதன் சக்திவாய்ந்த மாடலாக வந்திருக்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வானது 118 பிஎச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதனுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

புதிய ஹூண்டாய் வெர்னா கார் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டிசைனில் பல முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. புதிய க்ரில் அமைப்பு, டைமண்ட் கட் அலாய் வீல்கள், எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், சில்வர் கதவு கைப்பிடிகள், எல்இடி டெயில்லைட்டுகள், புதிய பம்பர் அமைப்பு ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய ஹூண்டாய் வெர்னா கார் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் புளுலிங்க் கனெக்ட்டிவிட்டி வசதியும் உள்ளது. அர்கமிஸ் சவுண்ட் சிஸ்டம், பின் இருக்கை பயணிகளுக்கு தனியாக யுஎஸ்பி சார்ஜர் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

புதிய ஹூண்டாய் வெர்னா கார் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹூண்டாய் வெர்னா காருக்கு ஏற்கனவே ஆன்லைனில் முன்பதிவு ஏற்கப்பட்டு வருகிறது. இப்போது குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள ஹூண்டாய் ஷோரூம்களும் திறக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் நேரில் சென்றும் முன்பதிவு செய்து கொள்ளும் வாய்ப்புள்ளது. மிக விரைவில் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 20, 2020, 14:28 [IST]
English summary
Hyundai Motor has launched Verna Facelift model with host of features and BS6 engine options in India prices starting at Rs.9.30 lakh (Ex-Showroom).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+