ஆச்சரியத்தில் இந்திய வாகன சந்தை... இந்த நகரத்தில் இப்படி ஒரு விற்பனையா? நம்பவே முடியல...

நான்கு மற்றும் இருசக்கர வாகனங்களின் விற்பனை நம்ப முடியாத அளவிற்கு குறிப்பிட்ட நகரத்தில் உயர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆச்சரியத்தில் இந்திய வாகன சந்தை... இந்த நகரத்தில் இப்படி ஒரு விற்பனையா? நம்பவே முடியல...

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த காலங்களில் வாகன விற்பனை தொடர்ச்சியாக வீழ்ச்சியைச் சந்தித்தது. இந்த நிலையில் இருந்து இந்திய வாகன சந்தையை மீட்டெடுக்கும் விதமாக தற்போது விழாக் காலங்கள் கை கொடுத்து வருகின்றன. இந்த நிலையில், குறிப்பிட்ட நகரம் வாகன விற்பனையில் நம்ப முடியாத அசூர வளர்ச்சியை அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆச்சரியத்தில் இந்திய வாகன சந்தை... இந்த நகரத்தில் இப்படி ஒரு விற்பனையா? நம்பவே முடியல...

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் நகரத்திலேயே வாகன விற்பனை மிக அதிக அளவில் வளர்ச்சியடைந்திருக்கின்றது. இதுகுறித்து, அந்நகரத்தின் ஆட்டோமொபைல்ஸ் அசோசியேஷனின் தலைவர் ஆஷிஸ் பாண்டே கூறியதாவது, "முக்கிய நிறுவனங்களின் வாகனங்கள் ஏற்கனவே விற்று தீர்ந்துவிட்டன. இருப்பினும், தொடர்ந்து வாகனங்களுக்கான புக்கிங் நடைபெற்று வருகின்றது.

ஆச்சரியத்தில் இந்திய வாகன சந்தை... இந்த நகரத்தில் இப்படி ஒரு விற்பனையா? நம்பவே முடியல...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலர் தங்களுக்கான வாகனங்களை புக் செய்து வருகின்றனர். இந்த புதிய வாகனங்களுக்கு காத்திருப்பு காலம் நீடித்திருப்பதை உணர்ந்தும் அவர்கள் புக்கிங்கை செய்து வருகின்றனர். ஆகையால், தீபாவளிக்கு பின்னரும் வாகன விற்பனைச் சூடுபிடித்த காணப்படும் என்று எதிர்பார்ப்பதாக" தெரிவித்தார்.

ஆச்சரியத்தில் இந்திய வாகன சந்தை... இந்த நகரத்தில் இப்படி ஒரு விற்பனையா? நம்பவே முடியல...

மேலும் பேசிய அவர், கடந்த ஆண்டு 3,500 முதல் 4,000 வரையிலான வாகனங்கள் விற்கப்பட்டன. இதேமாதிரியான டிமாண்ட் இந்த ஆண்டும் நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக தன்தேராஸின்போது விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் டூ வீலரின் விற்பனை சற்று பின் தங்கியே உள்ளது. இருப்பினும், அது சூடுபிடித்திருப்பதை உணர முடிவதாக" தெரிவித்தார்.

ஆச்சரியத்தில் இந்திய வாகன சந்தை... இந்த நகரத்தில் இப்படி ஒரு விற்பனையா? நம்பவே முடியல...

"இந்த நிலைக்கு மக்கள் கார்களை நோக்கி நகரத் தொடங்கியிருப்பதாக காரணம் எனவும் அவர் கூறியுள்ளார். அதிலும், எஸ்யூவி ரக கார்களின் விற்பனை அமோகமாக இருப்பதை எங்களால் உணர முடிகின்றது. இதற்கு சந்தையில் விலைக் குறைவாக எஸ்யூவி ரக கார்கள் அறிமுகமாகி வருவதே காரணம் என அவர் குறிப்பிட்டார். எனவேதான், மக்கள் பொது வாகனங்களுக்கு பதிலாக சொந்த வாகனங்களின் பக்கம் நகரத் தொடங்கியிருக்கின்றனர்.

ஆச்சரியத்தில் இந்திய வாகன சந்தை... இந்த நகரத்தில் இப்படி ஒரு விற்பனையா? நம்பவே முடியல...

தொடர்ந்து இருசக்கர வாகன விற்பனைப் பற்றி பாண்டே கூறுகையில், "டான்டெராஸ் நாளில் சுமார் 6,000-7,000 வாகனங்கள் விற்கப்பட்டன. ஆனால், கடந்த ஆண்டு இது சுமார் 10,000 ஆக இருந்தது. பலர் இன்றும், நாளைய தின டெலிவரிக்காவும் இருசக்கர வாகனங்களை முன்பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த விற்பனை விகிதம் குறைவாக இருந்தாலும், கொரோனா காலத்துடன் ஒப்பிடுகையில் வாகன விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியிருப்பதை அறிய முடிகின்றது" என்றார்.

Most Read Articles

English summary
In Bhopal Car & Two-Wheeler Sales In top gear. read In Tamil.
Story first published: Saturday, November 14, 2020, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X