அப்டேட்டான தொழிற்நுட்பங்களுடன் வருகிறது 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்...

இரண்டாம் தலைமுறை க்ரெட்டா மாடலின் விலை பற்றிய அறிவிப்பை வெளியிட்டதற்கு பிறகு ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்டின் அறிமுகத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்த மார்ச் மாதத்திற்குள்ளாக சந்தையில் அறிமுகமாகவுள்ள இந்த ஃபேஸ்லிஃப்ட் காரின் உட்புற புகைப்படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றின் மூலம் கிடைத்துள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

அப்டேட்டான தொழிற்நுட்பங்களுடன் வருகிறது 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்...

இந்த புகைப்படங்களின் மூலம் பார்க்கும்போது வெர்னாவின் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உட்புறம் மற்ற ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை கிட்டத்தட்ட ஒத்திருப்பது தெரிய வருகிறது. இருப்பினும் இந்த ஃபேஸ்லிஃப்ட் வெர்சனின் உட்புறத்தில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

அப்டேட்டான தொழிற்நுட்பங்களுடன் வருகிறது 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்...

இதில் முக்கிய மாற்றமாக இன்போடெயின்மெண்ட் திரை தற்போதைய மாடல்களில் உள்ள 7.0 இன்ச் திரையை விட பெரியதாக உள்ளது. வெர்னா மாடலில் உள்ள இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தின் மூலம் ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட தொழிற்நுட்பங்களை இணைத்து கொள்ள முடியும்.

அப்டேட்டான தொழிற்நுட்பங்களுடன் வருகிறது 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்...

மற்றொரு கவனிக்கத்தக்க மாற்றமாக தற்போதைய வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் உள்ள அனலாக் டயல்ஸிற்கு மாற்றாக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை சீனாவில் கடந்த ஆண்டு அறிமுகமான ஹூண்டாய் க்ரெட்டா மாடலில் பார்க்கலாம்.

அப்டேட்டான தொழிற்நுட்பங்களுடன் வருகிறது 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்...

க்ரெட்டா மட்டுமின்றி இந்த வருட இறுதியில் சந்தைக்கு வரவுள்ள ஐ20 மாடலின் அடுத்த தலைமுறை காரிலும் இந்த டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்படவுள்ளது. வெர்னா மாடலின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் ஃபாக்ஸ் வுட் ட்ரிம்களினால் வடிவமைக்கப்பட்ட டேஸ்போர்ட்டை பெற்றுள்ளது.

அப்டேட்டான தொழிற்நுட்பங்களுடன் வருகிறது 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்...

தற்போதைய வெர்னா மாடலில் ஃபாக்ஸ் ப்ரஷ்டு செய்யப்பட்ட அலுமினியம் ட்ரிம் தான் பொருத்தப்பட்டு வருகிறது. இவற்றை போல் புதிய டிசைனில் ஏசி வெண்ட்ஸை வெர்னாவின் இந்த ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் பெற்றுள்ளது. இந்த டிசைனில் ஏசி வெண்ட்ஸையும் சீன க்ரெட்டா மாடலில் காணலாம்.

அப்டேட்டான தொழிற்நுட்பங்களுடன் வருகிறது 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்...

இந்த தொழிற்நுட்ப அப்டேட்களை கடந்து என்ஜின் தேர்வுகளில் தான் வெர்னாவின் இந்த ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் மிக முக்கியமான அப்டேட்களை பெற்றுள்ளது. இந்த மாத இறுதியில் அறிமுகமாகவுள்ள இந்த கார் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான மூன்று என்ஜின் தேர்வுகளுடன் விற்பனை செய்யப்படவுள்ளது.

அப்டேட்டான தொழிற்நுட்பங்களுடன் வருகிறது 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்...

இதில் ஒன்றான 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 115 பிஎச்பி பவரை அதிகப்பட்சமாக வெளிப்படுத்தக்கூடியது. இந்த என்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

அப்டேட்டான தொழிற்நுட்பங்களுடன் வருகிறது 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்...

மற்றொரு 1.5 லிட்டர் விஜிடி டர்போ டீசல் என்ஜின் தேர்வுக்கு 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோ என்ற இரு ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படவுள்ளது. இந்த டர்போ டீசல் என்ஜினும் அதிகப்பட்சமாக 115 பிஎச்பி பவரை காருக்கு வழங்கவல்லது.

அப்டேட்டான தொழிற்நுட்பங்களுடன் வருகிறது 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்...

மூன்றாவது என்ஜின் தேர்வான 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முழு-லோடட் எஸ்எக்ஸ்(O) ட்ரிமிற்கு மட்டும் தான் வழங்கப்படவுள்ளது. 120 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய இந்த டர்போ-பெட்ரோல் என்ஜினுடன் 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

அப்டேட்டான தொழிற்நுட்பங்களுடன் வருகிறது 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்...

உட்புறத்தை தாண்டி காரின் வெளிப்புறத்திலும் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம். முன்புறத்தில் எல்இடி தரத்தில் ஹெட்லேம்ப்பை கொண்டுள்ள இந்த கார் பெரிய க்ரில் பகுதியை கொண்டுள்ளது. இதில் க்ரில் டார்க் க்ரோம் ஃபினிஷிங்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அப்டேட்டான தொழிற்நுட்பங்களுடன் வருகிறது 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்...

முன்புற பம்பர் ப்ரஷ்டு அலுமினியத்தால் உருவாக்கப்பட்டதாகவும், அலாய் சக்கரங்கள் புதிய டிசைனிலும் காட்சியளிக்கின்றன. முன்புறத்தை போல் காரின் பின்புறத்தின் டிசைனும் சிறிது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பின்பக்கத்தில் உள்ள டெயில் லைட்டும், பம்பரும் மைல்டான மாற்றங்களை ஏற்றுள்ளன.

வெர்னாவின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் ஆறு விதமான நிறங்களில் சந்தைப்படுத்தப்படவுள்ளது. அந்த ஆறு நிறங்களாவன, கருப்பு, சிவப்பு, வெள்ளை, சில்வர், க்ரே மற்றும் ஸ்டார்ரி நைட் ஆகியவன ஆகும். இதில் ஸ்டார்ரி நைட் நிறத்துடன் பளபளப்பான கருப்பு நிறம் ஃபினிஷிங் செய்யப்பட்டிருக்கும்.

அப்டேட்டான தொழிற்நுட்பங்களுடன் வருகிறது 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்...

இந்த அம்சங்கள் மட்டுமில்லாமல் ஹூண்டாயின் மிட்சைஸ் செடான் ஆன வெர்னா மாடல் சன்ரூஃப், காற்றோட்டமான முன்புற இருக்கைகள், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங், ஹேண்ட்ஸ்-ஃப்ரீ பூட் மற்றும் ஆர்காமிஸ் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்டவற்றையும் கொண்டுள்ளது.

இவற்றுடன் ஹீண்டாய்யின் ப்ளூலிங்க் தொழிற்நுட்பத்தையும் இந்த 2020 ஃபேஸ்லிஃப்ட் மாடல் பெற்றுள்ளதால், ஸ்மார்ட்-வாட்ச் ஆப் லிங்க் மற்றும் ரிமோட் வாகனத்தை ஸ்டார்ட் செய்தல் உள்ளிட்ட வசதிகளை ஓட்டுனர் பெறலாம். முன்னதாக ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் புதிய வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான புக்கிங்களை ஏற்பதாக அறிவித்திருந்தது.

விரைவில் சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள ஹோண்டா சிட்டி மாடல் மட்டுமின்றி ஹூண்டாய்யின் இந்த வெர்னா ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் மாருதி சுசுகி சியாஸ், டொயோட்டா யாரிஸ் மற்றும் அப்டேட் செய்யப்பட்ட ஸ்கோடா ராபிட் மற்றும் ஃபோக்ஸ்வேகன் வெண்டோ உள்ளிட்ட மாடல்களுடனும் விற்பனையில் போட்டியிடவுள்ளது.

Source: Autocar India

Most Read Articles
English summary
India-spec Hyundai Verna facelift interior: first pics
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X