தடை செய்யப்பட்ட காரை பல கோடி மதிப்பில் வாங்கிய இந்தியர்... பதிவு செய்ய முடியுமால் தவிப்பு...!
இந்தியாவின் பெரும் முதலாளிகளில் ஒருவரான யோஹன் பூனவல்லா இரு விலையுயர்ந்த கார்களை புதிதாக களமிறக்கியுள்ளார். பல கோடி மதிப்பில் வாங்கப்பட்ட இரு கார்களில் ஒன்று இந்திய சாலைகளில் இயக்குவதற்கு அனுமதி இல்லாத ஒன்று என்று கூறப்படுகின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவில் பட்ஜெட் ரக வாகனங்களுக்கு இணையாக சொகுசு மற்றும் விலையுயர்ந்த ஆடம்பர ரக கார்களும் அதிகளவில் விற்பனையாகி வருகின்றன. இதற்கு, அண்மைக் காலங்களாக உயர்ந்து வரும் சொகுசு கார்களின் விற்பனை விகிதமே முக்கிய சான்றாக இருக்கின்றது.

இத்துடன், நாட்டில் உள்ள பெரும் முதலாலிகளின் வாகன நிறுத்துமிடமும் ஓர் முக்கிய சான்றாக இருக்கின்றது. அவர்களிடத்தில் ஒன்றிற்கு பல எண்ணிக்கையிலான விலையுயர்ந்த கார்கள் இருப்பதை நம்மால் காண முடிகின்றது.
குறிப்பாக நாட்டின் மிக முக்கிய செல்வந்தர்களான அம்பானி குடும்பத்தினர் மற்றும் சில பிரபலங்கள் ஒவ்வொரு வருடமும் புத்தாண்டை புதிய பொருளுடன் துவங்கும் வகையில் விலையுயர்ந்த கார்களை தங்கள் வசப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், 2020ம் ஆண்டை முன்னிட்டு சமீபத்தில் வாங்கிய அதிக விலைக்கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் கார் அம்பானியின் கான்வாயில் இணைக்கப்பட்டது. இந்த கார் அவர் வசம் வைத்துள்ள மற்ற கார்களைக் காட்டிலும் அதிக விலைக் கொண்டதாக காட்சியளிக்கின்றது.

இந்நிலையில், நாட்டின் மற்றுமொரு முக்கிய செல்வந்தர்களில் ஒருவராக காட்சியளிக்கும் யோஹன் பூனவல்லா-வும் அம்பானி குடும்பத்தினரைப் போன்று புத்தாண்டை முன்னிட்டு புதிதாக இரு விலையுயர்ந்த கார்களை அவரது கராஜில் இணைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த புகைப்படத்தை டீம் பிஎச்பி தளம் வெளியிட்டுள்ளது.

ஃபெர்ராரி நிறுவனத்தின் அதிக விலைக் கொண்ட ஸ்போர்ட்ஸ் மற்றும் சொகுசு கார்களாக கருதப்படும் போர்டோஃபினோ மற்றும் போலரிஸ் ஸ்லிங்ஷாட் ஆகிய இரு கார்களைதான் யோஹன் பூனவல்லா வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவரிடத்தில் ஏற்கனவே பல விலையுயர்ந்த கார்கள் இருக்கின்றன. அதில், பேட்மொபைல் ரகத்திலான மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் கார் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று.

இந்த நிலையிலேயே ஃபெர்ராரியின் விலையுயர்ந்த மற்றும் கவர்ச்சியான இரு கார்கள் புதிதாக களமிறக்கப்பட்டுள்ளன. இதில், ஆரம்பநிலை மாடலாக காட்சியளிக்கும் ஃபெர்ராரி போர்ட்ஃபினோ இந்தியாவில் ரூ. 3.5 கோடி என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது. இது, எக்ஸ்-ஷோரூம் விலையாகும். ஆகையால், சொகுசு வசதிகள் மற்றும் வரி கூட்டப்பட்டு ஆன்ரோடில் கிடைக்கும்போது அது ரூ. 4 கோடியையும் தாண்டிவிடும்.

இந்த காரை ஃபெர்ராரி நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டுதான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதனை, ஃபெர்ராரி நிறுவனத்தின் 70ம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு மாடலாக இத்தாலியில் நடைபெற்ற நிகழ்வின்போதே அந்நிறுவனம் முதல் முறையாக அறிமுகம் செய்தது. இந்த போர்ட்ஃபினோ என்ட்ரீ லெவல் காரை அதன் ஐகானிக் மாடல் என்று அழைக்கப்படும் கலிஃபோர்னியாவை ரீபிளேஸ் செய்யும் விதமாக ஃபெர்ராரி அறிமுகம் செய்தது.

கலிஃபோர்னியா காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே எஞ்ஜின்தான் இந்த போர்ட்ஃபினோ காரிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனாலயே கலிஃபோர்னியா இடத்தை நிரப்பும் மாடலாக அது காட்சியளிக்கின்றது. இருப்பினும், இது சற்று அதிகமான திறனை வெளிப்படுத்துகின்ற வகையில் ட்யூன்-அப்பை பெற்றிருக்கின்றது. ஆகையால், கலிஃபோர்னியாவில் காணப்பட்டதைக் காட்டிலும் அதிக திறனை வெளிப்படுத்தும் திறனை அது பெற்றிருக்கின்றது.

இந்த காரில் 3.9 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் வி8 எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 600 பிஎஸ் பவரையும், 760 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இந்த திறனானது 0த்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தை 3.5 செகண்டுகளிலேயே தொட உதவும். இது அதிகபட்சமாக மணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லும் திறனைப் பெற்றிருக்கின்றது. இது, இந்தியாவில் தடை செய்யப்பட்ட வேகம் ஆகும்.

இதேபோன்று, பூனவல்லாவின் கராஜை அலங்கரித்துள்ள மற்றுமொரு சிறப்பு வாய்ந்த காராக போலரிஸ் ஸ்லிங்ஷாட் இருக்கின்றது. இந்த காரை இந்திய சாலைகளில் இயக்குவதற்கு அனுமதியில்லை. இந்த கார் போர்ட்ஃபினோவைக் காட்டிலும் அதிக வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டுள்ளது. இதனாலேயே இந்த காரை இன்றளவும் அவரால் ஆர்டிஓ-வில் பதிவு செய்ய முடியவில்லை. இந்த கார் ரூஃப் இல்லாத மூன்று சக்கர தேர்வில் பந்தயங்களில் பயன்படுத்துவதற்கும் கிடைக்கின்றது.

குறிப்பாக, இந்த காரின் அதீத திறன் பந்தயங்களில் பயன்படுத்துவதற்கு ஏதுவானதாக இருக்கின்றது. இதுபோன்ற காரணத்தினாலயே அதிக சக்தி கொண்ட இந்த காரை இந்திய சாலைகளில் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கு இந்திய சாலைகளும் ஒத்திசைக்காது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஃபெர்ராரி போலரிஸ் ஸ்லிங்ஷாட் காரில் 173 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறனைக் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது சாலையில் செல்லும்போது சிறிய ரக ஜெட் விமானம் சீறிப் பாய்வதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும். அந்தவகையில் மின்னல் வேகத்தில் இந்த கார் செல்லக்கூடிய திறனைப் பெற்றிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








