புதிய ஹூண்டாய் வெர்னா காரின் வேரியண்ட் வாரியாக விலை விபரம் கசிந்தது!

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் வேரியண்ட் வாரியாக விலை விபரம் கசிந்துள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் வேரியண்ட் வாரியாக விலை விபரம் கசிந்தது!

சிறந்த தேர்வு

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் டா்ப -3 மாடல்களில் ஒன்றாக ஹூண்டாய் வெர்னா முக்கிய போட்டியாளராக இருந்து வருகிறது. வாடிக்கையாளர்களின் விருப்ப பட்டியலிலும் இடம்பிடித்து வருகிறது. இந்த நிலையில், மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ஹூண்டாய் வெர்னா கார் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் வேரியண்ட் வாரியாக விலை விபரம் கசிந்தது!

வேரியண்ட் விபரம்

இந்த காரின் விலை விபரங்கள் தற்போது டீம் பிஎச்பி தளத்தில் வெளியாகி இருக்கின்றன. புதிய ஹூண்டாய் வெர்னா கார் S, SX மற்றும் SX(O) ஆகிய வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது.

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் வேரியண்ட் வாரியாக விலை விபரம் கசிந்தது!

பெட்ரோல் எஞ்சின்

மேலும், ஹூண்டாய் வெர்னா காரில் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான புதிய எஞ்சின் தேர்வுகளுடன் வர இருக்கிறது. அதன்படி, 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 113 பிஎச்பி பவரையும், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல எஞ்சின் 118 பிஎச்பி பவரையும், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 113 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கின்றன.

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் வேரியண்ட் வாரியாக விலை விபரம் கசிந்தது!

டர்போ பெட்ரோல் மாடல்

புதிய வெர்னா காரின் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு எஸ்எக்ஸ் ஆப்ஷனல் வேரியண்ட்டில் மட்டுமே வர இருக்கிறது. அத்துடன் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் தேர்வு வழ்கப்பட உள்ளது.

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் வேரியண்ட் வாரியாக விலை விபரம் கசிந்தது!

டீசல் மாடல்

அடுத்து 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் எதிர்பார்க்கப்படுகிறது. டீசல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே கொடுக்கப்படும் என்று தெரிகிறது.

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் வேரியண்ட் வாரியாக விலை விபரம் கசிந்தது!

பேஸ் வேரியண்ட்

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் எஸ் வேரியண்ட்டில் 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அர்கமிஸ் சவுண்ட் சிஸ்டம், வாய்ஸ் ரெகனிசன் வசதி, டர்ன் இண்டிகேட்டர்களுடன் சைடு மிரர்கள், இரண்டு ஏர்பேக்குகள் ஆகியவை வழங்கப்படும்.

MOST READ: மஞ்சள் நிற ராயல் எண்ட்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் டீசர் வீடியோ தயாராகிறது... இந்திய அறிமுகம் எப்ப

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் வேரியண்ட் வாரியாக விலை விபரம் கசிந்தது!

மிட் வேரியண்ட்

எஸ்எக்ஸ் என்ற நடுத்தர விலை வேரியண்ட்டில் 4.2 அங்குல கலர் டிஎஃப்டி திரை, எலெக்ட்ரின் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர், எமெர்ஜென்சி ஸ்டாப் சிக்னல், டிரைவர் ரியூர் வியூ மானிட்டர், பின்புற ஜன்னல்களுக்கான திரை மறைப்பு உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

MOST READ: தேசிய ஊரடங்கு... நிம்மதி பெருமூச்சு விடும் நகரங்கள்... மனிதனை தவிர அனைத்து ஜீவராசிகளும் 'ஹேப்பி'!

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் வேரியண்ட் வாரியாக விலை விபரம் கசிந்தது!

டாப் வேரியண்ட்

எஸ்எக்ஸ் ஆப்ஷனல் என்ற மிக விலை உயர்ந்த வேரியண்ட்டில் எல்இடி ஹெட்லைட்டுகள், வென்டிலேட்டட் வசதியுடன் முன் இருக்கைகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், சைடு மற்றும் கர்டெயின் ஏர்பேக்குKல், புளூலிங்க் செயலிக்கு மூன்று ஆண்டுகளுக்கான கட்டண திட்டம் ஆகியவை வழங்கப்படும்.

MOST READ: இந்தியாவிற்காக தென் கொரியாவில் இருந்து கொரோனா சோதனை கருவிகளை வரவழைக்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ்...

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் வேரியண்ட் வாரியாக விலை விபரம் கசிந்தது!

டர்போ பெட்ரோல் வேரியண்ட்

எஸ்எக்ஸ் ஆப்ஷனல் வேரியண்டின் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடலில் கூடுதலாக பேடில் ஷிஃப்ட் வசதி, இரட்டை சைலென்சர் குழல் அமைப்பு, முன்புற பார்க்கிங் சென்சார்கள், ரியர் டிஸ்க் பிரேக்குகள், உட்புறத்தில் கருப்பு வண்ண இன்டீரியர் மற்றும் சிவப்பு வண்ண பாகங்களுடன் அலங்காரம் போன்றவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் வேரியண்ட் வாரியாக விலை விபரம் கசிந்தது!

பெட்ரோல் விலை விபரம்

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் 1.5 லிட்டர் பெட்ரோல் மாடலின் எஸ் வேரியண்ட்டிற்கு ரூ.9.31 லட்சம் விலையும், எக்ஸ்எக்ஸ் வேரியண்ட்டிற்கு ரூ.10.70 லட்சம் விலையும், எக்ஸ்எக்ஸ் ஆப்ஷனல் வேரியண்ட்டிற்கு ரூ.12.59 லட்சம் விலையும் நிர்ணயிக்கப்பட உள்ளது தெரிய வந்துள்ளது. அதேபோன்று, 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் டிசிடி எஸ்எக்ஸ் ஆப்ஷனல் வேரியண்ட்டிற்கு ரூ.13.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வர இருப்பது தெரிய வந்துள்ளது.

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் வேரியண்ட் வாரியாக விலை விபரம் கசிந்தது!

டீசல் விலை விபரம்

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் 1.5 லிட்டர் எஸ் வேரியண்ட்டிற்கு ரூ.10.65 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும், 1.5 லிட்டர் எஸ்எக்ஸ் வேரியண்ட்டிற்கு ரூ.12.05 லட்சம் விலையும், எஸ்எக்ஸ் ஆப்ஷனல் வேரியண்ட்டிற்கு ரூ.13.94 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

Most Read Articles

English summary
Ahead of its launch that could take place in the coming weeks, variant wise price details of the Hyundai Verna facelift have surfaced on the online.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X