புதிய 45 ஏஎம்ஜி வெர்சன்களை பெற்றுவரும் 2020 மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்ஏ சொகுசு கார்..

முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ்-பென்ஸ், ஜிஎல்ஏ மாடலின் புதிய தலைமுறை காரை கடந்த மாதத்தில் நடந்த 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியிருந்தது. இந்நிலையில் ஜிஎல்ஏ மாடல் கார் 45 ஏஎம்ஜி மற்றும் 45 எஸ் ஏஎம்ஜி என்ற இரு விதமான வெர்சன்களில் அறிமுகமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய 45 ஏஎம்ஜி வெர்சன்களை பெற்றுவரும் 2020 மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்ஏ சொகுசு கார்...

வழக்கமான 2.0 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜினுடன் இயங்கவுள்ள ஏ45 ஏஎம்ஜி வெர்சன் கார் அதிகப்பட்சமாக 387 பிஎச்பி பவரை வெளிப்படுத்தவுள்ளது. இதே என்ஜின் எஸ் மாடலில் 421 பிஎச்பியை வெளிப்படுத்தும் வகையில் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

புதிய 45 ஏஎம்ஜி வெர்சன்களை பெற்றுவரும் 2020 மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்ஏ சொகுசு கார்...

இந்த என்ஜின் முந்தைய மாடலில் 480 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தி வந்தது. ஆனால் இந்த இரு புது வெர்சன்களில் இந்த என்ஜின் 500 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக காருக்கு வழங்கவுள்ளது. இந்த இரு என்ஜின்களுடனும் 4மேட்டிக்+ ஆல்-வீல்-ட்ரைவ் சிஸ்டம் மற்றும் 8-ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படவுள்ளது.

புதிய 45 ஏஎம்ஜி வெர்சன்களை பெற்றுவரும் 2020 மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்ஏ சொகுசு கார்...

அதேபோல் இந்த இரு மாடல்களும் 0-லிருந்து 100kmph என்ற வேகத்தை வெறும் 4.3 வினாடிகளில் அடைந்துவிடும் விதத்திலான என்ஜின் அமைப்பை பெற்றுள்ளன. இவை இரண்டின் அதிகப்பட்ச வேகம் 250kmph என கூறப்படுகிறது. ஆனால் ஸ்பெஷல் பேக்கேஜ்களினால் 270kmph வேகம் வரை அதிகப்பட்சமாக இந்த இரு புதிய வெர்சன் கார்கள் சென்றாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை.

புதிய 45 ஏஎம்ஜி வெர்சன்களை பெற்றுவரும் 2020 மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்ஏ சொகுசு கார்...

35 ஏஎம்ஜி என்ஜின்களை போல் இல்லாமல் இந்த புதிய என்ஜின்கள் நேர்மாறாக 4-சிலிண்டர் அமைப்பை கொண்டுள்ளதால் புதிய ஜிஎல்ஏ மாடல் 180 டிகிரியில் எளிதாக திரும்பும். இதன் அர்த்தம், டர்போசார்ஜர் மற்றும் எக்ஸாஸ்ட் அமைப்பு தற்போது காரின் பின்புறத்திற்கு அடியில் பொருத்தப்பட்டுள்ளது என்பதாகும்.

புதிய 45 ஏஎம்ஜி வெர்சன்களை பெற்றுவரும் 2020 மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்ஏ சொகுசு கார்...

மேலும் புகை வெளிவரும் குழாய் குறைவான நீளத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளதால் காரின் முன்புறம் காற்றின் திசைக்கு ஏற்ப செயல்படும். புதிய ட்வின்-ஸ்க்ரோல் டர்போசார்ஜர் 169000 ஆர்பிஎம் வரையில் சுழலக்கூடியது. மேலும் எலக்ட்ரானிக்கல் கண்ட்ரோல் வேஸ்ட்கேட் உடன் 2.1 பார் சார்ஜ் அழுத்தத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

புதிய 45 ஏஎம்ஜி வெர்சன்களை பெற்றுவரும் 2020 மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்ஏ சொகுசு கார்...

மேலும் ஜிஎல்ஏ மாடலின் இந்த இரு வெர்சன்களில் ரேஸ்-ஸ்டார்ட் செயல்பாடு புதியதாக கொண்டுவரப்பட்டுள்ளதால் அதிகப்பட்ச முடுக்கத்தை ட்ராக் ஸ்ட்ரிப் மூலமாக பெற முடியும். இதனுடன் வழக்கமான ட்ரைவிங் மோட்களும் இந்த புது வெர்சன் கார்களில் உள்ளன.

புதிய 45 ஏஎம்ஜி வெர்சன்களை பெற்றுவரும் 2020 மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்ஏ சொகுசு கார்...

மற்ற ஹார்ட்வேர் பாகங்களாக ஏஎம்ஜி ரைட் கண்ட்ரோல் சஸ்பென்ஷன் செட்அப், மோனோப்ளோக் ப்ரேக்குகள், எலக்ட்ரோமெக்கானிக்கல் பவர் ஸ்டேரிங், வலுவான வெளிப்புற பேனல்கள் மற்றும் ட்ரைவிங் மோட்களை அதிக எண்ணிக்கையில் மாற்றுவதற்கு ஏஎம்ஜி டைனாமிக் தேர்ந்தெடுப்பான் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

புதிய 45 ஏஎம்ஜி வெர்சன்களை பெற்றுவரும் 2020 மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்ஏ சொகுசு கார்...

அகலமான சக்கர அச்சுக்களை கொண்டுள்ள ஜிஎல்ஏ 45 மாடல் கார் ஏஎம்ஜி க்ரில் மற்றும் பெரிய ஏர் இண்டேக் போன்றவற்றையும் கொண்டுள்ளது. முந்தைய மாடலில் 20 இன்ச்சில் இருந்த அலாய் சக்கரங்கள் இந்த வெர்சன்களில் 21 இன்ச் என்ற அளவிற்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளன.

புதிய 45 ஏஎம்ஜி வெர்சன்களை பெற்றுவரும் 2020 மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்ஏ சொகுசு கார்...

காரின் பின்புறம் ட்வின் எக்ஸாஸ்ட் டிப்களுடன் விபத்திலிருந்து காரை பாதுகாக்கும் தடுப்பானை பெற்றுள்ளது. உட்புறத்தில் புதிய ஏஎம்ஜி வெர்சனால் இருக்கை மற்றும் ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவை அப்டேட் செய்யப்பட்டுள்ளன. ஏஎம்ஜி என்ற பேட்ஜ் உள்ளே சில பாகங்களிலும் வழங்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, March 2, 2020, 11:38 [IST]
English summary
India-bound Mercedes-Benz GLA gets more potent versions
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+