இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் இது நடக்கும்... சந்தோஷமான செய்தியை சொன்ன மத்திய அமைச்சர்...

அடுத்த 5 ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மையமாக இந்தியா மாறும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் இது நடக்கும்... சந்தோஷமான செய்தியை சொன்ன மத்திய அமைச்சர்...

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க, மத்திய அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தால், இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னை குறையும். தலைநகர் டெல்லி உள்பட இந்தியாவின் பல்வேறு நகரங்கள் தற்போது காற்று மாசுபாடு பிரச்னையால் தவித்து வருகின்றன.

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் இது நடக்கும்... சந்தோஷமான செய்தியை சொன்ன மத்திய அமைச்சர்...

இதற்கு பெட்ரோல், டீசல் வாகனங்களே மிக முக்கியமான காரணமாக உள்ளன. ஆனால் இந்த பிரச்னைக்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் நல்ல தீர்வாக இருக்கும். மேலும் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்கும் எலெக்ட்ரிக் வாகனங்கள் உதவும். உலகில் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக மிகவும் அதிகமாக செலவு செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் இது நடக்கும்... சந்தோஷமான செய்தியை சொன்ன மத்திய அமைச்சர்...

இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் தோராயமாக 85 சதவீதம் இறக்குமதியின் மூலமாகதான் பூர்த்தி செய்யப்படுகிறது. இது பொருளாதார ரீதியில் பிரச்னைகளை உண்டாக்குகிறது. இந்த பிரச்னைக்கும் கூட எலெக்ட்ரிக் வாகனங்கள் நல்ல தீர்வாக இருக்கும். எனவேதான் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில், பிரதமர் நரேந்திர மோடியே மிகவும் ஆர்வமாக உள்ளார்.

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் இது நடக்கும்... சந்தோஷமான செய்தியை சொன்ன மத்திய அமைச்சர்...

பிரதமர் நரேந்திர மோடியை போல், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரியும், எலெக்ட்ரிக் மற்றும் உயிரி எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க முயற்சி செய்து வருகிறார். இந்த வாகனங்களின் முக்கியத்துவத்தை அவர் மிக நீண்ட காலமாகவே எடுத்துரைத்து வருகிறார்.

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் இது நடக்கும்... சந்தோஷமான செய்தியை சொன்ன மத்திய அமைச்சர்...

இந்த சூழலில், அடுத்த 5 ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மையமாக இந்தியா மாறும் என நிதின் கட்கரி கூறியுள்ளார். அத்துடன் எலெக்ட்ரிக் வாகன துறைக்கு முடிந்த வரை சிறப்பான சலுகைகளை வழங்குவதற்கு அரசு முயன்று வருவதாகவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மேலும் எலெக்ட்ரிக் வாகன துறை சந்தித்து வரும் பிரச்னைகள் பற்றி தனக்கு தெரியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் இது நடக்கும்... சந்தோஷமான செய்தியை சொன்ன மத்திய அமைச்சர்...

இருந்தாலும் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும்போது நிலைமை மாறும் என்ற நம்பிக்கை தனக்கு இருக்கிறது என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனை எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால், இந்தியாவில் தற்போதைய நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை மிகவும் சொற்பமே.

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் இது நடக்கும்... சந்தோஷமான செய்தியை சொன்ன மத்திய அமைச்சர்...

எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகம், சார்ஜிங் ஸ்டேஷன்களின் பற்றாக்குறை போன்ற பிரச்னைகள், எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் முடிவை எடுப்பதில் இருந்து மக்களை தள்ளி வைக்கின்றன. இந்த சூழலை புரிந்து கொண்டுள்ள மத்திய அரசு, இப்படிப்பட்ட பிரச்னைகளை தீர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் இது நடக்கும்... சந்தோஷமான செய்தியை சொன்ன மத்திய அமைச்சர்...

பெட்ரோலிய எரிபொருட்கள் குறைந்த அளவே இருப்பதால், மாற்று ஆற்றல் மூலங்களை பயன்படுத்துவதை நிதின் கட்கரி பாராட்டியுள்ளார். இந்த வகையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் உயிரி எரிபொருட்கள் இந்தியாவிற்கான நல்ல மாற்று எரிபொருளாக இருக்கும் என நான் கருதுகிறேன் என நிதின் கட்கரி கூறியுள்ளார்.

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் இது நடக்கும்... சந்தோஷமான செய்தியை சொன்ன மத்திய அமைச்சர்...

இந்த அதனை ஏற்றுக்கொண்டு மாற்று எரிபொருளுக்கு மாற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளும் எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் இது நடக்கும்... சந்தோஷமான செய்தியை சொன்ன மத்திய அமைச்சர்...

இந்த வகையில் ஜெர்மனியில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் இங்கிலாந்து அரசோ, பெட்ரோல், டீசல் கார்களை கொடுத்து விட்டு, எலெக்ட்ரிக் கார்களை வாங்குபவர்களுக்கு, இந்திய மதிப்பில் 5.70 லட்ச ரூபாயை வழங்க திட்டமிட்டு வருகிறது.

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் இது நடக்கும்... சந்தோஷமான செய்தியை சொன்ன மத்திய அமைச்சர்...

இந்த தொகையை மானியமாக வழங்க இங்கிலாந்து அரசு திட்டமிட்டு வருவதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாயின. எதிர்கால உலகை எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் ஆளப்போகின்றன என்பதை உலக நாடுகளின் இத்தகையை நடவடிக்கைகள் மூலமாக புரிந்து கொள்ள முடிகிறது.

Most Read Articles

English summary
India To Become EV Manufacturing Hub In 5 Years - Union Minister Nitin Gadkari. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X