பனி சிதைவில் சிக்கிய மஹிந்திரா பொலிரோ.. கடும் குளிரை பொருட்படுத்தாமல் உதவி கரம் நீட்டிய ராணுவம்!

மூன்று பயணிகளுடன் பனி சிதைவில் சிக்கிய மஹிந்திரா பொலிரோ காரை, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இந்திய இராணுவப் படையினர் மீட்டெடுத்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

பனி சிதைவில் சிக்கிய மஹிந்திரா பொலிரோ.. கடும் குளிரை பொருட்படுத்தாமல் உதவி கரம் நீட்டிய ராணுவம்!

மஹிந்திரா நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார்களில் ஒன்று பொலிரோ. எம்யூவி ரகத்திலான இந்த காருக்கு பொதுமக்கள் மற்றும் அரசு தரப்பில் அமோகமான வரவேற்பு நிலவுகின்றது. குறிப்பாக, இந்த காரை பொதுமக்களைக் காட்டிலும் காவல்துறை மற்றும் இந்திய ராணுவத்துறையினர் அதிகம் பயன்படுத்துகின்றனர். அரசு அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்காக இந்த ரக வாகனங்களையே அரசு வழங்கி வருகின்றது.

பனி சிதைவில் சிக்கிய மஹிந்திரா பொலிரோ.. கடும் குளிரை பொருட்படுத்தாமல் உதவி கரம் நீட்டிய ராணுவம்!

எம்யூவி ரகத்திலான வாகனங்கள், ஆஃப் ரோடு மற்றும் ஆன் ரோடில் இயங்குவதற்கு ஏற்ப கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் எஞ்ஜின் திறனைப் பெற்றிருக்கின்றன. குறிப்பாக, மலை மற்றும் அடர்ந்த வனப் பகுதிகளின் கரடு, முரடான பாதையில் பயணிப்பதற்கு ஏற்ற திறனை அவைப் பெற்றிருக்கின்றன.

பனி சிதைவில் சிக்கிய மஹிந்திரா பொலிரோ.. கடும் குளிரை பொருட்படுத்தாமல் உதவி கரம் நீட்டிய ராணுவம்!

இதன் காரணத்தினாலயே, அரசு அதன் ஊழியர்களுக்கு இந்த ரக வாகனங்களை பரிந்துரைத்து வருகின்றன.

இந்நிலையில், மஹிந்திரா நிறுவனத்தின் இந்த சிறப்பு வாய்ந்த பொலிரோ எம்யூவி கார் பனிச் சிதைவில் சிக்கியதைப் போன்ற வீடியோக்காட்சி ஒன்று டுவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதள பக்கங்களில் வைரலாக பரவி வருகின்றது.

பனி சிதைவில் சிக்கிய மஹிந்திரா பொலிரோ.. கடும் குளிரை பொருட்படுத்தாமல் உதவி கரம் நீட்டிய ராணுவம்!

அந்த கார், குபாவார மாவட்ட வருவாய் கோட்டாட்சியரின் (Sub District Magistrate)அதிகாரப்பூர்வ வாகனம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அந்த காரில் கோட்டாட்சியர் உட்பட கர்நாஹ் பகுதியைச் சேர்ந்த இருவர் பயணித்துள்ளனர். அவர்களும் அரசு பணியாளர்கள் ஆவர்.

பனி சிதைவில் சிக்கிய மஹிந்திரா பொலிரோ.. கடும் குளிரை பொருட்படுத்தாமல் உதவி கரம் நீட்டிய ராணுவம்!

இவர்கள் வட காஷ்மீரின் கடும் குளிர் பிரதேசமான அவலாஞ்சி என்னும் பகுதியில் பயணித்துக் கொண்டிருக்கும்போதே இந்த விபத்து சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த இந்திய இராணுவ படையினர், காருக்குள் சிக்கியவாறு உயிருக்காக போராடிக் கொண்டிருந்த கோட்டாட்சியர் மற்றும் அவருடன் பயணித்த இருவரையும் சில மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்டனர்.

பனி சிதைவில் சிக்கிய மஹிந்திரா பொலிரோ.. கடும் குளிரை பொருட்படுத்தாமல் உதவி கரம் நீட்டிய ராணுவம்!

நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் இந்த சம்பவம் அரங்கேறியதாக கூறப்படுகின்றது. அதிர்ஷ்டவசமாக சிறு சிறு காயங்களுடன் எஸ்டிஎம், பிலால் மோஹி-அஸ்-தின் மற்றும் உடன் பயணித்தவர்களும் மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அவலாஞ்சிக்கு செல்லும் பாதையில் சில மணி நேரங்கள் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

பனி சிதைவில் சிக்கிய மஹிந்திரா பொலிரோ.. கடும் குளிரை பொருட்படுத்தாமல் உதவி கரம் நீட்டிய ராணுவம்!

பின்னர், இராணுவ படையினர் அந்த காரை அகற்றி சாலை போக்குவரத்து சீரமைத்தனர்.

தற்போது, இந்தியாவின் பல பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. ஆனால், அவிலாஞ்சி போன்ற குளிர்பிரதேசங்களில் பனி இன்னும் ஓயாமல் பொழிந்துக் கொண்டிருக்கின்றது.

பனி சிதைவில் சிக்கிய மஹிந்திரா பொலிரோ.. கடும் குளிரை பொருட்படுத்தாமல் உதவி கரம் நீட்டிய ராணுவம்!

அதேசமயம், கால நிலை மாற்றம் காரணமாக சில பகுதிகளில் இம்மாதிரியான பனிச் சரிவு ஏற்பட்டு வருகின்றது. எனவே, காஷ்மீரில் இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறிய வண்ணம் இருக்கின்றது.

இந்த நிலையிலேயே வருவாய் கோட்டாட்சியரின் மஹிந்திரா பொலிரோ கார் பனிச் சரிவில் சிக்கியது.

பனி சிதைவில் சிக்கிய மஹிந்திரா பொலிரோ.. கடும் குளிரை பொருட்படுத்தாமல் உதவி கரம் நீட்டிய ராணுவம்!

இவர் அரசு அதிகாரிகளுடன் இணைந்து கொரோனா வைரஸ் பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றது என்று ஆய்வு செய்வதாக கூறப்படுகின்றது. அப்போதே, இந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.

பனி சரிவு விபத்தால் காரின் மேற்கூரை கடுமையாக சேதமடைந்துள்ளது. அதுமட்டுமின்றி முன்பக்க கண்ணாடியும் நொறுங்கியிருக்கின்றது.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், "அதிகாரிகள் அதிர்ஷ்டசாலிகள். பனி சரிவின் பக்கவாட்டிலேயே அவர்கள் சிக்கினார்கள். அதன் மையப் பகுதியில் இருந்தால் குறைந்தது 500 அடி ஆழத்திற்குள் அவர்களின் கார் விழுந்திருக்கும். மேலும், பனிச் சரிவும் ஏற்பட்டதால், அதனை மீட்பது இயலாத காரியமாக மாறியிருக்கும்" என அச்சத்துடன் தெரிவித்தனர்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 25, 2020, 18:28 [IST]
English summary
Indian Army Rescued Sub District Magistrate From Snow. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+