இந்தியாவில் இருந்து விடைபெறுகிறதா எக்ஸ்சென்ட் காம்பெக்ட்-செடான்? சைலண்டாக நடவடிக்கை எடுத்த ஹூண்டாய்

எக்ஸ்சென்ட் காரை நீக்கம் செய்து ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தை எந்தவொரு அறிவிப்புமின்றி அப்டேட் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் இருந்து விடைபெறுகிறதா எக்ஸ்சென்ட் காம்பெக்ட்-செடான்? சைலண்டாக நடவடிக்கை எடுத்த ஹூண்டாய்

ஹூண்டாயின் காம்பெக்ட் செடான் ரக காரான எக்ஸ்சென்ட் இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், இதன் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் இருந்து விடைபெறுகிறதா எக்ஸ்சென்ட் காம்பெக்ட்-செடான்? சைலண்டாக நடவடிக்கை எடுத்த ஹூண்டாய்

ஹூண்டாயின் இந்த நடவடிக்கைக்கு முக்கிய காரணமாக சந்தையில் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகமான ஹூண்டாய் அவ்ரா இருக்கலாம். ஏனெனில் காம்பெக்ட் செடான் பிரிவில் இந்த கார் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது.

இந்தியாவில் இருந்து விடைபெறுகிறதா எக்ஸ்சென்ட் காம்பெக்ட்-செடான்? சைலண்டாக நடவடிக்கை எடுத்த ஹூண்டாய்

அவ்ராவை அறிமுகப்படுத்தினாலும் ஒருபுறம் எக்ஸ்சென்ட் காரையும் ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்துவந்தது. ஆனால் தற்போது இதன் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சிஎன்ஜி என்ஜின் உடன் பிராண்டின் பொது பயன்பாட்டு வாகனமாக எக்ஸ்சென்ட் தொடர்ந்து கிடைக்கும்.

இந்தியாவில் இருந்து விடைபெறுகிறதா எக்ஸ்சென்ட் காம்பெக்ட்-செடான்? சைலண்டாக நடவடிக்கை எடுத்த ஹூண்டாய்

அதாவது எக்ஸ்சென்ட் ப்ரீமியம் என்ற பெயரில் டாக்சி உள்ளிட்ட கமர்ஷியல் பயன்பாட்டிற்கு அதற்கேற்ற தரத்தில் இந்த செடான் கார் விற்பனை செய்யப்படும். இத்தகைய பயன்பாடுகளில் ஹூண்டாய் எக்ஸ்சென்ட்டிற்கு நேரடி போட்டி காராக மாருதி சுஸுகியின் டிசைர் காம்பெக்ட் செடான் விளங்குகிறது.

இந்தியாவில் இருந்து விடைபெறுகிறதா எக்ஸ்சென்ட் காம்பெக்ட்-செடான்? சைலண்டாக நடவடிக்கை எடுத்த ஹூண்டாய்

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக் காரின் காம்பெக்ட் செடான் வெர்சனாக எக்ஸ்சென்ட் மிக குறைவான காலமே இந்தியாவில் விற்பனையில் இருந்தது. இதில் பிஎஸ்6 தரத்தில் இரு என்ஜின் தேர்வுகள் வழங்கப்பட்டு வந்தன. இதில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 82 பிஎச்பி மற்றும் 114 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

இந்தியாவில் இருந்து விடைபெறுகிறதா எக்ஸ்சென்ட் காம்பெக்ட்-செடான்? சைலண்டாக நடவடிக்கை எடுத்த ஹூண்டாய்

அதுவே 1.2 லிட்டர் டீசல் என்ஜின் 74 பிஎச்பி மற்றும் 190 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்பட்டு வந்தது. இந்த இரு என்ஜின்களுடனும் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து விற்பனையில் இருக்கும் எக்ஸ்சென்ட் ப்ரீமியம் காரில் இதே 1.2 லிட்டர் என்ஜின்கள் தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட சிஎன்ஜி தொகுப்புடன் வழங்கப்படுகின்றன.

இந்தியாவில் இருந்து விடைபெறுகிறதா எக்ஸ்சென்ட் காம்பெக்ட்-செடான்? சைலண்டாக நடவடிக்கை எடுத்த ஹூண்டாய்

இதனால் அதே 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் சிஎன்ஜி மோடில் எக்ஸ்சென்ட் அதிகப்பட்சமாக 65 பிஎச்பி மற்றும் 98 என்எம் டார்க் திறனில் இயங்குகிறது. ஒரு நேரத்தில் ஹூண்டாயின் பிரபலமான காம்பெக்ட் செடான் காராக விளங்கிய எக்ஸ்சென்ட்டிற்கு மாருதி டிசைர் மட்டுமின்றி ஃபோர்டு அஸ்பியர், ஹோண்டா அமேஸ் மற்றும் டாடா டிகோர் போன்ற கார்களும் விற்பனையில் போட்டியினை தந்தன.

Most Read Articles

English summary
Hyundai Xcent Removed From Official Website: Discontinued In India?
Story first published: Tuesday, October 27, 2020, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X