ஹூண்டாய் கார்களை வாங்க இதுதான் சரியான நேரம்...! ரூ.60,000 வரையில் தள்ளுபடிகள் அறிவிப்பு...

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அதன் தயாரிப்பு மாடல்களுக்கு இந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி வரையிலான சலுகைகளை அறிவித்துள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹூண்டாய் கார்களை வாங்க இதுதான் சரியான நேரம்...! ரூ.60,000 வரையில் தள்ளுபடிகள் அறிவிப்பு...

தற்போதைய ஊரடங்கு காலத்தில் விற்பனையில் நல்ல முன்னேற்றத்தை அடைந்துவரும் நிறுவனங்களுள் ஹூண்டாய்யும் ஒன்று. இதற்கு இந்நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகங்களான புதிய க்ரெட்டா மற்றும் வெர்னா மாடல்கள் தான் மிக முக்கிய காரணம்.

ஹூண்டாய் கார்களை வாங்க இதுதான் சரியான நேரம்...! ரூ.60,000 வரையில் தள்ளுபடிகள் அறிவிப்பு...

இருப்பினும் இந்த தென் கொரிய நிறுவனம் அதன் விற்பனை மாடல்களுக்கு சலுகைகள் அறிவிப்பதை மறப்பது இல்லை. இந்த வகையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சலுகையில் வென்யூ மற்றும் சமீபத்திய அறிமுகமான டக்ஸன் தவிர்த்து மற்றவை அனைத்தும் உட்படுகின்றன. இந்த சலுகையை பெறும் ஹூண்டாய் கார்களை வரிசையாக பார்ப்போம்.

ஹூண்டாய் கார்களை வாங்க இதுதான் சரியான நேரம்...! ரூ.60,000 வரையில் தள்ளுபடிகள் அறிவிப்பு...

சாண்ட்ரோ

பிஎஸ்6 தரத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற சாண்ட்ரோ மாடலின் எரா வேரியன்ட்டிற்கு ரூ.15,000 பணம் தள்ளுபடியும், மற்ற வேரியண்ட்களுக்கு ரூ.25,000 பணம் தள்ளுபடியும் இந்த மாதம் முடியும் வரையில் வழங்கப்படவுள்ளன.

ஹூண்டாய் கார்களை வாங்க இதுதான் சரியான நேரம்...! ரூ.60,000 வரையில் தள்ளுபடிகள் அறிவிப்பு...

எக்ஸ்சேன்ச் போனஸ் சாண்ட்ரோவிற்கு ரூ.15,000 அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் கார்ப்ரேட் தள்ளுபடி ரூ.5 ஆயிரமாகும். மொத்தமாக சேர்த்தால் ரூ.35,000-ல் இருந்து ரூ.45,000 வரையிலான சலுகைகளை இந்த ஹூண்டாய் மாடல் பெற்றுள்ளது.

ஹூண்டாய் கார்களை வாங்க இதுதான் சரியான நேரம்...! ரூ.60,000 வரையில் தள்ளுபடிகள் அறிவிப்பு...

இவை தவிர்த்து 3-வருட/ முடிவிலா கிமீ உத்தரவாதம் மற்றும் 3-வருட சாலையோர உதவிகள் உள்ளிட்டவையும் இந்த காருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வருகின்றன. ஹூண்டாய் சாண்ட்ரோவின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.4.57 லட்சத்தில் இருந்து ரூ.6.25 லட்சம் வரையில் உள்ளது.

ஹூண்டாய் கார்களை வாங்க இதுதான் சரியான நேரம்...! ரூ.60,000 வரையில் தள்ளுபடிகள் அறிவிப்பு...

க்ராண்ட் ஐ10

ரூ.5.89 - ரூ.5.99 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற க்ராண்ட் ஐ10 மாடலுக்கு ரூ.40,000 பணம் தள்ளுபடி, ரூ.15,000 எக்ஸ்சேன்ச் போனஸ், ரூ.5,000 கார்ப்ரேட் போனஸ் என மொத்தம் ரூ.60,000 மதிப்பிலான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இவை மட்டுமின்றி அறிமுகத்தில் இருந்தே இந்த காருக்கு 3-வருட/ முடிவிலா கிமீ உத்தரவாதம் மற்றும் ஆர்எஸ்ஏ உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு வருகின்றன.

ஹூண்டாய் கார்களை வாங்க இதுதான் சரியான நேரம்...! ரூ.60,000 வரையில் தள்ளுபடிகள் அறிவிப்பு...

க்ராண்ட் ஐ10 நியோஸ்

க்ராண்ட் ஐ10-ன் நியோஸ் வெர்சனுக்கு மொத்தம் ரூ.25,000 மதிப்பிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ரூ.10,000 பணம் தள்ளுபடி, ரூ.10,000 எக்ஸ்சேன்ச் போனஸ், ரூ.5,000 கார்ப்ரேட் தள்ளுபடி உள்ளிட்டவை அடங்குகின்றன. இவற்றுடன் 3-வருட/ முடிவிலா கிமீ உத்தரவாதம் மற்றும் ஆர்எஸ்ஏ உள்ளிட்டவையும் இந்த நியோஸிற்கு கொடுக்கப்படுகின்றன.

ஹூண்டாய் கார்களை வாங்க இதுதான் சரியான நேரம்...! ரூ.60,000 வரையில் தள்ளுபடிகள் அறிவிப்பு...

எலைட் ஐ20

எலைட் ஐ20 மாடலின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.6.49 லட்சத்தில் இருந்து ரூ.8.30 லட்சம் வரையில் உள்ளது. இந்த ஆகஸ்ட் மாதத்திற்காக இந்த மாடலுக்கு ரூ.15,000 பணம் தள்ளுபடி, ரூ.15,000 எக்ஸ்சேன்ச் போனஸ், ரூ.5,000 கார்ப்ரேட் தள்ளுபடி போன்றவை அறிவிக்கபட்டுள்ளன. மற்ற கார்களை போல் இதற்கும் 3-வருட உத்தரவாதம் , ஆர்எஸ்ஏ போன்றவை ஆரம்பத்தில் இருந்தே உள்ளன.

ஹூண்டாய் கார்களை வாங்க இதுதான் சரியான நேரம்...! ரூ.60,000 வரையில் தள்ளுபடிகள் அறிவிப்பு...

அவ்ரா

ஹூண்டாயின் சமீபத்திய அறிமுகங்களுள் ஒன்றான அவ்ரா செடான் மாடலுக்கு பணம் தள்ளுபடி எதுவும் அறிவிக்கப்படவில்லை. எக்ஸ்சேன்ச் போனஸ் தான் ரூ.15,000 என்ற அளவிலும், ரூ.5,000 மதிப்பிலான கார்ப்ரேட் தள்ளுபடியும் கொடுக்கப்பட்டுள்ளது. ரூ.5.79- ரூ.9.22 லட்சத்தில் விலையினை கொண்டுள்ள இந்த மாடலுக்கு உத்தரவாதம், ஆர்எஸ்ஏ உள்ளிட்டவற்றில் எந்த குறையும் இல்லை.

ஹூண்டாய் கார்களை வாங்க இதுதான் சரியான நேரம்...! ரூ.60,000 வரையில் தள்ளுபடிகள் அறிவிப்பு...

எலண்ட்ரா

ஹூண்டாய் நிறுவனம் எலண்ட்ரா மாடலுக்கு ரூ.30,000 மதிப்பிலான எக்ஸ்சேன்ச் போனஸை மட்டும் தான் அறிவித்துள்ளது. எக்ஸ்ஷோரூமில் ரூ.17.6 லட்சத்தில் இருந்து ரூ.20.65 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகின்ற இந்த செடான் ரக காருக்கு 3-வருட/முடிவிலா கிமீ உத்தரவாதம் மற்றும் ஆர்எஸ்ஏ உள்ளிட்டவையும் கொடுக்கப்படுகின்றன.

ஹூண்டாய் நிறுவனம்,

ஹூண்டாய் கார்களை வாங்க இதுதான் சரியான நேரம்...! ரூ.60,000 வரையில் தள்ளுபடிகள் அறிவிப்பு...

மேற்கூறப்பட்டுள்ள மாடல்களை வாங்கும் மருத்துவ பணியாளர்களுக்கு ரூ.3,000 தள்ளுப்படியையும் வழங்கவுள்ளது. ஏற்கனவே கூறியது விற்பனையில் வளர்ச்சியை கண்டுவந்தாலும் இவ்வாறான சலுகைகளை அறிவித்திருப்பதற்கு ஒரே காரணம் தான், தற்போதைய நிலையை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்ற ஒன்று மட்டுமே.

Most Read Articles

English summary
Hyundai Car Discounts Independence Day Period
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X