ஆரம்பநிலை லக்சூரி கார்களும் - அதன் விலையும்... இந்த விலையில் இந்தியாவில் சொகுசு காரா? நம்பவே முடியல!

இந்தியாவில் விற்கப்படும் லக்சூரி கார்களில் குறைந்த விலைக் கொண்ட சொகுசு கார்களின் பட்டியலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஆரம்பநிலை லக்சூரி கார்களும் - அதன் விலையும்... இந்த விலையில் இந்தியாவில் சொகுசு காரா? நம்பவே முடியல!!

அண்மைக் காலங்களாக இந்தியர்கள் மத்தியில் சொகுசு வாகனங்கள் மீதான மோகம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியர்களின் இந்த மனநிலையை அறிந்த வாகன உற்பத்தி நிறுவனங்கள் வாகன பிரியர்களின் தேவைக்கேற்ப சொகுசு வசதிகளை புதுமுக தயாரிப்புகளில் அறிமுகப்படுத்தி வருகின்றன. தொடர்ந்து சொகுசு வாகன உற்பத்தி நிறுவனங்களும் அதன் பங்காக குறைந்த விலை சொகுசு கார்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி வருகின்றன.

ஆரம்பநிலை லக்சூரி கார்களும் - அதன் விலையும்... இந்த விலையில் இந்தியாவில் சொகுசு காரா? நம்பவே முடியல!!

அந்தவகையில், இந்தியாவில் குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் லக்சூரி கார்கள் பற்றிய தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். ஆடி நிறுவனம் முதல் வால்வோ வரையிலான பல்வேறு நிறுவனங்களின் 8 விலைக் குறைந்த சொகுசு கார்களைப் பற்றிய தகவலை இங்கு வழங்கியுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

ஆரம்பநிலை லக்சூரி கார்களும் - அதன் விலையும்... இந்த விலையில் இந்தியாவில் சொகுசு காரா? நம்பவே முடியல!!

ஆடி க்யூ2:

விலை: ரூ. 34.99 லட்சங்கள் முதல் ரூ. 48.89 லட்சங்கள் வரை

ஆடி நிறுவனம் இந்த காரை மிக சமீபத்தில்தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இது ஓர் எஸ்யூவி ரக காராகும். இதன் விலை ரூ. 34.99 லட்சங்கள் ஆகும். இது ஆடி க்யூ2 மாடலின் ஆரம்பநிலை வேரியண்டின் விலையாகும். இதன் உயர் ரக மாடலின் விலை ரூ. 48.89 லட்சங்கள் ஆகும். இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே. இந்த விலையில் பல்வேறு சொகுசு வசதிகளை இக்கார் வழங்குகின்றது.

ஆரம்பநிலை லக்சூரி கார்களும் - அதன் விலையும்... இந்த விலையில் இந்தியாவில் சொகுசு காரா? நம்பவே முடியல!!

இந்த எஸ்யூவி காரில் ஆடி நிறுவனம் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜினை வழங்குகின்றது. இது 193 பிஎஸ் மற்றும் 320 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது ஆகும்.

ஆரம்பநிலை லக்சூரி கார்களும் - அதன் விலையும்... இந்த விலையில் இந்தியாவில் சொகுசு காரா? நம்பவே முடியல!!

பிஎம்டபிள்யூ எக்ஸ்1

விலை: ரூ. 35.90 லட்சங்கள் முதல் ரூ. 38.70 லட்சங்கள் வரை

பிஎம்டபிள்யூ நிறுவனம் விற்பனை செய்யும் ஆரம்பநிலை எஸ்யூவி கார்களிலேயே எக்ஸ்1 மாடலே முதன்மையான மாடலாக இருக்கின்றது. இக்காரை ரூ. 35.90 லட்சங்கள் என்ற விலையில் பிஎம்டபிள்யூ விற்பனைச் செய்து வருகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இக்கார் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் ஆகிய இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ஆரம்பநிலை லக்சூரி கார்களும் - அதன் விலையும்... இந்த விலையில் இந்தியாவில் சொகுசு காரா? நம்பவே முடியல!!

இதில், பெட்ரோல் எஞ்ஜின் 195 பிஎஸ் பவரையும், 280 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. அதேசமயம் டீசல் எஞ்ஜின் 193 பிஎஸ் மற்றும் 400 என்எம் டார்க்கை வெளியேற்றுகின்றது. இந்த காரின் அதிகபட்ச விலை ரூ. 38.70 லட்சங்கள் ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

ஆரம்பநிலை லக்சூரி கார்களும் - அதன் விலையும்... இந்த விலையில் இந்தியாவில் சொகுசு காரா? நம்பவே முடியல!!

மினி கன்ட்ரிமேன்

விலை: ரூ. 38.50 லட்சங்கள் முதல் ரூ. 42.40 லட்சங்கள் வரை

மினி நிறுவனத்தின் முதல் க்ராஸோவர் எஸ்யூவி காரே இந்த கன்ட்ரிமேன். இது இந்தியாவில் இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. கூப்பர் எஸ் மற்றும் கூப்பர் எஸ் ஜேசிடபிள்யூ மாடலை தழுவிய வேரியண்ட் ஆகியவை ஆகும். இக்காரின் ஆரம்ப விலை ரூ. 38.50 லட்சங்களாக இருக்கின்றது. இதே காரின் உயர்நிலை வேரியண்டின் விலை ரூ. 42.40 லட்சங்கள் ஆகும்.

ஆரம்பநிலை லக்சூரி கார்களும் - அதன் விலையும்... இந்த விலையில் இந்தியாவில் சொகுசு காரா? நம்பவே முடியல!!

இக்காரில் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 மாடலில் காணப்படும் அதே 2.0 லிட்டர் டர்போ எஞ்ஜினேப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது, 195 பிஎஸ் மற்றும் 280 என்எம் டார்க்கை வெளியேற்றும். இதுதவிர பல்வேறு சொகுசு வசதிகளை இக்கார் உள்ளடக்கிக் கொண்டிருக்கின்றது.

ஆரம்பநிலை லக்சூரி கார்களும் - அதன் விலையும்... இந்த விலையில் இந்தியாவில் சொகுசு காரா? நம்பவே முடியல!!

பிஎம்டபிள்யூ 2 செரீஸ் கிரான் கூபே

விலை: ரூ. 39.30 லட்சங்கள் முதல் ரூ. 41.40 லட்சங்கள் வரை

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் லேட்டஸ்ட் அறிமுகமாக இக்கார் இருக்கின்றது. இக்காரே தற்போது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின்கீழ் விற்பனைக்குக் கிடைக்கும் விலைக் குறைந்த லக்சூரி காராகும். இக்காருக்கு ஆரம்ப விலையாக ரூ. 39.30 லட்சத்தை அது நிர்ணயித்துள்ளது. அதேசமயம், இதன் அதிகபட்ச விலை ரூ. 41.40 லட்சங்கள் ஆகும். இவை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே.

ஆரம்பநிலை லக்சூரி கார்களும் - அதன் விலையும்... இந்த விலையில் இந்தியாவில் சொகுசு காரா? நம்பவே முடியல!!

பிஎம்டபிள்யூ 3 செரீஸ்

விலை: ரூ. 41.70 லட்சங்கள் முதல் ரூ. 47.50 லட்சங்கள் வரை

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றே இந்த 3 செரீஸ். இரு விதமான எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும் இக்காரின் ஆரம்பி விலை ரூ. 41.70 லட்சங்கள் ஆகும். அதே சமயம் இதன் உயர்நிலை வேரியண்டின் விலை ரூ. 47.50 லட்சங்கள் ஆகும்.

ஆரம்பநிலை லக்சூரி கார்களும் - அதன் விலையும்... இந்த விலையில் இந்தியாவில் சொகுசு காரா? நம்பவே முடியல!!

மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ்

விலை: ரூ. 41.31 லட்சங்கள் முதல் ரூ. 51.76 லட்சங்கள் வரை

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 3 செரீஸ் மாடலுக்கு போட்டியளிக்கும் வகையில் இந்த சி கிளாஸ் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இக்கார், ரூ. 41.31 லட்சம் முதல் 51.76 லட்சம் வரையிலான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். பன்முக தேர்வில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. சொகுசு அம்சம் மற்றும் எஞ்ஜின் தேர்வுகளின் அடிப்படையில் இதன் விலை உயர்வு நிர்ணயிக்கப்படுகின்றது.

ஆரம்பநிலை லக்சூரி கார்களும் - அதன் விலையும்... இந்த விலையில் இந்தியாவில் சொகுசு காரா? நம்பவே முடியல!!

ஜாகுவார் எக்ஸ்இ

விலை: ரூ. 46.64 லட்சங்கள் முதல் ரூ. 48.50 லட்சங்கள் வரை.

ஜாகுவார் எக்ஸ்இ, இந்த காரும் பிஎம்டபிள்யூ 3 செரீஸ் மாடலின் போட்டியாளன் ஆகும். இது பென்ஸ் சி கிளாஸ்க்கும் போட்டியை வழங்குகின்றது. இக்கார் தற்போது இரு விதமான ட்ரிம்களில் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ரூ. 46.64 லட்சங்கள் முதல் 48.50 லட்ச ரூபாய் வரையிலான விலையில் இது விற்கப்பட்டு வருகின்றது.

ஆரம்பநிலை லக்சூரி கார்களும் - அதன் விலையும்... இந்த விலையில் இந்தியாவில் சொகுசு காரா? நம்பவே முடியல!!

வால்வோ எக்ஸ்சி40

விலை: ரூ. 39.90 லட்சம்.

இந்தியாவில் எக்ஸ்சி40 ஒற்றை தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. டி4 ஆர் எனும் டிசைனில் அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் விலை ரூ. 39.90 லட்சங்கள் ஆகும். இது ஓர் லக்சூரி க்ராஸோவர் எஸ்யூவி காராகும். இதில், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது. அதிகபட்சமாக 193 பிஎஸ் மற்றும் 300 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

Most Read Articles

English summary
India's Low Budget Luxury Cars List. Read In Tamil.
Story first published: Wednesday, November 11, 2020, 14:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X