புதிய எண்ட்ரீ-லெவல் ட்ரிம் அறிமுகம்.. ஹூண்டாய் வெர்னா செடான் காரை இனி ரூ.9.02 லட்சத்திலேயே வாங்கலாம்

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் வெர்னா காரின் புதிய ஆரம்ப நிலை வேரியண்ட்டை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வேரியண்ட்டை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

புதிய எண்ட்ரீ-லெவல் ட்ரிம் அறிமுகம்.. ஹூண்டாய் வெர்னா செடான் காரை இனி ரூ.9.02 லட்சத்திலேயே வாங்கலாம்

இ என்ற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள ஹூண்டாய் வெர்னாவின் புதிய ஆரம்ப நிலை வேரியண்ட்டின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.9.02 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு வேரியண்ட்டில் மட்டும்தான் பெட்ரோல் என்ஜின் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் இனி வழங்கப்படவுள்ளது.

புதிய எண்ட்ரீ-லெவல் ட்ரிம் அறிமுகம்.. ஹூண்டாய் வெர்னா செடான் காரை இனி ரூ.9.02 லட்சத்திலேயே வாங்கலாம்

இந்த புதிய ஆரம்ப நிலை வேரியண்ட்டால் செடான் கார் பிரியர்கள் குறைவான விலையில் இனி வெர்னாவை பெற முடியும். ஏனெனில் வெர்னா லைன்அப்பில் இதற்கு அடுத்துள்ள ட்ரிம்-ஐ காட்டிலும் புதிய இ வேரியண்ட்டின் விலை கிட்டத்தட்ட ரூ.36,000 வரையில் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய எண்ட்ரீ-லெவல் ட்ரிம் அறிமுகம்.. ஹூண்டாய் வெர்னா செடான் காரை இனி ரூ.9.02 லட்சத்திலேயே வாங்கலாம்

வெர்னாவின் முந்தைய எண்ட்ரீ-லெவல் ட்ரிம்-ஆன எஸ் உடன் ஒப்பிடும்போது புதிய ஆரம்ப நிலை ட்ரிம் சில வசதிகளை இழந்துள்ளது. இதில் சுறா துடுப்பு வடிவிலான ஆண்டெனா, சன்-கிளாஸ் ஹோல்டர் மற்றும் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை அடங்குகின்றன.

புதிய எண்ட்ரீ-லெவல் ட்ரிம் அறிமுகம்.. ஹூண்டாய் வெர்னா செடான் காரை இனி ரூ.9.02 லட்சத்திலேயே வாங்கலாம்

அதேபோல் இனிமையான இசையினை வழங்கும் அர்கமைஸ் சவுண்ட் சிஸ்டம், ஸ்டேரிங் சக்கரத்தில் கண்ட்ரோல்கள், ப்ளூடூத் இணைப்பு மற்றும் பிராண்டின் ஐ-ப்ளூ ஸ்மார்ட்போன் இணைப்பு வசதிகளும் புதிய இ ட்ரிம்மில் வழங்கப்படவில்லை. இதற்கு 1.5 லிட்டர் பெட்ரோல் என்ற ஒற்றை என்ஜின் மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது.

புதிய எண்ட்ரீ-லெவல் ட்ரிம் அறிமுகம்.. ஹூண்டாய் வெர்னா செடான் காரை இனி ரூ.9.02 லட்சத்திலேயே வாங்கலாம்

6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டு வரும் இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 114 பிஎச்பி மற்றும் 144 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். அதேநேரம் ஹூண்டாய் வெர்னாவின் மற்ற வேரியண்ட்களுக்கு டீசல் மற்றும் டர்போ-பெட்ரோல் என்ஜின் தேர்வுகள் தொடர்ந்து வழங்கப்படவுள்ளன.

புதிய எண்ட்ரீ-லெவல் ட்ரிம் அறிமுகம்.. ஹூண்டாய் வெர்னா செடான் காரை இனி ரூ.9.02 லட்சத்திலேயே வாங்கலாம்

இதில் 1.5 லிட்டர் விஜிடி டீசல் என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் என்ற கியர்பாக்ஸ் தேர்வுடன் 114 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனையும், 1.0 லிட்டர், 3-சிலிண்டர், டர்போ-பெட்ரோல் என்ஜின் பெடல் ஷிஃப்டர் உடன் 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் உடன் 118 பிஎச்பி மற்றும் 172 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவைகளாக வழங்கப்படுகின்றன.

புதிய எண்ட்ரீ-லெவல் ட்ரிம் அறிமுகம்.. ஹூண்டாய் வெர்னா செடான் காரை இனி ரூ.9.02 லட்சத்திலேயே வாங்கலாம்

இத்தகைய புதிய வேரியண்ட்களுடன் 2020 வெர்னா ஃபேஸ்லிஃப்ட்டின் தயாரிப்பு பணிகளிலும் ஹூண்டாய் நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டில் சந்தைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் 6 வெளிப்புற பெயிண்ட் தேர்வுகளில் அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

புதிய எண்ட்ரீ-லெவல் ட்ரிம் அறிமுகம்.. ஹூண்டாய் வெர்னா செடான் காரை இனி ரூ.9.02 லட்சத்திலேயே வாங்கலாம்

புதிய ஆரம்ப நிலை இ வேரியண்ட்டின் அறிமுகத்தால் ஹூண்டாய் வெர்னாவிற்கு இதுவரை முக்கிய போட்டியாளராக விளங்கி வந்த நான்காம் தலைமுறை மற்றும் ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டி செடானின் விற்பனை போட்டி தவிர்க்கப்பட்டுள்ளது. அதாவது இனி வெர்னாவிற்கு சிட்டி போட்டி மாடலாக கருதப்படாது.

புதிய எண்ட்ரீ-லெவல் ட்ரிம் அறிமுகம்.. ஹூண்டாய் வெர்னா செடான் காரை இனி ரூ.9.02 லட்சத்திலேயே வாங்கலாம்

ஏனெனில் ஹோண்டா சிட்டியை காட்டிலும் கிட்டத்தட்ட ரூ.27 ஆயிரத்தில் இருந்து ரூ.1.8 லட்சம் வரையிலான மலிவான காராக ஹூண்டாய் வெர்னா மாறியுள்ளது. ஆனால் ஸ்கோடா ரேபிட் மற்றும் டொயோட்டா யாரிஸ் உள்ளிட்ட செடான் கார்கள் தொடர்ந்து வெர்னாவிற்கு விற்பனை போட்டியினை அளிக்கவுள்ளன.

Most Read Articles
English summary
Hyundai Verna E Base Variant Launched In India At Rs 9.02 Lakh: Undercuts Rival By Slight Margin
Story first published: Saturday, October 10, 2020, 2:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X